“சென்னையில் களைகட்டும் புத்தகத் திருவிழா!”.. “மெட்ரோ கார்டு வெச்சிருக்கீங்களா?” ..“உங்களுக்கு மட்டும் ஒரு ஸ்பெஷல் ஆஃபர்!”
முகப்பு > செய்திகள் > தமிழகம்43 வது சென்னை புத்தகக் கண்காட்சி நந்தனம் ஒய்.எம்.சி ஏ உடற்கல்வியியல் கல்லூரி மைதானத்தில் இன்று தொடங்கி வருகிற 21-ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது.
புத்தகக் கண்காட்சியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று மாலை ஆறு மணிக்கு தொடங்கி வைக்கின்றார். விழாவில் அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்கின்றனர். தொடக்க விழாவில், சிறந்த பதிப்பாளர், புத்தக விற்பனையாளர், சிறந்த அறிவியல் நூல் உள்ளிட்ட விருதுகளை முதலமைச்சர் வழங்க உள்ளார்.
கோடிக்கணக்கான புத்தகங்கள் இடம்பெறவிருக்கும் இந்த புத்தகக் கண்காட்சி, விடுமுறை தினங்களில் காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரையிலும், வேலைநாட்களில் மதியம் மூன்று மணி முதல் இரவு 9 மணி வரையும் திறந்திருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
புத்தகக் கண்காட்சியின் சிறப்பம்சமாக 'கீழடி - ஈரடி' என்ற தலைப்பில் தொல்லியல் துறை சார்பில் 3 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. இம்முறை 20 லட்சம் வாசகர்கள் வருவார்கள் என எதிர்பார்ப்பதாக கண்காட்சி அமைப்பாளர்கள் கூறி உள்ளனர். சுமார் 20 கோடி ரூபாய் அளவுக்கு புத்தகங்கள் விற்பனை ஆகும் என எதிர்பார்ப்பதாகவும் அவர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.
இந்த புத்தகக் கண்காட்சிக்கான நுழைவு கட்டணமாக ரூ.10 வசூலிக்கப்படுகிறது. பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு நுழைவுக் கட்டணம் இல்லை எனவும், அவர்களுக்கான அனுமதிச்சீட்டு அந்தந்த கல்வி நிறுவனங்களினால் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மெட்ரோ ரயில் மூலம் கண்காட்சிக்கு வருகிறவர்களுக்கு நுழைவுக் கட்டணம் இல்லாமல் பயண அட்டையைக் காட்டி இலவசமாக அனுமதி பெறலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- நியூ இயர் பிறக்கும் நள்ளிரவில்... சென்னையில் மெட்ரோ ரயில்... எவ்வளவு நேரம் இயங்கும்?... எங்கெல்லாம் போக்குவரத்து மாற்றங்கள்?... பைக் ரேஸை தடுக்க மூடப்படும் 75 மேம்பாலங்கள்!
- ‘மெட்ரோ’ ரயில் முன் பாய்ந்த கணவர்... 5 வயது ‘மகளுடன்’ மனைவி செய்த அதிர்ச்சி காரியம்... ‘சென்னை’ தம்பதிக்கு நேர்ந்த சோகம்...
- 'ஒரு வரைமுறை வேணாமா?'.. 'இதெல்லாம் மெட்ரோவுல செய்ற காரியமா?'.. வைரலான வீடியோ.. வறுக்கும் நெட்டிசன்கள்!
- 5 மொழிகள்..'இலவச' வை-பை.. 'பாட்டு, படம்', சீரியல்.. இனி 'சென்னை' மெட்ரோல.. இதெல்லாமே கெடைக்கும்!
- 'இனிமேல் இங்கேயும் 'மெட்ரோ ரயில்' வரும்'...'புதிய மெட்ரோ சேவை'...எதிர்பார்ப்பில் சென்னை மக்கள்!
- 'செல்ஃபோனை பார்த்துகிட்டே’... ‘தண்டவாளத்தில் தவறி விழுந்த பெண்’... ‘அதிர்ச்சியடைந்த பயணிகள்’... வீடியோ!
- ‘பயணிகள் வசதிக்காக ஸ்மார்ட் வாட்ச்’.. ‘சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகத்தின் புதிய ஐடியா’..
- 'சென்னை அண்ணாசாலையில் செல்லும் வாகன ஓட்டிகளே’... ‘இந்த வழியை மாத்தியிருக்காங்க'... காரணம் இதுதான்!
- ஞாயிற்றுக்கிழமை டிக்கெட் விலையில் 50% டிஸ்கவுண்ட் ..? சென்னை மெட்ரோவின் புதிய திட்டம்..!
- 'மெட்ரோ ரயில்ல செய்ற காரியமா இது?'.. இளைஞரின் விநோதமான செயலால் அதிர்ந்த சக பயணிகள்!