"கல்யாணம் பண்ணா பிரிஞ்சிடுவோமே"... 2 வயது குழந்தையை 'தவிக்க' விட்டு... 'தோழியுடன்' தற்கொலை!
முகப்பு > செய்திகள் > தமிழகம்நாமக்கல் மாவட்டம் எலச்சிபாளையம் பகுதியை சேர்ந்தவர் நந்தகுமார். இவருக்கு ஜோதி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்று இரண்டு வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது. இந்நிலையில் தனது கணவரை பிரிந்த ஜோதி, தன்னுடைய பெற்றோர் வீட்டில் வசித்து வந்துள்ளார். ஜோதியின் பெற்றோர்கள் கடந்த ஆறு மாதங்களாக கேரளாவில் கூலி வேலை செய்து வருகின்றனர்.
ஜோதி தனது வீட்டின் அருகேயுள்ள தறிபட்டறை ஒன்றில் பணிபுரிந்து வந்துள்ளார். அதே பட்டறையில் பிரியா என்பவரும் ஜோதியுடன் பணிபுரிந்து வந்துள்ளார். அப்போது இருவரும் இணைபிரியாத தோழிகளாக பழகி வந்தனர். வெளியில் எங்கு சென்றாலும் ஒன்றாக சென்று வருவது, எப்போதும் ஒன்றாக இருப்பது என மிக நெருக்கமாக இருந்துள்ளனர்.
இந்நிலையில், வரும் 27 ஆம் தேதியன்று பிரியாவுக்கு திருமணம் நடைபெற இருந்த நிலையில் அதற்கான ஏற்பாடுகள் நடந்து வந்தது. திருமணம் செய்து வேறு வீட்டிற்கு சென்றால் நெருங்கிய தோழியான ஜோதியை பிரிந்து விடுவோம் என்பதை எண்ணி பிரியா அதிகம் மன வேதனையில் இருந்ததாக தெரிந்தது. இதனையடுத்து, தோழியைக் காண வேண்டி சைக்கிளை எடுத்துக்கொண்டு ஜோதி வீட்டிற்கு பிரியா புறப்பட்டுள்ளார்.
அங்கு இருவரும் பேசிக்கொண்டிருந்த நிலையில் ஓரே சேலையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர். வெகு நேரமாகியும் மகள் பிரியா வீடு திரும்பாத நிலையில் ஜோதியின் வீட்டிற்கு பிரியாவின் தாய் சென்ற போது, வீட்டின் கதவு உள்பக்கமாக பூட்டியிருந்தது. பின்னர் அக்கம் பக்கத்தினரின் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்ற போது, மகள் தற்கொலை செய்து கொண்டதை கண்டு பிரியாவின் தாயார் கதறி அழுதுள்ளார்.
இந்த தற்கொலை சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், இரண்டு பேரின் உடல்களையும் போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- பாதிப்பு 'அதிகரிக்கும்' வேளையிலும் நிகழ்ந்த ஒரு 'நன்மை'... மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ள 'தகவல்!'...
- ‘மாடி அறைக்கு சென்ற மகன்’... ‘பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி’... ‘தாத்தா இறந்த சில தினங்களில் பேரன் எடுத்த துயர முடிவு’!
- "அப்பா ஞாபகமா இருந்த வண்டிங்க"... 'அதுவும்' இப்போ என்கூட 'இல்ல'... மனமுடைந்த இளைஞரின் 'விபரீத' முடிவு!
- 'முக்கியமான' ஆய்வில் ஈடுபட்டிருந்த... 'சீன' ஆய்வாளருக்கு அமெரிக்காவில் நேர்ந்த 'பயங்கரம்'... 'அடுத்தடுத்து' கிடைத்த சடலங்களால் 'விலகாத' மர்மம்...
- தாத்தாவை அடக்கம் செய்ய 'குழி' தோண்டும்போது... 'பேரன்' சொன்ன ஒன்று... 'அடுத்து' காத்திருந்த 'பேரதிர்ச்சியால்' உறைந்து நிற்கும் 'நண்பர்கள்'...
- 'கொரோனாவால்' வருமானத்தை இழந்து நின்ற 'நண்பர்களை'... மகிழ்ச்சியின் 'உச்சத்திற்கு' கொண்டு சென்ற 'ஜாக்பாட்!'...
- 'கல்யாணமான 6 மாதத்தில்'... 'காதல் மனைவி எடுத்த அவசர முடிவால்'... 'கணவனுக்கு நேர்ந்த துயரம்'... 'கடைசியில் நடந்த பயங்கரம்'!
- நண்பர்களே செய்த படுபாதக செயல்... சடலமாக மீட்க்கப்பட்ட வாலிபர்!... நொறுங்கிப் போன குடும்பம்!... கடலூரில் பயங்கரம்!
- ‘நீண்ட நேரமாக திறக்காத கதவு’... ‘அடுத்த வாரம் கல்யாணம்’... ‘பள்ளி ஆசிரியையின் துயர முடிவு’... ‘சோகத்தில் மூழ்கிய பெற்றோர்’!
- ‘அன்னைக்கு மட்டும் அவனுக்கு’... ‘சரியான நேரத்தில் கிடைச்சிருந்தா?’... ‘நண்பன் பலியான நாளில்’... ‘உயிர் கொடுக்கும் நண்பர்கள்’!