"எல்லாம் என் தலையெழுத்து.. இப்படி படுத்தலாமா என்னை".. ஸ்கூலுக்கு போக சொன்னது ஒரு குத்தமா 😂.. வைரலாகும் சிறுவனின் வீடியோ..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

பள்ளி செல்ல மறுத்து அடம்பிடிக்கும் சிறுவன் ஒருவனின் வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

"எல்லாம் என் தலையெழுத்து.. இப்படி படுத்தலாமா என்னை".. ஸ்கூலுக்கு போக சொன்னது ஒரு குத்தமா 😂.. வைரலாகும் சிறுவனின் வீடியோ..!
Advertising
>
Advertising

Also Read | எப்புட்றா.. இலங்கை வீரர் அடிச்ச ரிஸ்க்கான சிக்ஸ்.. கோலியே மிரண்டு போய்ட்டாரு.. வீடியோ..!  

சமூக வலைதளங்கள் எப்போதும் பல ஆச்சரியமான தகவல்களை மற்றும் வீடியோக்களை மிக விரைவில் பலரிடத்திலும் கொண்டு போய் சேர்த்து விடும் வல்லமை படைத்தது. மக்களின் மனதை தொடும் விஷயங்கள் எப்போதுமே இணையத்தில் வெகு விரைவில் வைரலாகி விடுவது உண்டு. அதிலும் குறிப்பாக குழந்தைகள் கியூட்டாக மேற்கொள்ளும் விஷயங்கள் குறித்த வீடியோக்கள் மற்றும் பதிவுகள் சமூக வலை தளங்களில் எப்போதும் கோடிக்கணக்கான மக்களிடையே அதிக அளவில் ஷேர் செய்யப்படும். அந்த வகையில் பள்ளி செல்ல மறுத்து அடம்பிடிக்கும் சிறுவன் ஒருவனின் வீடியோ தற்போது இணைய தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Boy emotional Talking to his parents over going to school

அந்த வீடியோவில் சிறுவன் ஒருவன் பள்ளி சீருடை அணிந்தபடி செல்கிறான். உடன் செல்லும் பெற்றோரிடம்," எல்லாம் தலையெழுத்தா இருக்கு. ஒரு உடம்பு சரியில்லாத பையனை இப்படி பாடுபடுத்தலாமா? நீங்களே சொல்லுங்க. இதெல்லாம் நியாயமா?" என்கிறார் அந்த சிறுவன். "தலையெழுத்தா இருக்குதே" என சிறுவன் சொல்ல, அருகில் நடந்துவரும் சிறுவனின் தாய் "உனக்கு மட்டுமா தலையெழுத்து" எனக் கேட்கிறார்.

அதற்கு,"ஆமா எனக்கு மட்டும் தான் தலையெழுத்து. நேத்து தானே ஸ்கூல் போனேன். இன்னிக்கும் நான் போகணுமா?" என கேட்கிறான் சிறுவன். இதற்கு உடன் வரும் சிறுவனின் தாய்,"ஆமா போகணும்" என்கிறார். இதைக்கேட்டு அழுகை விசும்பலுடன்,"ஏன் என்னை இப்படி கஷ்டப்படுத்துறீங்க" என கேட்கிறான் சிறுவன்.

அதன்பிறகு, இருசக்கர வாகனத்தில் ஏறும்படி தாய் சொல்ல அழுதுகொண்டே அந்த சிறுவனும் ஏறுகிறான். அதன் பின்னரும் "தலையெழுத்தா இருக்கே" என தலையில் கைவைத்து சிறுவன் அழுகிறான். இந்த வீடியோவை அருகில் இருந்தவர் வீடியோவாக எடுத்து சமூக வலை தளங்களில் பதிவிட அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. 

இந்த வீடியோ எப்போது எங்கு எடுக்கப்பட்டது என்பது சரிவர தெரியாத நிலையில், சிறுவனின் கியூட்டான பேச்சுக்கு நெட்டிசன்கள் ஹார்டின்களை பறக்கவிட்டு வருகின்றனர்.

Also Read | அண்ணாத்த ஆடுறார்.. மேட்ச்-ல ஜெயிச்ச அப்புறம் கோலி போட்ட குத்தாட்டம்.. கூட யாருன்னு பாருங்க.. வீடியோ..!

BOY, PARENTS, SCHOOL

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்