விழுந்தது ஒரே ஓட்டு.. "குடும்பத்துல கூட யாருமே ஓட்டு போடல.." ஏமாற்றத்தில் பாஜக வேட்பாளர்

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தமிழகத்தில் மொத்தம் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகளுக்கு நேற்று முன்தினம் (பிப்ரவரி 19) தேர்தல் நடத்தப்பட்டது.

Advertising
>
Advertising

ஒரே வாக்கில் மாறிய முடிவு.. பாஜக வேட்பாளர் அசத்தல் வெற்றி

இந்த தேர்தலில், சுமார் 61 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தது. அதிக பட்சமாக தருமபுரி மாவட்டத்தில், சுமார் 80 சதவீதமும், குறைந்தபட்சமாக சென்னையில் சுமார் 43 சதவீத வாக்குகளும் பதிவாகியிருந்தது.

இந்த தேர்தலுக்காக, மொத்தம் 31,150 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கபட்டிருந்தது. மேலும், தேர்தலுக்காக 1 லட்சத்து 60 ஆயிரம் மின்னணு இயந்திரங்களும் பயன்படுத்தப்பட்டன.

வாக்குப்பதிவு முடிந்த பிறகு, மின்னணு வாக்கு இயந்திரங்கள் அனைத்தும், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையங்களில் வைக்கப்பட்டது. தொடர்ந்து, 24 மணி நேர போலீஸ் பாதுகாப்பும் வழங்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இன்று (பிப்ரவரி 22) காலை சுமார் 8 மணி முதல், தமிழகம் முழுவதும் சுமார் 270 மையங்களில், வாக்கு எண்ணும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. தபால் ஓட்டுகள் முதலில் எண்ணப்பட்ட நிலையில், பிறகு வாக்கு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டது.

பல வார்டுகளுக்கான முடிவுகள் தொடர்ந்து வெளிவந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில், ஈரோடு மாவட்டம் பவானிசாகர் பேரூராட்சி, 11 ஆவது வார்டில், பாஜக சார்பில் போட்டியிட்டிருந்த நரேந்திரன், ஒரே ஒரு ஓட்டு மட்டுமே பெற்றுள்ளார். அவருக்கு குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் என யாரும் வாக்களிக்கவில்லை என்பதால், அவர் அதிகம் ஏமாற்றம் அடைந்து போனதாக கூறப்படுகிறது.

தேர்தல் முடிவுகள் : முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வசிக்கும் வார்டை கைப்பற்றிய திமுக

BJP CANDIDATE, GET ONE VOTE IN LOCAL BODY ELECTION, பாஜக வேட்பாளர்

மற்ற செய்திகள்