'பிகில்' சிறப்புக்காட்சியை ரசிக்க.. திரண்ட ரசிகர்கள்.. 'போலி' கும்பலிடம் சிக்கி.. கடும் ஏமாற்றம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கிளியோபட்ரா மற்றும் கே.எஸ்.பி.எஸ் கணபதி கலையரங்கம் ஆகிய இரு திரையரங்குகளில் வெள்ளிக்கிழமை காலை 4 மணி பிகில் திரைப்படத்தின் சிறப்புக்காட்சிக்கு அந்த மாவட்ட ரசிகர் மன்றத்தலைவர் ஏற்பாடு செய்திருந்தார். நள்ளிரவு 1 மணி அளவில் 600 ரசிகர்கள் மட்டுமே அமரும் வசதி கொண்ட திரையரங்கு வாசலில் 1000 ரசிகர்கள் கையில் டிக்கெட்டுடன் திரண்டதால் அங்கு கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் ரசிகர்களிடம் இருந்து டிக்கெட்டுகளை வாங்கி சோதனை செய்தனர். அதில் ஏராளமானோர் போலி டிக்கெட்டுடன் வந்தது கண்டறியப்பட்டது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி ஆனந்தராஜ், அவரது உதவியாளர் மோகன்பாபு, போலி டிக்கெட்டுகளை அச்சடித்து கொடுத்த செல்வின், டிக்கெட்டை வடிவமைத்து கொடுத்த உமர்பாரூக் ஆகியோரை கைது செய்தனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில் சர்கார் படத்துக்கு 100 டிக்கெட்டுகள், விஸ்வாசம் படத்துக்கு 300 டிக்கெட்டுகள் அச்சடித்து விற்றதாகவும் அப்போது பெரிய அளவில் பிரச்சினைகள் எழவில்லை என்பதால் மீண்டும் இதுபோல செய்ததாகவும் தெரிவித்துள்ளனர். தற்போது போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'பிகில்' சிறப்பு காட்சி: 'ஆர்வக் கோளாறால்' இப்படியெல்லாம் பண்றாங்க... அமைச்சர் கடம்பூர் ராஜு!
- '1 மணிக்கு ரிலீஸ் ஆகவேண்டிய படம்'.. 'அடித்து.. உடைத்து'.. பேனரை கிழித்த'.. 'பிகில்' ரசிகர்கள்!.. வீடியோ!
- 'பிகில்' சிறப்புக்காட்சிக்கு.. தமிழக அரசு 'அனுமதி'.. வெறித்தன 'கொண்டாட்டத்தில்' ரசிகர்கள்!
- 'அதெப்படிங்க காட்சி வைக்கலாம்?'.. 'கொதிக்கும் கட்சி'.. தியேட்டரில் ருத்திராட்சம் விநியோகிக்கப்படும் என அறிவிப்பு!
- இன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்!
- ‘இதுக்கெல்லாம் அஞ்சக்கூடாது’... ‘பிகில்’ ஸ்பெஷல் ஷோ சர்ச்சை... சீமான் பதில்!
- ‘பிகில், திகில் எதுவா இருந்தாலும் சட்டம் எல்லோருக்கும் ஒன்னுதான்’.. அமைச்சர் ஜெயக்குமார்..!
- இன்றைய முக்கியச் செய்திகள்.. ஓரிரு வரிகளில்.. ஒரு நிமிட வாசிப்பில்..!
- வெறித்தனம்.. என் 'தளபதி' தான் தூளு.. யாருப்பா இந்த சுட்டி?.. வைரல் வீடியோ!
- 'சுபஸ்ரீ மரணம்' குறித்த பேச்சு...படம் ஓடுவதற்காக 'விஜய்' அரசியல் பேசுகிறார்!