"வாழ வேண்டிய எம் பொண்ண.. பொணமா வரவெச்சுட்டீங்களே?".. 'சிங்கப்பூர்' காதலன் அனுப்பிய 'வாட்ஸ்ஆப்' போட்டோ!.. மனமுடைந்த 'இளம்பெண்' எடுத்த 'சோக' முடிவு!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தஞ்சை மாவட்டம், ஒரத்தநாடு தாலுக்கா, பாப்பாநாடு அருகே உள்ள சோழகன்காடு கிராமம் கீழத் தெருவை சேர்ந்தவர் அர்ச்சுனன், என்பவரது மகன் புகழரசன்.

Advertising
Advertising

சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றிய புகழரசனும் அதே ஊரை சேர்ந்த மேலத்தெரு செல்வம் என்பவரது மகளும் சென்னையில் செவிலியராக பணியாற்றி வந்த அருணா என்பவரும், பேஸ்புக் மூலமாக பழகியுள்ளனர். பின்னர் அந்த பழக்கம் காதலாக மாற, ஒருவரை ஒருவர் காதலித்து வந்தனர். இந்த நிலையில்தான் புகழரசன் சிங்கப்பூர் சென்றுவிட்டார் . இதனைத் தொடர்ந்து அருணாவும் புகழரசனும் தொலைபேசியில் பேசியில் தங்கள் காதலை தொடர்ந்துள்ளனர். இதனிடையே கடந்த 4 மாதங்களுக்கு முன்பு புகழரசனுக்கு, ஆம்பலாப்பட்டுவைச் சேர்ந்த சாந்தி என்கிற பெண்ணுடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இதனை அறிந்த அருணா, புகழரசன் தன்னை காதலித்து ஏமாற்றி விட்டதாகவும், தன்னை தன் காதலனோடு சேர்த்து வைக்கும்படியும் கூறியும் தர்ணா போராட்டத்தை நடத்தினார். அப்போது சிங்கப்பூரில் இருந்து அருணாவுடன் செல்போனில் பேசி சமாதானப்படுத்த, பாப்பாநாடு போலீஸாரும் அருணாவை சமாதானப்படுத்தி வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் சிங்கப்பூரில் இருந்து வெளிநாட்டிலிருந்து சொந்த ஊருக்கு வந்த புகழரசன் நேற்று தனது பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்டிருந்த சாந்தியுடன், பட்டுக்கொட்டை முருகன் கோவிலில் திருமணம் செய்து கொண்ட புகைப்படத்தை புகழரசன் வாட்ஸ்ஆப் மூலம்  அருணாவுக்கு அனுப்பிவைத்தார். இதைப் பார்த்த அருணா,  “புகழரசன் என்னை 5 வருடமாக காதலித்து, திருமணம் செய்துகொள்வதாக ஏமாற்றிவிட்டு, பின்னர் வேறு பெண்ணை திருமணம் செய்து கொண்டு விட்டார். இதனால் நான் தற்கொலை செய்து கொள்ள துணிந்துவிட்டேன். என் சாவுக்கு முற்றிலும் புகழரசன் தான் காரணம்” என்று ஒரு கடிதம் எழுதி வைத்துவிட்டு, தனது வீட்டு பாத்ரூமில் சென்று தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.

பின்னர், தற்கொலை செய்துகொண்ட அருணாவை அவரது பெற்றோர்கள் தூக்கி சென்று புகழரசன் வீட்டுவாசலில் வைத்து, புகழரசனின் வீட்டையும் அடித்து நொறுக்கி , புகழ் அரசனையும் அடித்ததாகக் கூறப்படுகிறது. அதன் பின்னர் அங்கு விரைந்த ஒரத்தநாடு டிஎஸ்பி செங்கமலக் கண்ணன் தலைமையிலான போலீசார் கூட்டத்தைக் கலைத்ததுடன் புகழரசனையும், அவரது மனைவி  சாந்தியையும் கைது செய்யப்பட்டு பாப்பாநாடு போலீஸ் நிலையத்திற்கு கொண்டுசென்றனர். இதுகுறித்து பாப்பாநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்தததுடன், அருணாவின் உடலை கைப்பற்றி ஒரத்தநாடு அரசு பொது மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தி விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும் சோழகன்குடிக்காடு பகுதியில் வேறு ஏதும் கலவரங்கள் உண்டாகிவிடக் கூடாது என்பதற்காக நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டுள்ளனர். 

புகழரசனின் வீட்டுக்கு தன் மகளின் சடலத்துடன் சென்ற அருணாவின் அம்மா,  “நல்லா வாழ வேண்டிய என் பொண்ணை காதல் என்கிற பெயரில் ஏமாத்தினது மட்டுமில்லாம, இந்த வீட்டுக்கு மருமகளாக வர ஆசைப்பட்டு காத்திருந்த என் பொண்ணை இப்படி பிணமாக வர வெச்சுட்டீங்களே” என்று கண்ணீர் விட்டு கதறியுள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்