'சும்மா ஒண்ணும் சீன பொருட்களைப் புறக்கணிக்க முடியாது'... 'இந்த பாதிப்பு உங்களுக்கு தெரியுமா?'... எச்சரித்த சீன பத்திரிகை!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சீன பொருட்கள் புறக்கணிப்பு நடவடிக்கையால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து சீன பத்திரிகை எச்சரிக்கை விடுத்துள்ளது.
லடாக்கில் இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் சீன ராணுவத்தால் கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மக்களிடம் எழுந்த கொந்தளிப்பையடுத்து சமூக வலைத்தளங்கள் உட்படப் பல இடங்களில் சீன பொருட்களைப் புறக்கணிக்க வேண்டும் என்ற கருத்து எழுந்தது. சில இடங்களில் சீன பொருட்களைப் போட்டு உடைக்கும் வீடியோகளும் இணையத்தில் வைரலானது.
இதனிடையே சீன பொருட்களைப் புறக்கணிப்பதால் இரு நாட்டு உறவுகள் பாதிக்கும் என அந்த நாட்டு அரசு பத்திரிகையான குளோபல் டைம்ஸ் எச்சரிக்கை விடுத்து உள்ளது. இது தொடர்பாக அந்த பத்திரிகையில் ‘சீன தயாரிப்புகள், செல்போன் செயலிகளை இந்தியா புறக்கணித்தால் இருதரப்பு உறவுகள் பாதிக்கும்’ என்ற தலைப்பில் தலையங்கம் எழுதப்பட்டு உள்ளது. இந்தியாவில் சீன பொருட்கள் புறக்கணிக்கப்படுவதால் அந்த நாட்டுப் பொருட்கள் வர்த்தகத்தில் எதிர்மறை விளைவுகள் ஏற்படுத்தும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
மிக முக்கியமாக இரு நாட்டின் உறவுகளும் பாதிக்கும் என எச்சரித்துள்ளது. எனினும் சீன பொருட்களின் விலை உள்ளிட்ட வாடிக்கையாளர் நலன் சார்ந்த அம்சங்களால் இந்த போராட்டங்கள் முடிவுக்கு வரும் என அந்த கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- முப்படைகளுக்கும் முழு சுதந்திரம்... 'சீனா' மறுபடி வாலாட்டுனா... பாதுகாப்புத்துறை 'அதிரடி' முடிவு?
- வீரமரணம் அடைந்த பழனியின் குடும்பத்துக்கு நடிகர் கருணாஸ் ரூ.1 லட்சம் நிதி உதவி!.. குழந்தைகளின் கல்விக் கட்டணத்தையும் ஏற்றார்!
- 'புல்டோசர்களை வச்சு சீனா செஞ்ச வேலை'... 'காட்டிக்கொடுத்த செயற்கைக்கோள்'... அதிர்ச்சியளிக்கும் புகைப்படங்கள்!
- ராணுவ வீரர் 'இறந்து' போனதாக துக்கத்தில் மூழ்கிய குடும்பம்... 'கடைசியாக' வந்த போன் காலில்... கிடைத்த வேற லெவல் அதிர்ச்சி!
- இந்திய வீரர்களை தாக்க ‘முன்கூட்டியே’ கொண்டு வரப்பட்ட ‘முள்கம்பி’.. வெளிச்சத்துக்கு வந்த சீனாவின் ‘சதித்திட்டம்’!
- ‘கடைசி வரை நிறைவேறாமல் போன ஆசை’.. ‘வீரமரணம்’ அடைந்த கணவர்.. சோகத்தில் மூழ்கிய குடும்பம்..!
- Video: மகன் இறந்துட்டான்... 'என்னோட' 2 பேரன்களை அனுப்புவேன்... கண்கலங்க வைத்த தந்தை!
- 'நாங்களும் பலத்தைக் காட்டுவோம்'...'எங்களுக்கு அமைதி தான் முக்கியம்'... ஆனா நாட்டு மக்களுக்குப் பிரதமர் சொன்ன உறுதி!
- 'என்னங்க, பேசும் போதெல்லாம் இத தானே சொல்லுவீங்க'... 'வீர மகனின் மனசுல இருந்த ஆசை'... தொண்டை அடைக்க கதறி அழுத மனைவி!
- ‘என் மகன் இறந்ததை நினைச்சு வருத்தப்பட்டேன்’.. ‘ஆனா..!’.. லடாக்கில் வீரமரணம் அடைந்த கமெண்டோவின் தாய் சொன்ன வார்த்தை..!