'தமிழன் தான்டா தமிழ்நாட்ட ஆளணும்' ... அன்னைக்கு 'ரஜினி'ய கடுமையா விமர்சிச்ச பாரதிராஜா ... இன்னைக்கு!!?

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

ரஜினி என்ற மனிதத்தை தான் முன்பே அறிந்திருந்ததாக இயக்குனர் பாரதிராஜா தனது அறிக்கையில் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

ரஜினிகாந்த் நேற்று நடந்த பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் தான் அரசியலில் வருவதற்கு மூன்று திட்டங்களை வகுத்துள்ளதாகவும், தான் கட்சிக்கு மட்டுமே தலைவராக இருக்கப் போவதாகவும், முதல்வர் பதவிக்கு வேறொருவரை நிறுத்தப் போவதாகவும் கூறியிருந்தார். ரஜினிகாந்தின் இந்த கருத்திற்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், இயக்குனர் பாரதிராஜாவும் ரஜினியின் அரசியல் நிலைப்பாடு குறித்து தனது கருத்தினை தெரிவித்துள்ளார். 'எனது நாற்பது ஆண்டு கால நட்பில் 'ரஜினி' என்ற மனிதம் எப்படி வெளிப்படும் என்று நான் முன்பே அறிந்திருக்கிறேன். தமிழன் தான் ஆட்சிக்கு தலை சிறந்தவன் என்ற ரஜினியின் அரசியல் கொள்கை, அரசியலுக்கு மட்டும் அல்லாமல் தமிழுக்கும் தமிழ் மக்களுக்கும் நன்மை பயக்கும் விதமாக அமைந்துள்ளது. ஆருயிர் நண்பன் என்பதை விட, சிறந்த மனிதனாக, ரஜினியின் 'நாணய அரசியலில்' அதன் முதல் பக்கத்திலேயே ஒரு தமிழனை 'அரசனாக' ஆட்சி அதிகாரத்தில் அமர்த்துவேன் என்ற மனிதத்தை, கொள்கைகளாகப் பார்க்காமல் அதை ரஜினியாக, ஓர் அற்புத மனிதனாகவே நான் பார்க்கிறேன்' என நெகிழ்ந்து போய் பேசியுள்ளார்.

முன்னதாக ரஜினியின் அரசியல் வருகையை அதிகமாக விமர்சனம் செய்து வந்த இயக்குனர் பாரதிராஜா, தற்போது ரஜினியின் அரசியல் நிலைப்பாட்டை பாராட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

BHARATHIRAJA, RAJINIKANTH, POLITICS

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்