பைக்கர் TTF வாசன் சரணடைந்தை அடுத்து, தற்போது ஜாமீனில் விடுவிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
கோவையில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக, பைக்கர் TTF வாசன் என்பவர், பிரபல யூடியூபரான் ஜி.பி. முத்து என்பவரை தனது இரு சக்கர வாகனத்தில் அமர வைத்து சுமார் 150 கிலோ மீட்டர் வேகத்தில் வாகனத்தை ஓட்டியதுடன் இது தொடர்பான வீடியோ ஒன்றையும் வெளியிட்டிருந்தார்.
பொது இடத்தில், அதிக வாகனம் சென்று கொண்டிருக்கும் போது, விதிகளை மீறி செயல்பட்டதாக TTF வாசன் மீது போத்தனூர் மற்றும் சூலூர் காவல் நிலையங்களில், தலா இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இந்திய தண்டனை சட்டத்தின் கீழ், பொது இடத்தில் அஜாக்கிரதையாக வாகனம் ஓட்டுதல் என்ற பிரிவிலும், மோட்டார் வாகன சட்டப்படி பில்லியன் ரைடர் ஹெல்மெட் அணியாதது, ஆபத்தை விளைவிக்கும் வகையில் வாகனம் ஓட்டுதல் ஆகிய இரண்டு பிரிவு என மொத்தம் 3 பிரிவுகளில் TTF வாசன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
மேலும், இந்த வழக்குகள் தொடர்பாக TTF வாசனை போலீசார் தேடி வந்த நிலையில், மதுக்கரை உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி சரவணன் முன்பு அவர் சரணடைந்ததாகவும் தகவல்கள் வெளியானது.
நேற்று காலை சரணடைந்த வாசன், மாலை வரை நீதிமன்ற கூண்டில் அமர்ந்திருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது. இதனையடுத்து, இரண்டு நபர்களின் உத்தரவாதம் கொடுத்த பின், மாலையில் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். போத்தனூர் வழக்கில் வாசன் சரணடைந்த நிலையில், சூலூர் காவல் நிலையத்தில் பதியப்பட்ட வழக்கிற்காக வருகின்ற வெள்ளிக்கிழமை (30.09.2022) TTF வாசன் ஆஜராக இருப்பதாக காவல்துறை வட்டார தரப்பில் இருந்து நம்பத் தகுந்த தகவல்கள் கிடைத்துள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- "இது மனிதாபிமானமற்ற செயல்.! திருமணம் உடல் சார்ந்தது மட்டும் இல்ல".. சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு அட்வைஸ்..!
- "நண்பன்னு நம்பி அழைப்பிதழ் கொடுக்க போன இளைஞர்".. கொலை வழக்கு தீர்ப்பில் பரபரப்பு திருப்பம்.!
- ஒரு ஆயுள் மற்றும் 375 வருஷம் சிறை தண்டனை.. அமெரிக்காவையே நடுங்க வச்ச சம்பவம்.. நீதிமன்றம் வெளியிட்ட பரபரப்பு தீர்ப்பு.. முழுவிபரம்..!
- உலக அளவில் பிரபலமான வாழைப்பழ கலை படைப்பு.. இப்போ இப்படி ஒரு சிக்கல் வந்துடுச்சாம்.. நீதிபதி சொன்ன சுவாரஸ்ய தகவல்..!
- "ஒன்னு அது இருக்கணும் இல்ல நாங்க இருக்கணும்.. டெய்லி இதே தொல்லையா இருக்கு".. சேவல் செய்த சேட்டை.. கோர்ட்டுக்கு போன வயசான தம்பதி..!
- 20 ரூபாயால் தொடரப்பட்ட வழக்கு.. "சுமார் 22 வருசத்துக்கு பிறகு வந்த பரபரப்பு தீர்ப்பு.!!"
- தமிழகத்தையே உலுக்கிய கச்சநத்தம் வழக்கு.. 27 பேருக்கும் ஒரே தண்டனை.. நீதிபதி வெளியிட்ட பரபரப்பு தீர்ப்பு..!
- "மனைவி தன்னோட கணவனுக்கு செய்யக்கூடிய அதிகபட்ச கொடுமை இது".. விவாகரத்து வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் வெளியிட்ட கருத்து..!
- 40 வருஷமா செப்டிங் டேங்கில் மனைவியின் உடலை வைத்த 89 வயது கணவர்..? பரபரப்பு சம்பவம்.!
- "என்ன அவ கூட சேர்த்து வைங்க.." பிரித்த குடும்பம்.. நீதிமன்றத்தை நாடிய இளம்பெண்.. கடைசியில் நீதிபதி போட்ட உத்தரவு