கூலி வேலை செய்துகொண்டே படிப்பு.. குக்கிராமத்தில் பிறந்து விடாமுயற்சியால் டிஎஸ்பி ஆக பொறுப்பேற்கும் இளம்பெண்.. வலி நிறைந்த வாழ்க்கை பயணம்.!
முகப்பு > செய்திகள் > தமிழகம்புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் தனது விடாமுயற்சியின் மூலமாக தற்போது டிஎஸ்பியாக பொறுப்பேற்க இருக்கிறார். இதனால் அவரது கிராமமே பெருமையடைந்துள்ளது.
குக்கிராமம்
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள வடவாளம் பஞ்சாயத்தைச் சேர்ந்த சிறிய கிராமம் கிழக்கு செட்டியாப்பட்டி. இங்கே டீக்கடை நடத்திவரும் வீரமுத்து - வீரம்மாள் தம்பதியரின் மகள் பவானியா. பொருளாதார ரீதியாக பின்தங்கிய குடும்பத்தை சேர்ந்த பவானியா விவசாய கூலி வேலைக்கும் சென்றுகொண்டெ தனது படிப்பை தொடர்ந்திருக்கிறார். குடும்பத்தில் மூன்றாவது மகளான பவானியாவின் மூத்த சகோதரிகளுக்கு திருமணம் முடிந்த நிலையில், தனது கல்விக் கனவினை அவர் கைவிட தயாராக இல்லை.
பவானியாவின் கிராமத்துக்கு காலை மற்றும் மாலையில் மட்டுமே பேருந்து வசதி இருக்கிறது. மற்ற நேரங்களில் பேருந்தை பிடிக்க சுமார் 5 கிலோமீட்டர் நடந்து செல்லவேண்டும். இப்படியான குக்கிராமத்தில் பிறந்த பவானியா, அருகில் உள்ள ஏ.மாத்தூரில் அமைந்திருக்கும் அரசு பள்ளியில் 12 ஆம் வகுப்பு வரையில் படித்திருக்கிறார். அதனை தொடர்ந்து, புதுக்கோட்டையில் உள்ள அரசு மகளிர் கல்லூரியில் தமிழ் வழியில் கணிதம் படித்திருக்கிறார்.
பயிற்சி
அதைத்தொடர்ந்து, டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு படித்து வந்திருக்கிறார் பவானியா. குடும்ப சூழ்நிலை காரணமாக தனியார் பயிற்சி வகுப்புகளுக்கு செல்ல முடியாத நிலையில் இருந்த அவர், வீட்டில் இருந்தபடியே படித்து க்ரூப் 1 முதல்நிலை தேர்வில் வெற்றி பெற்றிருக்கிறார். அதனை தொடர்ந்து சென்னையில் உள்ள மனிதநேயம் பயிற்சி மையத்தில் சேர்ந்து இலவச பயிற்சி பெற்று வந்துள்ளார் பவானியா. பிறகு கொரோனா தொற்று காரணமாக நேரடி வகுப்புகள் நடக்காததால் ஆன்லைன் வகுப்பில் படித்து, முதன்மைத் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார் இவர்.
இதன்மூலம் முதல் முயற்சியிலேயே வெற்றிபெற்று டிஎஸ்பியாக பதவியேற்க இருக்கிறார் பவானியா. இருப்பினும் ஐஏஎஸ் அதிகாரியாக வேண்டும் என்பதே தனது கனவு என்றும் அதற்காக தொடர்ந்து படிக்க இருப்பதாகவும் கூறுகிறார் பவானியா. இவருக்கு உள்ளூர் மக்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- மனைவிக்கு தெரியாம இரண்டாவது கல்யாணம் செஞ்ச நபர்.. தட்டிக்கேட்ட மனைவிக்கு நேர்ந்த பரிதாபம்.. நீதிமன்றம் அளித்த பரபரப்பு தீர்ப்பு..!
- பரீட்சை எழுதுன 9 லட்சம் பேர்ல தமிழ்-ல 100க்கு 100 மார்க் எடுத்த எடுத்த ஒரே மாணவி.. குவியும் பாராட்டுகள்..!
- விபத்தில் இறந்த மனைவி.. விஷயத்தை மறைத்து மகள்களை தேர்வுக்கு அனுப்பிய தந்தை.. வீடு திரும்பியதும் கலங்கிய மாணவிகள்
- ‘கிணற்றில் குதித்ததும் தலையில் கை வைத்த இளைஞர்’.. நண்பர்களுடன் குளிக்க சென்ற கல்லூரி மாணவருக்கு நடந்த சோகம்..!
- வீடு கட்ட அஸ்திவாரம் தோண்டும்போது கிடைத்த ‘தங்கப்புதையல்’.. உடனே தம்பதி செஞ்ச காரியம்.. அதிகாரிகள் பாராட்டு..!
- ‘தோட்டத்தில் தங்கியிருந்த 3 பேர் யார்?’.. புதுக்கோட்டை தொழிலதிபர் மரண வழக்கில் அதிரடி திருப்பம்..!
- "ஆஹா.. இது அதுல்ல.".. 10-ம் வகுப்பு தேர்வில் மாணவன் எழுதிய புஷ்பா பட டயலாக்?.. வைரல் புகைப்படம்..!
- தேர்தல் முடிவுகள்: முதல் களமே அதகளம்.. வெற்றியை ருசித்த விஜய் மக்கள் இயக்கம்..
- IAS, IFS சிவில் சர்வீஸ் தேர்வுகள்.. வீரர்களே தயாராகுங்கள்! வந்தாச்சு அறிவிப்பு
- ஒண்ணுமே தெரியலை ஒரே இருட்டா இருக்கு.. தலைகீழாக மாறி போன எக்ஸாம்.. பெற்றோர் செய்த செயல்!