கேக் வெட்டி ‘பர்த்டே’ கொண்டாட்டம்.. ‘வினையாக முடிந்த விழா’.. பெண்கள் உட்பட 10 பேர் படுகாயமடைந்த அதிர்ச்சி..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சீர்காழி அருகே பிறந்தநாள் கொண்டாடத்தின்போது ஏற்பட்ட மோதில் 10 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertising
Advertising

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே சட்டநாதபுரம் ஆற்றங்கரை தெருவை சேர்ந்தவர் விஜய் (25). இவர் தனது பிறந்தநாளை கொண்டாடும் விதமாக நேற்று உறவினர்கள் மற்றும் நண்பர்களை அழைத்து தெருவில் கேக் வெட்டியுள்ளார். அப்போது அங்கு கூடியிருந்தவர்கள் சத்தம் போட்டதாக கூறப்படுகிறது. இதை அதே தெருவை சேர்ந்த சிவராஜ் (30) என்பவர்ன் சத்தம் போடாமல் கொண்டாடுங்கள் என அவர்களை கண்டித்துள்ளார்.

இதனால் அவருக்கும், பிறந்தநாள் கொண்டாடியவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. திடீரென இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டுள்ளனர். இதில் படுயாமடைந்த பெண்கள் உட்பட 10 சீர்காழி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மோதில் ஈடுபட்ட 14 பேரை கைது செய்துள்ளனர். பிறந்தநாள் கொண்டாடத்தில் ஏற்பட்ட சண்டையில் 10 பேர் படுகாயமடந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்