வெற்றிலையோட 'இந்த' மிட்டாய சேர்த்து சாப்பிட்டா... நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்குமா?... 'விறுவிறு' விற்பனையால் வியாபாரிகள் ஹேப்பி!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

கொரோனா தாக்கத்தால் மக்கள் மத்தியில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யும் உணவுகள் குறித்த தேடல் அதிகமாகி உள்ளது. குறிப்பாக மூலிகை உணவுகள், ரசம், மஞ்சள் பால் என ஏராளமான பானங்களை வீட்டில் செய்து அருந்தி வருகின்றனர். இதேபோல இறைச்சி வகைகள், காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றிலும் இந்த நோய் எதிர்ப்பு சக்தி குறித்த தேடுதல் அதிகமாக உள்ளது.

அதேபோல வெளியில் வாங்கி சாப்பிடாமல் வீட்டில் சமைத்து உண்ணுவதை வாடிக்கையாக்கி வருகின்றனர்.இந்த நிலையில் வெற்றிலையுடன் கடலை மிட்டாய் சேர்த்து சாப்பிடும் பழக்கம் தற்போது அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. இதனால் தற்போது ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் வழக்கத்தை விட வெற்றிலை, கடலை மிட்டாய் விற்பனை கூடியுள்ளதாக வியாபாரி ஒருவர் தெரிவித்து இருக்கிறார்.

10 நாட்கள் இதுபோல சாப்பிட்டால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்ற நம்பிக்கை உள்ளதால் இந்த வியாபாரம் தற்போது அப்பகுதிகளில் களைகட்டி இருக்கிறதாம். உணவு நிபுணர் ஒருவரும் குழந்தைகள் தவிர்த்து மற்றவர்கள் இதை சாப்பிட்டால் அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி கூடும் என தெரிவித்து இருக்கிறார். இதை வைத்து பார்க்கும்போது ஒவ்வொரு ஊரிலும் இருந்து வந்த பழைய பழக்கங்கள் இந்த கொரோனா காலத்தில் மீண்டும் புழக்கத்துக்கு வந்துள்ளன என்றே தோன்றுகிறது. 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்