"ஆசைப்பட்டு தான் வந்தான்.. ஆனா இவன் ஒரு" .. குஸ்தி மைதானத்தில் வைத்து நாட்டாமை மகனின் முகத்திரையை கிழித்த கண்ணம்மா | Bharathi Kannamma
முகப்பு > செய்திகள் > தமிழகம்விஜய் டிவியில் மிகப் பிரபலமாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த சீரியலில் பாரதியும் கண்ணமும் திருமணம் செய்து கொண்டு சந்தோஷமாக வாழ்ந்து வந்த நிலையில், கண்ணம்மா கர்ப்பமாகிறார். வெண்பா செய்த சூழ்ச்சியால், பாரதி தனக்கு ஆண்மை இல்லை எனவும், கண்ணம்மாவின் வயிற்றில் இருக்கும் குழந்தை தன்னுடையது அல்ல எனவும் கோபப்படுகிறார். இதனால் கண்ணம்மா கோவித்துக் கொண்டு அந்த வீட்டை விட்டு வெளியேறுகிறார்.
Also Read | Walking -ன்போது ஒரண்டை இழுத்த கோபி.. பதிலுக்கு ஷாக் கொடுத்த பாக்யா.. மனுசன் அள்ளு விட்டாரு Baakiyalakshmi
பிறகு அவர் குழந்தை பெற்றெடுக்கிறார். அவருக்கு இரண்டு பெண் குழந்தை பிறக்கிறது. அதில் ஒரு பெண் குழந்தையை பாரதியின் அம்மா சவுந்தர்யா கொண்டு சென்று பாரதியிடம் கொடுத்து, ஆதரவற்ற ஆசிரமத்தில் இருந்து இந்த குழந்தையை தத்தெடுத்து கொண்டு வந்ததாக கூறி, வளர்க்க கொடுக்கிறார். பாரதியும் அந்த குழந்தைக்கு ஹேமா என பெயரிட்டு வளர்த்து வந்தார். கண்ணம்மாவோ தனக்கு பிறந்தது ஒரு குழந்தைக்குதான் என நினைத்து, அந்த குழந்தையை எடுத்துக்கொண்டு ஒரு கிராமத்திற்க்கு சென்று லட்சுமி என பெயரிட்டு வளர்த்து வந்தார்.
ஒரு கட்டத்தில் கண்ணம்மா குழந்தையுடன் சென்னைக்கு வந்து வசிக்கிறார். இதனை பாரதியின் குடும்பம் கண்டுபிடிக்கிறது. பிறகு பாரதியின் குடும்பம் கண்ணம்மாவிற்கும் குழந்தை லட்சுமிக்கும் உறுதுணையாக இருக்கின்றனர். கண்ணம்மாவிற்கு தனது பிறந்தது இரட்டைக் குழந்தைகள் எனவும் அதில் ஒரு குழந்தை பாரதியிடம் வளர்கிறது எனவும் தெரிய வருகிறது. ஆனால் பாரதி ஹேமா மீது அதிக பாசம் வைத்திருப்பதால், குழந்தையை பாரதியிடம் கேட்காமல் இருக்கிறார் கண்ணம்மா. பாரதிக்கு இந்த விஷயம் தெரிந்தும் ஹேமா மீது உள்ள பாசத்தால் கண்ணமாவிடம் கொடுக்க மறுக்கிறார். இந்நிலையில் வெண்பா பலமுறை பாரதியை திருமணம் செய்ய திட்டமிடுகிறார். ஆனால் அதெல்லாம் முடியாமல் போகிறது. வெண்பா வேறு ஒருவரையும் திருமணம் செய்து கொள்கிறார்.
பாரதி லட்சுமி மற்றும் ஹேமாவின் ரத்த மாதிரியை எடுத்துக்கொண்டு டிஎன்ஏ டெஸ்ட் எடுக்க டெல்லிக்கு அனுப்பி வைக்கிறார். அதன் முடிவு பாரதி தான் லட்சுமி மற்றும் ஹேமாவின் அப்பா என்ன தெரிய வருகிறது. இதனால் பாரதி கண்ணமாவிடம் மன்னிப்பு கேட்கிறார். ஆனால் கண்ணம்மா அந்த மன்னிப்பை ஏற்றுக் கொள்ளாமல் இரண்டு குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு தன் அப்பாவின் ஊருக்கு சென்று விடுகிறார். அவருடன் அவரது அப்பாவும் செல்ல, பின்னாடியே கண்ணம்மாவை சமாதானப்படுத்த பாரதியும் அதே கிராமத்தில் கண்ணம்மாவின் எதிர் வீட்டில் வசித்து வருகிறார். இதனிடையே கண்ணம்மா கேட்டபடி பாரதி விவாகரத்தும் கொடுக்க, கோர்ட்டில் அப்படியே தீர்ப்பும் ஆனது.
இதனிடையே ஊரில் மசாலா அரைத்து கடைகடையாக விற்று தன் 2 பெண் பிள்ளைகளையும் வளர்த்து வருகிறார் கண்ணம்மா. ஆனால் அந்த ஊரின் நாட்டாமை மகனுக்கு, கண்ணம்மாவால் தன் மசாலா கம்பெனிக்கு நஷ்டம் ஏற்படுவதால், கண்ணம்மாவை தன் பார்ட்னர் ஆக்கிக் கொள்ள முயற்சி செய்கிறார். இதனால் நாட்டாமையின் மகன் கண்ணமாவிடம் சென்று தவறாக பேசி அவளை பார்ட்னராக்க முயற்சித்தார். இதனால் கோபமடைந்த கண்ணம்மா அவரது கன்னத்தில் ஒரு அடி அடிக்க, இதனால் கோபம் அடைந்த நாட்டாமையின் மகன் கண்ணமாவுக்கும் தனக்குமான உறவு பற்றி ஊர் முழுக்க அவதூறு பரப்பி விட்டார்.
இந்த விஷயம் பாரதிக்கும் கண்ணம்மாவுக்கும் தெரிய வருகிறது. உடனே நாட்டாமையின் மகனை சந்திக்க பாரதியும் கண்ணமாவும் மிகுந்த கோவம் அடைந்து அவரை பார்க்க செல்கின்றனர். அங்கு ஊர் திருவிழாவிற்காக குஸ்தி போட்டி நடந்து கொண்டிருக்கிறது. அந்த குஸ்தி போட்டியில் நாட்டமையின் மகன் பலரையும் அடித்து கம்சன் செய்து கொண்டிருக்கிறார். அங்கு சென்ற கண்ணம்மா நாட்டாமை மகனுக்கு ஆண்மை இல்லை எனவும், தன் மீது அவர் ஆசைப்பட்டது என்னவோ உண்மைதான். ஆனால் அவரால்தான் எதுவுமே பண்ண முடியாது என ஊர் மக்கள் முன்பு சொல்லிவிட்டார்.
இதனால் நாட்டாமை மகன் பாண்டியின் முகத்திரை கிழிகிறது. மேலும் பேசும் கண்ணம்மா, நம்மை பற்றி யாராவது புரளி கிளப்பினார்கள் என்றால் அவர்களை எதிர்த்து நாம் போராடனும் என கூறுகிறார். அதற்கு ஊர் மக்கள் அனைவரும் மேடையில் அமர்ந்திருக்கும் நாட்டாமையை பார்த்து, என்ன நாட்டாமை உன் பையன் இப்படி பண்றான் என கேட்க, உடனே நாட்டாமை மேடையில் இருந்து கீழே இறங்கி வந்து தன் மகனை கண்ணம்மாவிடம் மன்னிப்பு கேட்கும்படி கூறுகிறார். அதற்கு நாட்டாமையின் மகன் மன்னிப்பு கேட்க மறுக்க, உடனே பாரதி பாண்டியுடன் குஸ்தி போட்டியில் களம் இறங்குகிறார். இதில் பாண்டி வீழ்ச்சி அடைந்தால் பாண்டி மன்னிப்பு கேட்டாக வேண்டும் என்கிற நிபந்தனையுடன் இந்த போட்டி நடக்கிறது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- Bharathi Kannamma : "ஒருநாள் சிரித்தேன்.. மறுநாள் வெறுத்தேன்.. மன்னிப்பாயா?".. பரமசிவனிடம் மன்றாடிய பார்வதி.! பாரதி கண்ணம்மாவில் ஒளிபரப்பான வைரல் நாடகம்.!
- Bharathi Kannamma: ‘டிஎன்ஏ மாற்றம்’, ‘கண்ணம்மா மீது கொலை முயற்சி’.. கிழிந்தது வெண்பாவின் முகத்திரை.. அடுத்தடுத்து எண்ட்ரி கொடுத்த சாட்சியங்கள்.. பரபரப்பில் பாரதி கண்ணம்மா...!
- Bharathi Kannamma: மன்னிப்பு கேட்டு கதறிய பாரதி..! ‘கான்ஃபிடண்ட்டே இல்லயே?’ கலாய்ச்சுவிடும் கண்ணம்மா.. வெண்பா எடுத்துக்கொடுத்த புது லாஜிக்..!