திடீரென டிரெண்டாகும் ‘ஆபாச’ வீடியோ.. செம ‘அதிர்ச்சியில்’ சோஷியல் மீடியா.. உடனடியாக பதவியை ராஜினாமா செய்த பாஜக தலைவர் கே.டி.ராகவன்..! என்ன நடந்தது..?
முகப்பு > செய்திகள் > தமிழகம்ஆபாச வீடியோ வெளியாகி சர்ச்சையான நிலையில், தமிழக பாஜக பொதுச்செயலாளர் பொறுப்பை கே.டி.ராகவன் ராஜினாமா செய்துள்ளார்.
தமிழக பாஜக பொதுச் செயலாளராக கே.டி.ராகவன் பொறுப்பு வகித்துவந்தார். இந்த நிலையில், இன்று (24.08.2021) அவர் மீது பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து தனது பொதுச்செயலாளர் பொறுப்பை ராஜினாமா செய்வதாக கே.டி.ராகவன் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்ட அவர், ‘தமிழக மக்களுக்கும், கட்சியினருக்கும் நான் யாரென்று தெரியும். என்னைச் சார்ந்தவர்களுக்கும் நான் யார் என்று தெரியும். நான் 30 வருடங்களாக எந்த ஒரு பிரதிபலனும் இன்றி பணியாற்றி வருகிறேன். இன்று காலை சமூக வலைதளங்களில் என்னைப் பற்றி ஒரு வீடியோ வெளிவந்ததை அறிந்தேன்.
என்னையும் என் கட்சியையும் களங்கப்படுத்த இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. இன்று மாநிலத் தலைவர் அண்ணாமலையைச் சந்தித்து ஆலோசனை செய்தேன். நான் என்னுடைய கட்சிப் பொறுப்பை ராஜினாமா செய்கிறேன். குற்றச்சாட்டுகளை மறுக்கிறேன். சட்டப்படி சந்திப்பேன். தர்மம் வெல்லும்’ என கே.டி.ராகவன் பதிவிட்டுள்ளார். இந்த சம்பவம் தற்போது தமிழ்நாட்டில் பரபரப்பை கிளப்பி உள்ளது.
மற்ற செய்திகள்
'சென்னையில் நிலநடுக்கம்?'... 'யாரும் பயப்படாதீங்க'... 'தமிழ்நாடு வெதர்மேன்' வெளியிட்ட முக்கிய பதிவு!
தொடர்புடைய செய்திகள்
- திடீர் டெல்லி பயணம்!.. பாஜகவில் இணைகிறாரா அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி?.. பின்னணி என்ன?
- முதல்வர் பதவியேற்ற அதே நாளில் ‘ராஜினாமா’ செய்தார் எடியூரப்பா.. என்ன காரணம்..? பரபரக்கும் அரசியல் களம்..!
- குஷ்புவின் ட்விட்டர் கணக்கை முடக்கிய மர்ம நபர்கள்!.. பின்னணி யார்?.. சைபர் கிரைம் போலிசார் கிடுக்கிப்பிடி விசாரணை!
- VIDEO: 'கொங்கு நாடு' சர்ச்சை முடிவுக்கு வந்தது!.. பின்னணியை விளக்கி... உண்மையை உடைத்த மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்!
- "கேள்வி கேட்க நீங்கள் யார்"?.. பாஜக நிர்வாகியிடம் உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி!.. 'நீட் தேர்வு பாதிப்பு பற்றிய ஆய்வுக்குழு செல்லுமா?.. செல்லாதா?'
- நான் ஜெயிச்சா வரும்னு சொன்னேன்...! 'சொன்ன மாதிரியே வந்திடுச்சு பாருங்க...' - வானதி சீனிவாசன் போட்ட 'வைரல்' ட்வீட்...!
- 'இவங்க இரண்டு பேரில் ஒருவரா'?... 'எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள தலைவர் பதவி'... ரேஸில் முந்தப்போவது யார்?
- தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் உள்பட... 43 புதிய மத்திய அமைச்சர்கள் பதவியேற்பு!.. பிரதமர் மோடியின் கேபினட் 2.0 பின்னணி என்ன?
- 'மத்திய அமைச்சர் ஆகும் எல். முருகன்'... 'அடுத்த பாஜக தலைவர் யார்'?... அமைச்சர் பதவி தேடி வர காரணமாக இருந்த சபதம்!
- ‘யாருமே எதிர்பார்க்கல’!.. டெல்லியில் நேருக்குநேர் சந்தித்த ‘துரைமுருகன்-எல்.முருகன்’.. அப்போ செய்தியாளர் கிண்டலாக கேட்ட கேள்வி.. ‘நச்’ன்னு பதிலளித்த துரைமுருகன்..!