மாயமான மசாஜ் சென்டர் பெண் ஊழியர்கள்!.. “அந்த சூட்கேஸில் இருந்துதான் ‘துர்நாற்றம்’ வருது.. சீக்கிரம் திறந்து பாருங்க”... ‘பூட்டிய வீட்டிற்குள்... மிரண்டு’ போன போலீசார்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சேலத்தில் மசாஜ் சென்டர் நடத்தி வந்த பெண் கொலை செய்யப்பட்டு சூட்கேஸில் மறைத்து வைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மாயமான மசாஜ் சென்டர் பெண் ஊழியர்கள்!.. “அந்த சூட்கேஸில் இருந்துதான் ‘துர்நாற்றம்’ வருது.. சீக்கிரம் திறந்து பாருங்க”... ‘பூட்டிய வீட்டிற்குள்... மிரண்டு’ போன போலீசார்..!

சேலம் மாவட்டம் அஸ்தம்பட்டி அடுத்த குமாரசாமிபட்டியை சேர்ந்தவர் நடேசன். முன்னாள் கவுன்சிலரான இவர் அப்பகுதியில் வீடுகளை கட்டி வாடகைக்கு விட்டு வருகிறார். இவரது வீட்டின் இரண்டாவது மாடியில் கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த முகமது சதாம், அவரது மனைவி தேஜஸ் மோண்டல் இரண்டு வீடுகளை வாடகைக்கு எடுத்து தங்கியுள்ளனர். இந்த தம்பதியினர் சேலம் அழகாபுரம், பள்ளப்பட்டி மற்றும் அஸ்தம்பட்டி ஆகிய இடங்களில் மசாஜ் சென்டர் நடத்தி வந்ததாக சொல்லப்படுகிறது.

Body massage centre woman murder in Salem, Police investigate

அதனால் கணவன், மனைவி ஒரு வீட்டிலும், மசாஜ் சென்டரில் வேலை பார்த்த இளம்பெண்கள் மற்றொரு வீட்டிலும் தங்கி வந்துள்ளனர். கடந்த 10 நாட்களாக அந்த இளம்பெண்கள் தேஜஸ் மோண்டல் வீட்டில் தங்கி வேலைக்கு சென்று வந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே 4 நாட்களுக்கு முன்பு கணவர் முகமது சதாம் வேலை விஷயமாக சென்னை சென்றுள்ளார்.

இந்த நிலையில், நேற்று வீட்டு உரிமையாளர் நடேசனுக்கு போன் செய்து, தனது மனைவி நீண்ட நேரமாக செல்போனை எடுக்கவில்லை, வீட்டில் சென்று பாருங்கள் எனக் கூறியுள்ளார். உடனே நடேசனும் தேஜஸ் மோண்டல் தங்கியிருந்த வீட்டுக்கு சென்று பார்த்துள்ளார். ஆனால் கதவு பூட்டப்பட்டிருந்துள்ளது. இதனை அடுத்து மசாஜ் சென்டரில் வேலை பார்த்த பெண்கள் தங்கிருந்த வீட்டுக்கு சென்று பார்த்துள்ளார். அந்த வீடும் பூட்டப்பட்டிருந்துள்ளது.

ஆனால் அந்த வீட்டுக்குள் இருந்து ஒருவித துர்நாற்றம் வீசியுள்ளது. இதனால் சந்தேகமடைந்த நடேசன், உடனே போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். விரைந்த வந்த போலீசார் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர். அப்போது படுக்கையறையில் உள்ள அலமாரியில் சூட்கேஸ் ஒன்று இருந்ததுள்ளது. அதில் இருந்துதான் துர்நாற்றம் வருவது தெரிந்து உடனே அதை கீழே இறக்கிப் பார்த்துள்ளனர்.

அப்போது தேஜஸ் மொண்டல் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் சூட்கேஸுக்குள் சடலமாக இருந்தைக் கண்டு போலீசார் அதிர்ச்சியடைந்துள்ளனர். அவர் இறந்து 3 அல்லது 4 நாட்கள் ஆகியிருக்கும் என போலீசார் தெரித்துள்ளனர். இதனை அடுத்து சம்பவ இடத்துக்கு வந்த கைரேகை நிபுணர்கள் தீவிரமாக ஆய்வு செய்தனர்.

இதனைத் தொடர்ந்து தேஜஸ் மொண்டலின் சடலம் உடற்கூறு ஆய்வுக்காக சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதனிடையே மசாஜ் சென்டரில் வேலைப் பார்த்த இளம்பெண்கள் மாயமாகியுள்ளனர். இவர்கள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்த கொலை குறித்து விசாரணை மேற்கொள்ள 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. மசாஜ் சென்டர் நடத்தி வந்த பெண் கொலை செய்யப்பட்டு சூட்கேஸில் அடைக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்