சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்திய பாஜக தலைவர்கள்.. பெரம்பலூரில் நெல்லைக்கண்ணன் கைது!
முகப்பு > செய்திகள் > தமிழகம்பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இருவரையும் பற்றி தகாத முறையில் பேசியதாக நெல்லைகண்ணனை கைது செய்ய வலியுறுத்தி சென்னையில் பாஜகவினர், மாபெரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பாஜகவின் முக்கிய தலைவர்கள் மத்திய முன்னாள் அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், பாஜகவின் மூத்த தலைவர் தேசிய செயற்குழு உறுப்பினர் மற்றும் முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் இல.கணேசன் , பாஜகவின் தேசிய செயலாளர் H.ராஜா, பாஜகவின் முன்னாள் மாநிலத் தலைவர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சி.பி.ராதாகிருஷ்ணன் ஆகிய நால்வரும் மெரினா கடற்கரை காந்தி சிலை அருகில் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதற்கென பாஜக தலைமை அலுவலகம் கமலாலயத்தில் 3.30 மணியளவில் புறப்பட்டு 4 மணி அளவில் காந்தி சிலையை அடைந்தனர். இந்நிலையில் நெல்லை கண்ணனை கைது செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொன்.ராதாகிருஷ்ணன், ஹெச்.ராஜா உள்ளிட்ட பாஜகவினர் கைது செய்யப்பட்டனர்.
எனினும் பிரதமர் மோடி, அமித்ஷா குறித்து அவதூறாக பேசியதாக பா.ஜ.க. அளித்த புகாரின் அடிப்படையில் நெல்லை கண்ணன் மீது 2 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. முன்னதாக உடல்நலக் குறைவு காரணமாக நேற்று மருத்துவமனையில் நெல்லை கண்ணன் அனுமதிக்கப்பட்டிருந்த நெல்லைக்கண்ணன் நேற்றைய தினம் பெரம்பலூரில் உள்ள ஒரு தனியார் விடுதியில் இருந்தபோது கைது செய்யப்பட்டார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'நான் அவரோட தீவிர பக்தன்'...'தினமும் பாலாபிஷேகம்'...'பிரதமர் மோடி'க்கு கோவில் கட்டிய விவசாயி!
- 'யார் இந்த ஜேக்கப்'?...'சென்னையில் படிப்பு'...'இந்தியாவ விட்டு கிளம்புங்க'...அதிரடி நடவடிக்கை!
- ‘இது கொடூரமான முன்னுதாரணம்’! தெலுங்கானா என்கவுண்டர் சம்பவத்துக்கு பாஜக எம்.பி கண்டனம்..!
- பாலியல் வன்கொடுமை.. பற்றியெரிந்த தீயுடன்.. 1 கிலோமீட்டர் 'ஓடிய' பெண்.. உயிருக்கு 'கடும்' போராட்டம்!
- 'நிர்பலாவா?'.. யார் சொன்னது?.. 'நான் சப்லா.. நான் மட்டுமில்ல..'.. 'கொதித்தெழுந்த நிர்மலா சீதாராமன்!'
- 'ஸ்டாலின் முதல்வராவார்!'.. 'நரேந்திரனுக்கு எந்த அதிகாரமும் கிடையாது'.. பாஜக துணைத்தலைவரின் சர்ச்சை பேச்சு!
- ஷிப்ட் போட்டு 'எம்எல்ஏ'-க்கள் பாதுகாப்பு.. '2 நிமிட' அவகாசத்தில்.. பாஜக கோட்டையை 'சரித்த' இளம்பெண்!
- இன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்!
- ‘முதல்வர் பதவியை ராஜினாமா செய்த ஃபட்னாவிஸ்’.. மகாராஷ்டிரா அரசியலில் நடந்த பெரிய ட்விஸ்ட்..! அடுத்த முதல்வர் யார்..?
- 'யார் இந்த நாகராஜ்'...'படிச்சது 8ம் கிளாஸ் தான்'...மலைக்க வைக்கும் பல்லாயிரம் கோடி சொத்து!