'மனநல சிகிச்சை பெற வந்தபோது’... ‘சிறுவர்களால்’... ‘இளம்பெண்ணுக்கு நேர்ந்த பரிதாபம்’!
முகப்பு > செய்திகள் > தமிழகம்மனநலம் தொடர்பான சிகிச்சை பெற வந்த இளம்பெண்ணை, சிறுவர்கள் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியில், மனநலம் மற்றும் உடல்நலம் தொடர்பான சிகிச்சை அங்குள்ள தர்காவில் அளிக்கப்பட்டு வருகிறது. இதற்காக, தமிழகம் மட்டுமில்லாது, பக்கத்து மாநிலங்களிலும் இருந்து வந்து தங்கி சிகிச்சை பெற்று வருவார்கள். இந்நிலையில், கேரள மாநிலம், எர்ணாகுளம் மாவட்டம், கருநாகப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த பதர் என்பவரின், மனநலம் பாதித்த 21 வயது மகளை குணப்படுத்துவதற்காக அழைத்து வந்துள்ளார்.
சிகிச்சை பெறுவதற்காக, ஒரு மாதம் முன்பு வீடு எடுத்து, தந்தையும், மகளும் தங்கி இருந்து சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில், கடந்த 4-ம் தேதி நள்ளிரவு, இயற்கை உபாதை கழிக்க வெளியே சென்ற இளம்பெண்ணை, அங்கு வந்த சிலர், பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளனர். இதனால் அந்தப் பெண் கூச்சலிட்டு கத்த, அக்கம் பக்கத்தினர் விழித்து, வெளியே வந்தபோது, அவர்கள் அப்பெண்ணை விட்டுவிட்டு தப்பியோடினர். அவர்களைத் துரத்திச் சென்றபோது, 2 பேர் மட்டுமே பிடிபட்டுள்ளனர்.
இதையடுத்து பிடிபட்ட இருவரையும் ஏர்வாடி தர்ஹா காவல் நிலையத்தில் பொதுமக்கள் ஒப்படைத்தனர். போலீசார் அவர்களிடம் நடத்திய விசாரணையை அடுத்து, பாலியல் வன்கொடுமை முயற்சியில் ஈடுபட்ட மற்ற சிறுவர்களும் சிக்கினர். பிடிபட்ட அனைவரும் 18 வயதுக்கும் குறைவானவர்கள் என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘தற்கொலை எனக் கூறப்பட்ட நிலையில்’.. ‘இளம்பெண்ணின் பிரேதப் பரிசோதனையில்’.. ‘வெளியாகியுள்ள அதிர்ச்சித் தகவல்கள்’..
- 'பறந்துவந்து விழுந்த பாட்டில்'.. 'பற்றி எரிந்த பெண் காவலர்கள்'.. 'பதைபதைப்பு சம்பவம்'!
- ‘திருமணமான ஐந்தே நாளில் நடந்த சோகம்’.. ‘அதிர்ச்சியில் உறைந்துபோன குடும்பத்தினர்’..
- 'தனியா போன பெண்ணை வேவு பார்த்த 'சைக்கோ'...'உடம்பு முழுக்க கடிச்சு'... பெண்ணிற்கு நேர்ந்த கொடூரம்!
- ‘சிக்னலில் மயங்கி விழுந்த பாட்டி’!.. ‘ஓடி வந்த ஆட்டோ டிரைவர்’.. ‘சல்யூட்’ போட வைத்த காவலர்..! வைரல் வீடியோ..!
- கர்ப்பிணி பெண்ணுக்கு ஏற்றிய குளுக்கோஸில் புழுவா..? திருப்பூர் மருத்துவமனையில் பரபரப்பு..!
- 'அழகா இருந்தாங்க.. நான் போதையில் இருந்தேன்'.. உணவு டெலிவரி ஊழியரால் சென்னை பெண்ணுக்கு நேர்ந்த கதி!
- ‘9 வருட போராட்டத்திற்கு பின்’.. ‘தாயைக் கண்டுபிடித்த இளம்பெண்’.. ‘ஆனாலும் நிறைவேறாத ஆசை’..
- 'நைட் 2.30 மணிக்கு போன் வந்துச்சு'.. 'பெண் என்ஜினியரின் வங்கிக் கணக்கில்' இருந்து லட்சக்கணக்கில் 'அபேஸ்' செய்த கும்பல்!
- ‘சென்னையில் சாலையோரம் தூங்கியவர்கள் மீது’.. ‘ஆட்டோ மோதி நொடியில் நடந்த கோர விபத்து’.. ‘அதிரவைக்கும் சிசிடிவி காட்சிகள்’..