நான் ஒண்ணும் 'குபேரனுக்கு' சொந்தக்காரன் இல்ல...! - 'கடன்' பிரச்சனையை தவிர்க்க 'கடைக்காரர்' வச்ச போர்டு...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கொரானா தொற்றுக் காலத்தில் கடன் பிரச்சினையை தவிர்ப்பதற்காக கடை உரிமையாளர் ஒருவர் வித்தியாசமான போர்டு ஒன்றை வைத்துள்ளார்.
கொரோனா காலத்தில் அனைத்து துறைகளின் வளர்ச்சியும் பின்னடைந்து போனது. பல மக்கள் வேலை இழந்து துயரப் பட்டனர். இன்னும் சில மக்கள் 50 சதவீதம் சம்பளத்திற்கு பணிபுரிந்தனர். பொருளாதார நெருக்கடியினால் கடன் தொல்லைக்கும் ஆளாயினர். ஒருவேளை உணவு கிடைக்கிறதே என்று பணிக்கு போனவர்கள் அதிகம். கிடைக்குற வேலையை செய்து தன் வாழ்க்கையை ஓட்டிக்கொண்டு இருப்பவர்கள் பலர்.
முன்பு கடைகளில் கடன் பாக்கி சொல்வது வாடிக்கை. அந்த நேரத்தில் பழகிய முகத்திற்காக கடன் கொடுத்தாலும் அதை வாங்குவதற்குள் போதும் போதும் என ஆகி விடும். அதுமட்டுமல்லாமல் முன்பெல்லாம் கடன் அன்பை முறிக்கும், எலும்பை முறிக்கும் என்றெல்லாம் கடைகளில் எழுதி வைப்பார்கள். அந்த மாதிரியான புதுமையான சம்பவம் தான் இங்கே நடந்துள்ளது.
ஒரு கடை உரிமையாளர் ஒருவர் தன் கடைக்கு முன்பக்கம் போர்டில் 'கடன் பாக்கி வைக்காதீர்' என்ற தலைப்பின் கீழ் சில வரிகள் எழுதி வைத்துள்ளார்.
அதில், முதல் வரியில் கணக்கு எழுதுவதற்கு கணக்குப்பிள்ளை இல்லை என்று எழுதப்பட்டுள்ளது. இரண்டாம் வரியில், பகலும் இரவும் அறிவதற்கு ஆட்கள் இல்லை என்று உள்ளது.
அடுத்த வரியில் அடிக்கடி உங்களுக்கு போன் செய்ய எங்களுக்கு வேலை இல்லாமல் இல்லை. தாங்களோ பதில் கூற மாட்டீர்கள்.
அதற்கு அடுத்த வரியில், பாக்கி வைத்து விட்டு தேவைப்படும் போது வாங்க தான் குபேரனுக்கு சொந்தமில்லை எனவும், வாடிக்கையாளர் ஒரு அரசன் அரசன் என்றும் பாக்கி வைக்க மாட்டான் எனவும் எழுதப்பட்டுள்ளது.
மேலும், இந்த கொரோனா காலத்தில் கடை நடத்துவது அவ்வளவு எளிதாக இல்லை என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது பாக்கி இல்லாமல் பணம் கொடுக்க முடிந்தால் மட்டுமே இந்த கடைக்கு வாருங்கள் என்று அதில் கண்டிப்பாக கூறியுள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'விவசாயிகள், கால்நடை வளர்ப்பவர்களுக்கு குட்நியூஸ்...' தமிழக அரசு 'சூப்பர்' அரசாணை...!
- நம்ம 'அக்கவுண்ட்'ல எப்படிடா ரூ. 7.7 கோடி 'கிரெடிட்' ஆச்சு...? '15 மாசம் கழிச்சு தெரிய வந்த உண்மை...' - அதிர்ந்து போன பெண்...!
- டீக்கடை முன்பு 'எழுதி' வைத்த வாசகம்...! 'இங்கிலாந்து'ல இருந்துலாம் போன்கால் வருது...! மனசே வெறுத்து போய் தான் 'போர்டு' வச்சேன்...! - இப்போ என் செல்போனுக்கு 'ரெஸ்ட்' இல்ல...!
- 'நிறைய டைம் கொடுத்து பார்த்தாச்சு...' 'இனி முடியாது...' - 'மாஸ்டர் கார்டுக்கு' ரிசர்வ் வங்கி வைத்த ஆப்பு...!
- 'இன்னைக்கும் கண்டிப்பா திருட வருவாங்க...' 'அவங்கள பிடிக்கவும் முடியாது...' - திருடர்களுக்காக பொதுமக்கள் 'கதவில்' எழுதி வைத்த வாசகம்...!
- யாரா இருந்தாலும் ரூல்ஸ்னா ரூல்ஸ் தான்...! 'விதிமுறையை மீறிய அம்மா...' 'டூட்டிக்கு சேர்ந்த முதல் நாளே...' - அம்மா மேல ஆக்சன் எடுத்த மகன்...!
- 'நம்ம யாரு வம்பு தும்புக்கும் போறதில்ல...' 'பேசாம தூங்குவோம்...' 'என்ட்ரி ஆன திருடன்...' அடேய்... உன்ன மலை போல நம்பினேனே...! இப்படி கவுத்துட்டியே...!
- 'கையில டீ கிளாசை வச்சிட்டு...' 'கடை முன்னாடி நின்னு எதுக்கோ பக்கு வைக்கிறாரே...' - ஓ... இதான் அப்போ ப்ளானா...?!
- 'ஒரு நிமிஷத்துல கடன்.. ஆன்லைன்லயே பெறலாம்!' - ஆசை காட்டி பின்னால் ஆப்பு வைக்கும் 1,509 ஆப்ஸ்! ‘ரிசர்வ் வங்கியிடம் குவிந்த புகார்கள்!’.. பாயும் நடவடிக்கை!
- Breaking: நாளை முதல் இரவு எத்தனை மணி வரைக்கும் கடைகள் இயங்கலாம்...? - தமிழக அரசின் புதிய அறிவிப்பு...!