'தந்தையின் கண்முன்னே...' சர்ரென்று பின்னால் இருந்து பாய்ந்த சரக்கு லாரி...' பள்ளிக்கு செல்லும் வழியில் நடந்த பயங்கரம்...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சேலம் அருகே பைக் மீது சரக்கு லாரி மோதிய விபத்தில் மூன்றாம் வகுப்பு படித்துவந்த சிறுவன் லாரியின் அடியில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் அந்த பகுதி மக்களிடையே பெரும்  சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே உள்ள கோனேரி வளவு பகுதியைச் சேர்ந்தவர் செந்தில். இவர் சொந்தமாக நெசவுத்தொழில் செய்துவருகிறார். இவரது மகன் கதிர்வேல் அருகில் உள்ள அரசுப் பள்ளி ஒன்றில் மூன்றாம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் இன்று காலை வழக்கம்போல் தனது மகனை பைக்கில் அழைத்துக்கொண்டு பள்ளிக்கூடம் சென்றுக் கொண்டிருந்தார். அப்போது தொட்டம்பட்டி அருகே பைக்கின் பின்புறம் வந்த சரக்கு லாரி திடீரென்று பின்னால் இருந்து மோதியது.

இந்த விபத்தில் சிறுவன் லாரியில் சிக்கி சம்பவ இடத்திலேயே பலியானார். தந்தையின் கண் எதிரே குழந்தை விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் விபத்து நடந்த பகுதியில் தொடர் விபத்துகள் நடப்பதால் வேகத் தடைகள் அமைக்க வேண்டும் எனவும், தொடர் விபத்தைக் கண்டித்தும் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் தாரமங்கலம் புறவழிச் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டதால் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தொடர்ந்து காவல்துறையினர் விரைந்து வந்து விபத்து சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பள்ளிக்குச் சென்ற சிறுவன் சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் உள்ள மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

SCHOOLBOY

மற்ற செய்திகள்