எச்.ராஜாவுக்கு புதிய நெருக்கடி!.. கைவிரித்த உயர்நீதிமன்றம்!.. 2 ஆண்டுகளுக்கு பின் சூடுபிடிக்கும் விசாரணை!
முகப்பு > செய்திகள் > தமிழகம்நீதிமன்றத்தை அவதூறாக பேசிய வழக்கில் பாஜக நிர்வாகி எச்.ராஜாவுக்கு புதிய சிக்கல் உருவாகியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் கடந்த 2018ம் ஆண்டு விநாயகா் சதுா்த்தி விழாவுக்கு மேடை அமைப்பதில் ஏற்பட்ட சர்ச்சையில் நீதிமன்றத்தையும், காவல் துறையினரையும் விமா்சித்துப் பேசியதாக எச். ராஜா மீது திருமயம் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனா். இந்த விவகாரத்தில் உயர்நீதிமன்றம் மதுரைக்கிளையில் நேரில் ஆஜராகி அவா் மன்னிப்பு கோரினாா்.
இந்நிலையில், அவா் சென்னை உயர்நீதிமன்றம் மதுரைக்கிளையில் முன்ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவில், இந்த வழக்கின் விசாரணைக்காக கீழமை நீதிமன்றத்தில் ஜூலை 23 ஆம் தேதி நேரில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
இதற்கிடையே பாஜக நிர்வாகி எச். ராஜா, "நான் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க உள்ளேன். ஆனால், திருமயம் நீதித்துறை நடுவா் மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையில், நான் தலைமறைவாக இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனா். என் மீது அரசியல் காழ்ப்புணா்ச்சி காரணமாக இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. எனவே, இந்த வழக்கில் போலீசார் என்னை கைது செய்யாமல் இருக்க முன்ஜாமீன் வழங்க வேண்டும்" என தனது மனுவில் குறிப்பிட்டிருந்தாா்.
அதைத் தொடர்ந்து, இந்த மனு சென்னை உயர்நீதிமன்றம் மதுரைக்கிளையில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது எச்.ராஜாவின் முன்ஜாமீன் மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மேலும், கீழமை நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளதால் அங்கு ஆஜராக எச்.ராஜாவுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- "கேள்வி கேட்க நீங்கள் யார்"?.. பாஜக நிர்வாகியிடம் உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி!.. 'நீட் தேர்வு பாதிப்பு பற்றிய ஆய்வுக்குழு செல்லுமா?.. செல்லாதா?'
- "நிஜ வாழ்க்கையிலும் ஹீரோவாக இருக்க வேண்டும்!".. நடிகர் விஜய்க்கு கடும் கண்டனம்!.. அபராதம் விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!
- 'பப்ஜி' மதன் கைது!.. 'குவியும் புகார்களால்... கூடிக்கொண்டே போகும் சிக்கல்!.. உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
- 'யூடியூபர் மதன்... முன் ஜாமின் கோரி மனு தாக்கல்'!.. 'வழக்கறிஞரை வறுத்தெடுத்த நீதிபதி'!.. உயர் நீதிமன்றத்தில் தெறி சம்பவம்!!
- 'தமிழ்நாட்டில் வனப்பகுதி ஆக்கிரமிப்பு குறித்த சட்டங்கள் வலுப்பெறுகிறதா'?.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி!.. சூழலியலாளர்கள் வரவேற்பு!
- ‘நோய் தொற்று ஏற்படும் அபாயம் இருக்கு’!.. இனி உணவுப் பொருட்களை இப்படி ‘பார்சல்’ செய்யக்கூடாது.. சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு..!
- 'ஸ்டாலின் நல்லா தான் ஆட்சி பன்றாரு, ஆனா'... 'ஏங்க இதெல்லாம் ஒரு வழக்கா'?... வழக்கு போட்டவருக்கு காத்திருந்த அதிர்ச்சி கிளைமாக்ஸ்!
- 'இனிமேல் இந்த காரணத்தை சொல்லி பெற்றோர்கள் தப்பிக்க முடியாது'... வரதட்சணை தொடர்பான வழக்கில் அதிரடி!
- 'வேணும்னே அப்படி சொல்லல...' 'ஆக்சுவலா நான் என்ன சொல்ல வந்தேன்னா...' - முன்ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்த மன்சூர் அலிகான்...!
- 'முதல்ல பிரண்ட்ஸா தான் இருந்தோம்'... 'போக போக காதலா மாறிடிச்சு'... 'சென்னை உயர்நீதிமன்றத்தை நாடிய இளம்பெண்கள்'... அதிரடி உத்தரவு!