"க்ளிக் பண்ணா Account-ல இருக்கும் மொத்த பணமும் காலி".. அள்ளுவிடும் புதிய நெட் பேங்கிங் மோசடி குறித்து DGP சைலேந்திர பாபு எச்சரிக்கை.. வீடியோ..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்இணையத்தில் நெட் பேங்கிங் மோசடி கும்பல்களிடமிருந்து பாதுகாப்பாக இருக்க வேண்டும் என டிஜிபி சைலேந்திர பாபு வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.
Also Read | "நான் ராமர்.. சந்திரபாபு ராவணன்".. மேடையை அதிர வைத்த ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன்.. முழு விவரம்..!
இணையமும் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியும் பல முக்கியமான மாற்றங்களுக்கு காரணமாக அமைந்திருக்கின்றன. சொல்லப்போனால் இதன்மூலம், மனிதகுலம் பல மகத்தானை சாதனைகளை படைத்து வருகிறது. ஆனால், இந்த தொழில்நுட்பங்களை மோசமான வழிகளில் பயன்படுத்தும் கும்பல்களும் சமீப ஆண்டுகளில் அதிகரித்துக்கொண்டுதான் செல்கின்றன. பிறரது கிரெடிட், டெபிட் கார்டு விபரங்களை திருடுவது, ரகசிய தகவல்களை ஹேக் செய்வது என சைபர் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்துவருகின்றன.
இந்நிலையில், தமிழக டிஜிபி சைலேந்திர பாபு விழிப்புணர்வு வீடியோ ஒன்றை பகிர்ந்திருக்கிறார். அதில்,"பல்வேறு விதமான இணையதள மோசடிகள் நடைபெற்று வருகின்றன. இந்த மோசடிகளில் மக்கள் சிக்கக்கூடாது என்பதற்காக நாங்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். தற்போது புதிதாக நெட் பேங்கிங் அக்கவுண்ட் மோசடி நடைபெற்று வருகிறது. உங்களது போனுக்கு ஒரு மெசேஜ் வரும் அதில் உங்களுடைய எஸ்பிஐ வங்கி கணக்கில் நெட்பேங்கிங் வசதி முடக்கப்பட இருக்கிறது, உடனடியாக பான் நம்பரை இணைக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டிருக்கும். அதனுடன் ஒரு லிங்கையும் அனுப்புவார்கள்.
"நீங்கள் உள்ளே சென்று பார்த்தால் உங்களுடைய பெயர், பான் நம்பர்,ஏடிஎம் நம்பர் ஆகியவற்றை கேட்கும். அப்போது உங்களுக்கு வரும் ஓடிபி எண்ணையும் கேட்பார்கள். அதை சொல்லிவிட்டால் உங்களது வங்கிக்கணக்கில் இருக்கும் மொத்த பணத்தையும் எடுத்துவிடுவார்கள். இது பல வருடங்களுக்கு முன் இருந்த மோசடிதான். இப்போது மீண்டும் இந்த மோசடி நடைபெறுகிறது. உங்கள் வங்கி கணக்கு மூடப்படும், பான் கார்டு நம்பர், டெபிட் கார்டு நம்பர் கொடுங்கள், வங்கி கணக்கு எண் விவரம் கொடுங்கள் என எந்த வங்கியில் இருந்தும் கேட்கவே மாட்டார்கள். அப்படி கேட்டால் அவர்கள் மோசடி கும்பல் என்று அர்த்தம். இத்தகையவர்களுக்கு பதில் அளிக்க வேண்டாம்" எனக் கூறியுள்ளார்.
இந்த வீடியோவை தனது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ள அவர்,"புது நெட் பேங்கிங் மோசடி. கவனம் இல்லை என்றால் வங்கி கணக்கில் இருந்த மொத்த பணத்தையும் திருடி விடுவார்கள். ஏமாந்து விட்டால் 1930 அழைக்கவும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
Also Read | ஷ்ரத்தா வழக்கை போலவே நடந்த பயங்கரம்.. இளம்பெண்ணின் கணவர் மற்றும் அவரது நண்பர் செஞ்ச பகீர் காரியம்..!
மற்ற செய்திகள்
ஷ்ரத்தா வழக்கை போலவே நடந்த பயங்கரம்.. இளம்பெண்ணின் கணவர் மற்றும் அவரது நண்பர் செஞ்ச பகீர் காரியம்..!
தொடர்புடைய செய்திகள்