'கல்யாணமாகி ஒரு வருஷம் தான் ஆச்சு'...'சென்னையில் நடந்த பயங்கரம்'...பீகார் இளைஞனின் பகீர் வாக்குமூலம் !
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டையில், பிளாஸ்டிக் தொழிற்சாலை உரிமையாளர் கொலை செய்யப்பட்ட வழக்கில் பீகார் இளைஞர் அளித்துள்ள வாக்குமூலம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த பிரபாகரன், அம்பத்தூர் தொழிற்பேட்டை பகுதியில் 10 ஆண்டுகளாக சிறிய அளவிலான பிளாஸ்டிக் தொழிற்சாலையை நடத்தி வந்தார். இவருக்கும் நந்தினி என்ற பெண்ணுக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்ற நிலையில், 4 மாத ஆண் குழந்தையும் உள்ளது. வேலையில் இருந்தாலும் பிரபாகரன் அவ்வப்போது வீட்டிற்கு தொலைபேசியில் பேசுவது வழக்கம்.
சம்பவத்தன்று தொழிற்சாலைக்கு வந்த பிரபாகரன் வீட்டிற்கு தொலைபேசியில் அழைத்து பேசவில்லை. இரவு வரை அவர் வீட்டிற்கும் வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவரது குடும்பத்தினர் தொழிற்சாலைக்கு வந்து பார்த்தபோது அது வெளியில் பூட்டி இருந்ததால், பல்வேறு இடங்களில் பிரபாகரனை தேடியுள்ளனர். இதையடுத்து காவல்நிலையத்தில் அவரது குடும்பத்தினர் புகார் அளித்தார்கள்.
இதையடுத்து விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் பிரபாகரனின் செல்போன் அழைப்புகளை ஆய்வு செய்து, சந்தேகமடைந்து தொழிற்சாலைக்குள் சென்று பார்த்த போது, பிரபாகரன் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். அவரது உடலை கைப்பற்றிய அம்பத்தூர் தொழிற்பேட்டை போலீசார், அங்கிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது, பிரபாகரனிடம் சில நாட்களுக்கு முன் வேலைக்குச் சேர்ந்த இருவர் ஓய்வறையிலிருந்து தப்பியோடுவது பதிவாகியிருந்தது.
இதனைத்தொடர்ந்து தனிப்படை அமைத்த காவல்துறையினர் தப்பி சென்ற இருவரையும், பீகார் சென்று கைது செய்தனர். இருவரில் ரோஷன் என்பவனையும் 17 வயது சிறுவன் ஒருவனையும் விசாரித்தபோது அவன் அளித்த வாக்குமூலம் காவல்துறையினரை அதிரச்செய்தது.
''வேலைக்குச் சேர்ந்த 5 வது நாளிலேயே பிரபாகரனிடம் இருவரும் செலவுக்குப் பணம் கேட்டதாகவும், பிரபாகரன் தரமறுத்ததால் ஆத்திரமடைந்து இரும்பு கம்பியால் அடித்துக் கொன்றதாக'' வாக்குமூலம் கொடுத்துள்ளார்கள். இதற்கிடையே பிரபாகரனை கொலை செய்த பின்பு அவரது சட்டைப்பையில் இருந்த ஆயிரத்து 500 ரூபாய் பணம், செல்போன், பீரோவில் வைத்திருந்த ஒரு லட்ச ரூபாய் ரொக்கம் உள்ளிட்டவற்றை எடுத்துக்கொண்டு தப்பியோடியதாகவும் போலீசார் கூறினர்.
புதிய நபர்களை பணியமர்த்தும் முன் காவல் துறையினர் மூலம் வழங்கப்படும் நன்னடத்தை சான்று வாங்கிய நபர்களாக என்பதையும், அவர்களின் பின்னணியும் முழுமையாக தெரிந்து கொள்ளாமல் ஊதியம் குறைவு என்பதற்காக இது போன்ற நபர்களை வேலைக்கு அமர்த்துவதால் எத்தகைய ஆபத்து ஏற்படுகிறது என்பதற்கு இந்த சம்பவம் உதாரணம்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- முன்கூட்டியே 'திட்டமிட்டு' பஞ்சர் செய்து.. 'உதவி' செய்வது போல நடித்தோம்.. 'அதிர' வைத்த கொலையாளிகள்!
- ‘அரளி விதை கலந்த பாலை குடித்த 5 மாத குழந்தை’.. ‘தலைமறைவான தாய்’.. வெளியான பகீர் தகவல்..!
- Video: படித்திருந்தாலும்.. அவர் 'சகோதரியை' தான் அழைத்தார்.. '100-க்கு' கால் செய்யவில்லை!
- அவருக்கு 'உதவுவது' போல நடித்து.. பெண் மருத்துவர் 'கொலை'யில்.. புதிய திருப்பம்!
- 'கல்யாணம் பண்றேன்'னு சொன்னான்'...'நம்பி போன பொண்ணு'...காஞ்சிபுரத்தை அதிரவைத்த 'கர்ப்பிணி' மரணம்!
- ‘கீரித்தலையன்’னு என்பேர கிண்டல் பண்ணான்’! ‘அதான் கோபத்துல..!’ சென்னையில் கொத்தனார் கொடுத்த பகீர் வாக்குமூலம்..!
- இன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்!
- ‘பைக் பஞ்சர்’.. ‘ஃபோன் ஸ்விட்ச் ஆஃப்’.. ‘எரிந்த நிலையில்’ சடலமாக மீட்கப்பட்ட.. ‘பெண் மருத்துவருக்கு’ நடந்த நடுங்க வைக்கும் சம்பவம்..
- உன் தங்கச்சிய 'தூக்கிட்டு' போய் தாலி கட்டுறேன்.. டிக் டாக்கில் சவால்.. இளைஞர் 'கொலையில்' புதிய 'டுவிஸ்ட் '
- வீட்டில் ‘கோபித்துக்கொண்டு’ ரயில் நிலையம் வந்த சென்னை மாணவி.. ‘ஆறுதலாக பேசிய இளைஞரால் அடுத்து நடந்த கொடூரம்’..