"குறைப்பிரசவம்... தவறாக புரிந்து கொள்ளப்பட்டது" - மன்னிப்பு கோரிய இயக்குனர் பாக்யராஜ்.. வீடியோ

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

அண்மையில் பிரபல இசையமைப்பாளர் இளையராஜா, அம்பேத்கரின் கனவும் மோடியின் கனவு ஒன்று தான்.. அம்பேத்கர் இப்போது இருந்தால் மோடியின் செயல்திட்டங்களை கண்டு பெருமைப்படுவார் என்று கூறியிருந்த கருத்து கலவையாக பேசுபொருளானது.

Advertising
>
Advertising

Also Read | “கடவுள் மாதிரி வந்து ரெய்னா ஹெல்ப் பண்ணார்”.. உருக்கமாக பேசிய SRH இளம் வீரர்..!

இதனிடையே இளையராஜாவின் மகனும் பிரபல இளம் இசை அமைப்பாளருமான யுவன் சங்கர் ராஜா தம்முடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், கருப்பு திராவிடன் பெருமைமிகு தமிழன் என்று பதிவிட, இந்த பதிவு இன்னும் வைரல் ஆனது. முன்னதாக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், தமது சமூகவலைத்தள பக்கத்தில் ழகரம் ஏந்திய "தமிழணங்கு" எனும்  தமிழன்னையின்  உருவப்படத்தை  பாரதிதாசன் கவிதையுடன் சேர்த்து பகிர்ந்திருந்தார்.

இந்த நிலையில் தற்போது பிரபல இயக்குனர் நடிகர் பாக்கியராஜ் பேசிய பேச்சு பரபரப்பானது.

அதன்படி, பிரதமரின் மக்கள் நலத்திட்டங்கள் - புதிய இந்தியா 2022" என்ற நூல் வெளியீட்டு விழா சென்னை தி. நகரில் உள்ள பாஜக அலுவலகமான கமலாலயத்தில் நடைபெற்றது. நிகழ்வில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நூலை வெளியிட,  திரைப்பட இயக்குனர் பாக்யராஜ் பெற்றுக்கொண்டார்.

அப்போது பேசிய இயக்குனர் பாக்யராஜ், "இந்தியாவிற்கு மோடி போன்றவர் தேவை" என்றார். மேலும், "பிரதமரை விமர்சனம் செய்ய ஆட்கள் எப்போதும் தயாராக இருக்கிறார்கள், அதற்கு செவி சாய்க்காமல் செல்ல வேண்டும். விமர்சனம் செய்பவர்களை, மூன்று மாதத்தில் பிறந்த குறைபிரசவத்தில் பிறந்தவர்கள் என நினைத்து கொள்ளுங்கள்" என பிரதமருக்கு தான்ன் டிப்ஸ் கொடுப்பதாக பாக்யராஜ் பேசினார்.

இயக்குனர் பாக்யராஜின் இந்த பேச்சு பலவிதமாக விவாதத்தை உண்டு பண்ணியது. இதனைத் தொடர்ந்துதான் பேசிய பேச்சுக்கு இயக்குனர் பாக்யராஜ் தற்போது தன்நிலை விளக்கம் கொடுத்து ஒரு வீடியோவை பகிர்ந்திருந்திருக்கிறார்.

அந்த வீடியோவில் பேசிய பாக்கியராஜ், "நான் பாஜகவைச் சேர்ந்தவர் அல்ல. ஆனால் நான் பேசிய குறைப்பிரசவம் என்கிற வார்த்தை தவறுதலாக புரிந்து கொள்ளப்பட்டது. அது ஊனமுற்றோரை குறிக்கும் சொல் அல்ல.. கிராமத்தில் 2,3 மாதங்களுக்கு முன்பே பிறந்தவர்களை அப்படி சொல்வார்கள். அது சிலரிடம் தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாக கேள்விப்பட்டு அதிர்ச்சி அடைந்தேன். அப்படி அது தவறாக புரிந்து கொள்ளப்பட்டு இருப்பின் அது பற்றி நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். ஆனால் பெரியார், கலைஞர், எம்ஜிஆர் என என் திரைப்படங்களில் இவர்களைத்தான் நான் பின்தொடர்ந்து இருப்பேன். திராவிட இயக்க கருத்துக்களையே என் திரைப்படங்களில் பதிந்து இருப்பேன் என்பதை நீங்கள் என் படங்களை பார்க்கும்போது அறியமுடியும். இனியும் அப்படித்தான் என் படைப்புகள் இருக்கும் என்பதை மட்டும் நான் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன் நன்றி." என்று தெரிவித்துள்ளார்.‌ 

Also Read |  KL ராகுலுக்கு அபராதம்.. ஸ்டோனிஸிக்கு எச்சரிக்கை.. IPL நிர்வாகம் அதிரடி ஆக்‌ஷன்..!

BHAGYARAJ, BHAGYARAJ EXPLAINS HIS RECENT CONTROVERSIAL SPEECH, இயக்குனர் பாக்யராஜ்

மற்ற செய்திகள்