'புளியந்தோப்பு டூ எட்டயபுரம்'... 600 கி.மீ பயணித்த 'கல்யாணப்'பெண்... ஒட்டுமொத்த குடும்பத்துக்கும் 'காத்திருந்த' பேரதிர்ச்சி!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சென்னை புளியந்தோப்பில் இருந்து தூத்துக்குடியில் உள்ள எட்டயபுரத்துக்கு மணமகள் உள்ளிட்ட 5 பேர் பயணம் செய்தனர்.

Advertising
Advertising

சென்னை புளியந்தோப்பை சேர்ந்த 23 வயது பெண் ஒருவருக்கும் தூத்துக்குடி எட்டயபுரம் பகுதியை சேர்ந்த 26 வயது வாலிபர் ஒருவருக்கும் அடுத்த மாதம் 7-ம் தேதி திருமணம் நடைபெற இருந்தது. இதற்காக மணமகள் உள்ளிட்ட 5 பேர் சென்னையில் இருந்து தூத்துக்குடி வந்தனர். தூத்துக்குடி மாவட்ட எல்லையான எட்டயபுரம் அருகே மேலக்கரந்தை சோதனைச்சாவடியில் வந்தபோது, மணப்பெண் உள்ளிட்ட 5 பேருக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.

பின்னர் அவர்கள் 5 பேரும் எட்டயபுரம் பகுதியில் உள்ள அவர்களின் பூர்வீக வீட்டில் தனிமைப்படுத்தப் பட்டனர். இதற்கிடையே மணப்பெண்ணுக்கு பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து அவர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அவருடன் உடன் வந்த அவரது உறவினர்களும் தற்போது தனிமைப்படுத்தப்பட்டு இருக்கின்றனர். இதையடுத்து 7-ம் தேதி நடைபெறுவதாக இருந்த அவரது திருமணம் தள்ளி வைக்கப்பட்டு இருக்கிறது.

திருமணத்துக்காக சுமார் 600 கி.மீ பயணம் செய்து ஆசையாக வந்த மணப்பெண்ணுக்கு கொரோனா தொற்று செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்