'பாரதி' பாப்பா இனிமேல் 'நம்ம' வீட்டு குழந்தை...! 'நவம்பர் 6 தான் கடைசி தேதி, அதுக்குள்ளே ஊசி செலுத்தியாகணும்...' - உயிரை காக்க பேருதவி செய்த Behindwoods Subscribers...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கடந்த சில வாரங்களுக்கு முன் வினோத நோயால் பாதிக்கப்பட்ட பாரதி என்ற குழந்தைக்கு சுமார் 16 கோடி மதிப்புள்ள தடுப்பூசி போடவேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.
குழந்தையின் உயிரை காப்பாற்ற இணையம் வழியாக கிரௌட் ஃபண்டிங் மூலம் நிதி திரட்டப்பட்டு வருகிறது. இந்த குழந்தைக்கு எஸ்எம்எ ஜீன் குறைபாடு இருப்பதாகவும், இந்த குறைபாடு குழந்தைக்கு தசை சிதைவை ஏற்படுத்தி செயல்பட விடாமல் தடுக்கும் என மருத்துவ துறையினர் கூறியுள்ளனர்.
மேலும், பாரதி குழந்தையின் நிலை குறித்து Behindwoods தளத்தில் செய்தி வெளியிட்ட பின்னரே இந்த நோயின் தீவிரம் குறித்து மக்களிடம் வெகுவாகப் பரவியது.
மேலும் அந்த குழந்தைக்கு உதவும் வகையில் இந்தியா, அமெரிக்கா, சிங்கப்பூர் உள்ளிட்ட பல நாடுகளிலிருந்து பணம் வரத் தொடங்கியது.
எஸ்எம்எ ஜீன் குறைபாடிற்கு சுமார் 16 கோடி மதிப்புள்ள தடுப்பூசி போடவேண்டும் என மருத்துவர்கள் கூறியுள்ள நிலையில் இதுவரை சுமார் 9 கோடி ரூபாய் அளவிற்கு பணம் திரட்டப்பட்டுள்ளதாக பாரதியின் தாய் தெரிவித்துள்ளார்.
மேலும், தற்போது நாட்கள் செல்ல செல்ல வரும் பணத்தின் அளவு குறைந்து வருவதாகவும், தன் குழந்தையின் உயிரை காப்பாற்ற உதவுமாறும் பாரதியின் தாய் கண்ணீர் மல்க கோரிக்கை வைத்துள்ளார்.
அதோடு, நவம்பர் 6-ஆம் தேதிக்குள் தடுப்பூசி போட இருப்பதால் குறைந்த நாட்களுக்குள் அதிக பணம் தேவைப்படுகிறது என்றும், இதுவரை இரண்டு லட்சம் பேர் பண உதவி அளித்துள்ளதாகவும் அவரது அம்மா கூறியுள்ளார்.
இந்த சம்பவத்தை அறிந்த பிஹைண்ட்வுட்ஸ் பவுண்டேஷன் தன் பங்கிற்கு பாரதி பாப்பாவின் மருத்துவ செலவிற்காக நிதி திரட்டி இரண்டாவது பெரிய தொகையாக ரூ. 19,91,913 பணத்தை அவர்களுக்கு அளித்துள்ளது.
இன்னும் 70 ஆயிரம் பேர் ஆளுக்கு ஆயிரம் ரூபாய் அளித்தால் அவர்களுக்கு தடுப்பூசி போட வேண்டிய தொகை வந்துவிடும் என்று பாரதியின் அம்மா மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
பாரதி பாப்பா குறித்து கேள்விபட்ட நடிகர் விஜய் சேதுபதி மூன்று நாட்களுக்கு முன் 20 லட்ச ரூபாய் பண உதவி அளித்து ஆறுதல் கூறியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
பாரதி குழந்தைக்கு ஊசி செலுத்தப்பட்டு விட்டதாக பரவிவரும் தகவலில் உண்மை இல்லை என்று தெரிவித்த பாரதியின் அம்மா, நல்ல உள்ளங்கள் அனைவரும் தங்களுக்கு உதவிடுமாறு வேண்டிக்கேட்டுள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- தாலிபான்களிடம் இருந்து தப்பித்து... பாதுகாப்பாக இந்தியா வந்த மகிழ்ச்சி!.. மூச்சுமுட்ட பச்சிளம் குழந்தைக்கு முத்தம் கொடுத்த சிறுமி!
- 'அழாத டா தங்கம்!.. உனக்கு நான் இருக்கேன்!'.. காபூல் விமான நிலையத்தில்... பெற்றோரைப் பிரிந்த குழந்தை!.. தாயாக மாறிய அயல் நாட்டு ராணுவ வீராங்கனை!
- நாம வாழுற 'காலத்துல' தான் 'இப்படி'யெல்லாம் நடக்குதா...? 'ஃபோட்டோல பாக்குறப்போவே ரொம்ப வேதனையா இருக்கு...' - உருக வைக்கும் நிகழ்வு...!
- 'எவ்ளோ நேரம் தான் மரத்துலையே இருப்பீங்க...' 'கொஞ்சம் இறங்கி வந்து நாங்க சொல்றத கேளுங்க...' - சுகாதாரத் துறை அதிகாரிகள் வந்த உடனே 'தெறித்து' ஓடிய கிராம மக்கள்...!
- 'கர்ப்பமான 10 மாசத்தில் பிரசவம் நடக்குமே'... 'பதைபதைப்பில் இருந்த கணவர்'... 'சிசேரியன்' முடிந்ததும் குழந்தையை பார்த்து ஆச்சரியத்தில் உறைந்து போன மருத்துவர்கள்!
- கட்டுப்பாடுகளை தளர்த்துறோம்...! இனிமேல் 'எத்தனை' குழந்தைகள் வரை பெற்றுக் கொள்ளலாம்...? - அதிரடி 'அறிவிப்பை' வெளியிட்ட சீனா...!
- வயிற்று வலியால் துடித்த பெண்ணுக்கு ‘பாத்ரூமில்’ காத்திருந்த இன்ப அதிர்ச்சி.. இத்தனை மாசம் இது எப்படி தெரியாம போச்சு..? அதிர்ந்துபோன மருத்துவர்கள்..!
- 'குழந்தைக்கு பெயர் வைக்குமாறு...' 'முதல்வரிடம் வேண்டுகோள் விடுத்த தொண்டர்...' மைக்ல 'அந்த' பெயர சொன்னப்போ... 'ஒரு நிமிஷம் அந்த இடமே அதிர்ந்து போற அளவுக்கு...' - ஆர்ப்பரித்த பொதுமக்கள்...!
- VIDEO: 'இந்த அன்பு செல்லத்திற்கு...' 'பிரச்சாரத்தில் குழந்தைக்கு பெயர் சூட்டிய சீமான்...' - பெயரைக் கேட்டதும் ஆர்ப்பரித்து கொண்டாடிய மக்கள்...!
- 'கர்ப்பம்னு நம்ப வச்சாச்சு...' 'வயிறு பெருசாகலையே...' குழந்தை எங்கன்னு கேட்டா என்ன பண்றது...? 'அதற்காக போடப்பட்ட திட்டம்...' - பெண்ணின் உருக்கமான வாக்குமூலம்...!