தமிழகத்திலும் திடீரென இறந்த ‘காகங்கள்’.. பறவை காய்ச்சலா..? அதிர்ச்சியை கிளப்பிய சம்பவம்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

பழவேற்காடு பகுதியில் திடீரென 4 காகங்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தி வரும் சூழ்நிலையில் பறவைகள் மர்மமாக உயிரிழக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான், கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் காகங்கள், கோழிகள் மற்றும் வாத்துகள் திடீரென உயிரிழக்க ஆரம்பித்தன. இதனால் பறவை காய்ச்சல் பரவும் ஆபாயம் உள்ளதாக அஞ்சப்பட்டது. இதன்காரணமாக கேரளாவில் இருந்து தமிழகம் வரும் கோழிகள் பல்வேறு சோதனைகளுக்கு பின்பே அனுமதிக்கப்படுகிறது.

இந்த நிலையில் திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு குளத்துமேடு பகுதியில் திடீரென 4 காகங்கள் உயிரிழந்துள்ளன. இறந்த காகங்களில் மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு ஆய்வுகள் நடைபெற்று வருகிறது. இதேபோல் நெல்லை மாவட்டத்திலும் கோழிகள், காகங்கள் இறந்து கிடந்துள்ளன.

இதுகுறித்து கால்நடைத்துறை அதிகாரி கூறுகையில், ‘நெல்லையில் பறவை காய்ச்சல் வருவதற்கான வாய்ப்புகள் இல்லை. மழைக்காலம் என்பதால் ஆடு, மாடுகள் மற்றும் கோழிகளை சில நோய்கள் தாக்கும் அபாயம் உள்ளது. அதற்கும் பறவை காய்ச்சலுக்கும் தொடர்பில்லை. ஏதாவது பறவைகள் இறப்பு தென்பட்டால் உடனடியாக கால்நடைத்துறையை தொடர்பு கொள்ள பொதுமக்களை கேட்டுக் கொள்கிறோம்’ என தெரிவித்துள்ளனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்