இளையராஜா பாட்டு பாடுனா.. பிரியாணி விருந்து.. வைரலாகும் போஸ்டர்

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சர்வதேச வேட்டித் தினமான இன்று (ஜூன் 6), ஆம்பூர் பிரியாணி கடை ஒன்று, பிரியாணி பிரியர்களுக்காக வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு ஒன்றின் போஸ்டர், அதிகம் வைரலாகி வருகிறது.

இளையராஜா பாட்டு பாடுனா.. பிரியாணி விருந்து.. வைரலாகும் போஸ்டர்
Advertising
>
Advertising

பொதுவாக, விருப்பமான உணவு என்றாலே நமது ஊர்க்கார்கள், அதிகம் சொல்லும் பேராக பிரியாணி தான் நிச்சயம் இருக்கும்.

அந்த வகையில், பிரியாணி உணவு, மக்கள் மத்தியில் அதிகம் வரவேற்பைப் பெற்ற ஒன்றாக உள்ளது. குழந்தைகள் மற்றும்  பெரியவர்கள் வரை பலரும் விரும்பி உண்பதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.

வேட்டித் தினம் ஸ்பெஷல்

இந்நிலையில்,செங்கல்பட்டு மாவட்டம், சோத்துப்பாக்கம் பகுதியில் அமைந்துள்ள ஆம்பூர் பிரியாணி கடை ஒன்று, சர்வதேச வேட்டித் தினத்தை முன்னிட்டு அசத்தல் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதே போல, இளையராஜா ரசிகர்கள் மத்தியிலும், இந்த அறிவிப்பு அதிகம் வைரலாகி வருகிறது.
biriyani feast for the people singing ilaiyaraja songs

அசத்தல் ஆஃபர்

அதாவது, இளையராஜா இசையமைத்த எந்த ஒரு பாடலைப் பாடினாலும், அந்த நபர்களுக்கு பிரியாணி விருந்து அளிக்கப்படும் என அந்த உணவகம் வெளியிட்ட போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதே போல, பக்கெட் பிரியாணி வாங்குபவர்களுக்கும் ஒரு வேட்டி இலவசமாக வழங்கப்படும் என அறிவித்திருந்தது.

மக்கள் ஏமாற்றம்

இதுகுறித்த தள்ளுபடி, இன்று காலை 11:30 மணி முதல் 3 மணி வரை தான் என குறிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பான போஸ்டர்கள், தற்போது அதிகம் வைரலாகி வருகிறது. இது குறித்த ஆஃபருக்கான நேரம் முடிந்து விட்டது என்பதால், சிலர் ஏமாற்றத்திற்குள்ளும் ஆகியுள்ளனர்.

இருந்த போதும், சர்வதேச வேட்டி தினத்தின் சிறப்பை பறைசாற்ற, வினோதமான தள்ளுபடி மற்றும் வேட்டி இலவசம் என அறிவிப்பை முன்னெடுத்த உணவகத்தை பலரும் பாராட்டியும் வருகின்றனர்.

ILAYARAAJA

மற்ற செய்திகள்