"ஸ்டாலின் பிரதமர் ஆக தாராளமா ஆசைப்படலாம்".. பாஜக நிர்வாகி நடிகை குஷ்பு பேட்டி! வீடியோ

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

நடிகை குஷ்பு, மு.க. ஸ்டாலின் பிரதமராவது குறித்த கேள்விக்கு பதில் அளித்துள்ளார். 

Advertising
>
Advertising

                            Images are subject to © copyright to their respective owners.

Also Read | "இதையும் பச்சைக் குத்தலாமா?".. இளம் தம்பதியின் வைரல் டாட்டூ.. பின்னணி தெரிஞ்சு லைக்குகளை அள்ளி வீசும் நெட்டிசன்கள்!!

தமிழ் சினிமாவில்  பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை குஷ்பு . தமிழ் மட்டுமல்லாது இந்தி மற்றும் தென்னிந்திய மொழி படங்களில் நடித்தவர்.

இயக்குனர் சுந்தர்.சியை 2000 ஆம் ஆண்டில் திருமணம் செய்து கோண்ட குஷ்புவுக்கு அவந்திகா, அனந்திதா என்ற இரு மகள்கள் உள்ளனர்.

2010 ஆம் ஆண்டு முதல் 2014-வரை திமுக கட்சியில் இருந்த குஷ்பு பின்னர் அக்கட்சியில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். 2020 வரை காங்கிரஸ் கட்சியில் இருந்த குஷ்பு, தற்போது பாஜக கட்சியின் செய்தி தொடர்பாளர் ஆக வலம் வருகிறார். கடந்த சட்டமன்ற தேர்தலில் பாஜக சார்பில் ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டு குஷ்பு தோல்வி அடைந்தார்.

சமீபத்தில் மத்திய அரசு, நடிகை குஷ்புவை தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினராக நியமனம் செய்துள்ளது. இந்நிலையில் விமான நிலையத்தில் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட குஷ்பு சில கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார். தமிழக முதல்வர் ஸ்டாலின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்படுவது குறித்த கேள்விக்கு பதில் அளித்த குஷ்பு, "நான் ஒன்னும் சொல்ல முடியாது. ஒவ்வொருவருக்கும் ஒரு கருத்து உண்டு. ஸ்டாலின் அவர்களுக்கு அந்த பிரதமர் ஆசை இருந்தது என்றால் தாராளமாக தன்னை ப்ரோமோட் பண்ணலாம்.

இந்திய நாட்டில் அதுவும் ஜனநாயக ரீதியாக யார் வேண்டுமானாலும் பிரதமர் ஆகலாம். முதலமைச்சர் ஆகலாம். ஆனால் அதற்கு மக்கள் வாக்களிக்க வேண்டும். இப்போது ஸ்டாலின் முதலமைச்சர் ஆக இருக்கார் என்றால் மக்கள் வாக்களித்ததால் தான். ஸ்டாலின் பிரதமர் ஆக ஆசைப்பட்டார் என்றால் தாராளமாக நிக்கலாம். மக்கள் வாக்களித்தால் பிரதமர் ஆகலாம். ஏன் இருக்க கூடாது." என குஷ்பு பதில் அளித்துள்ளார்.

தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் தனது 70-வது பிறந்தநாளை நேற்று கொண்டாடினார். இதனையடுத்து அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

Images are subject to © copyright to their respective owners.

தமிழக முதல்வர் முக.ஸ்டாலினுக்கு இந்திய நாட்டின் குடியரசு தலைவர், துணை குடியரசு தலைவர், பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, கேரள முதல்வர் பினராயி விஜயன், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட பல்வேறு அரசியில் கட்சி தலைவர்கள் மற்றும் திரைப்பிரபலங்கள் என பலரும் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர்.

Also Read | "2 பந்து வீசுற வரை பொறுமையா இருக்க கூடாதா?".. சுப்மன் கில் செஞ்ச வேலை.. கடுகடுத்த கவாஸ்கர்..!

BJP MEMBER, KUSHBOO, CM MK STALIN, PRIME MINISTER CANDIDATE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்