'அனல் பறக்கும் தமிழக தேர்தல் வாக்கு எண்ணிக்கை'... 'அதிர்ச்சியில் முக்கிய அமைச்சர்கள்'... தொடர்ந்து பின்னடைவு!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தமிழகத்தில் பிரபல அமைச்சர்கள் பின்னடைவைச் சந்தித்து வருகிறார்கள்.

தமிழகத்தில் மொத்தம் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளில் பதிவான வாக்குகளையும், இடைத்தேர்தல் நடைபெற்ற கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் பதிவான வாக்குகளையும் எண்ணும் பணி இன்று காலை 08.00 மணிக்குத் தொடங்கியது. தமிழகத்தில் மொத்தம் அமைக்கப்பட்டுள்ள 75 வாக்கு எண்ணும் மையங்களில் வாக்குகள் விறுவிறுப்பாக எண்ணப்பட்டு வருகின்றன.

தற்போது வரை, திமுக கூட்டணி 130 சட்டமன்றத் தொகுதிகளிலும், அதிமுக கூட்டணி 99 சட்டமன்றத் தொகுதிகளிலும், மக்கள் நீதி மய்யம் 1 சட்டமன்றத் தொகுதியிலும் முன்னிலையில் உள்ளன. இதற்கிடையே வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்தே அதிமுக கூட்டணி பின்னடைவைச் சந்தித்து வருகிறது. குறிப்பாக, அமைச்சர்கள் பின்னடைவைச் சந்தித்துள்ளனர்.

ராயபுரத்தில் ஜெயக்குமார், மதுரவாயலில் பெஞ்சமின், ஆவடியில் மாஃபா பாண்டியராஜன், திருச்சி கிழக்கில் வெல்லமண்டி நடராஜன், விழுப்புரம் தொகுதியில் சி.வி.சண்முகம், ராஜபாளையத்தில் ராஜேந்திர பாலாஜி ஆகியோர் பின்னடைவைச் சந்தித்துள்ளனர்.

அதேபோல் சென்னையில் உள்ள 16 தொகுதிகளிலும் அதிமுக வேட்பாளர்கள் தொடர்ந்து பின்னடைவைச் சந்தித்துள்ளனர். சென்னையில் திமுக வேட்பாளர்கள் தொடர்ந்து முன்னிலையில் உள்ளனர். அதே போன்று துணை முதல்வர் பன்னீர் செல்வமும் தொடர்ந்து பின்னடைவைச் சந்தித்து வருகிறார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்