'காதலிச்சிட்டு எப்படி விட முடியும்'...'சொல்லி பாத்தோம், எங்க வீட்டுல ஒத்துக்கல'... காதலர்கள் எடுத்த அதிரடி முடிவு!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

புதுச்சேரி பிச்சை வீரன்பட்டை பகுதியைச் சேர்ந்தவர் லிங்க சுப்பிரமணியம். 23 வயது இளைஞரான இவர் ஹேமலதா என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். இவர்கள் இருவரும் கல்லூரியில் படிக்கும் காலத்திலிருந்தே காதலித்து வந்துள்ளார்கள். லிங்க சுப்பிரமணியம் தற்போது தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வரும் நிலையில், இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம் என முடிவு செய்து பெற்றோரிடம் தங்கள் காதலைத் தெரிவித்துள்ளார்கள்.

'காதலிச்சிட்டு எப்படி விட முடியும்'...'சொல்லி பாத்தோம், எங்க வீட்டுல ஒத்துக்கல'... காதலர்கள் எடுத்த அதிரடி முடிவு!

இந்நிலையில் லிங்க சுப்பிரமணியத்தின் வீட்டில் அவர்களின் காதலை ஏற்றுக்கொண்ட நிலையில், ஹேமலதா வீட்டில் இருவரின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தார்கள். அதற்குக் காரணமாகச் சாதி வந்தது. லிங்க சுப்பிரமணியன் ஆதி திராவிட சமூகத்தைச் சேர்ந்தவர். ஹேமலதா பிராமண சமூகத்தைச் சேர்ந்தவர். இதனால் திருமணத்துக்குப் பெண் வீட்டார் மறுத்தனர். ஹேமலதா தனது பெற்றோரிடம் எவ்வளவு கேட்டும் அவர்கள் சம்மதிக்காத நிலையில், இருவரும் அம்பேத்கர் மணிமண்டபத்தில் இன்று பௌத்த முறையில் ஜாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டனர்.

இதில் மாப்பிள்ளை வீட்டார் மட்டும் பங்கேற்றனர். கடற்கரைச் சாலையில் உள்ள அம்பேத்கர் மணிமண்டபத்தில் சடங்கு சம்பிரதாயம் இன்றி புத்தர் சிலை முன் இருவரும் மாலை மாற்றிக்கொண்டு தாலிகட்டி திருமணம் செய்து கொண்டனர். இந்த திருமணம் குறித்து மணப்பெண் கூறுகையில், “நாங்கள் இருவரும் தீவிரமாகக் காதலித்து வந்தோம். ஆனால் எங்கள் வீட்டில் காதலுக்குச் சம்மதம் தெரிவிக்கவில்லை.  மனுஸ்மிருதியில் பெண்கள் குறித்து உள்ளக் கருத்துகள் ஏற்கும்விதமாக இல்லை. அதனால் எந்த மதமும் வேண்டாம் என்று முடிவு செய்து சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டேன்“ என்றுள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்