'ஸ்கூல் கேண்டின்களில்'... 'இதையெல்லாம் விற்கக் கூடாது'... 'மத்திய அரசு கொண்டுவரும் புதிய தடை'... விவரம் உள்ளே!
முகப்பு > செய்திகள் > தமிழகம்மாணவர்களின் உடல் மற்றும் மனநலனை கருத்தில் கொண்டு, மத்திய அரசு புதிய திட்டத்தை அமல்படுத்துகிறது.
குழந்தைகளிடம் நொறுக்குத் தீனி சாப்பிடும் வழக்கம் அதிகரித்து வருவதன் காரணமாக, சிறு வயதிலேயே உடல்ரீதியான குறைபாடுகளும், மனரீதியிலான பாதிப்புகளும் ஏற்படுவதாக ஆய்வுகள் தெரிவித்து வகின்றன. இந்நிலையில், பள்ளிகளில் குழந்தைகளுக்கு பாதுகாப்பான உணவு வழங்குவது தொடர்பாக, பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து உணவு பாதுகாப்பு மற்றும் தர கட்டுப்பாட்டுத் துறை சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி, ‘பள்ளிகளில் உள்ள கேன்டீன்களில், உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும், நொறுக்குத் தீனிகளை விற்பனை செய்ய தடைவிதிக்கப்பட்டுள்ளது.
அதிக கொழுப்பு, காரம், அதிக உப்பு அல்லது இனிப்பு நிறைந்த உணவுகள், கேடு விளைவிக்க கூடியது. எனவே நாடு முழுவதும் உள்ள பள்ளிகளின் கேண்டீன்களில் நொறுக்குத்தீனி விற்கவும், அது தொடர்பான விளம்பர பதாகைகளுக்கும் தடை விதிக்கப்படுகிறது. மேலும் பள்ளிகளைச் சுற்றி 50 மீட்டர் சுற்றளவில் உள்ள கடைகளிலும், இந்த நடைமுறை பின்பற்றப்பட வேண்டும். மாணவர்களின் நலனை பேணும் வகையில், அனைத்து பள்ளிகளும் இதை நடைமுறைப்படுத்த வேண்டும்.
மாணவர்கள் எந்த மாதிரியான உணவுப் பொருட்களை வாங்கி சாப்பிடுகிறார்கள், அது தரமானதா என்பதை ஆய்வுசெய்ய, பள்ளி நிர்வாகம் தனிக் குழுக்களை அமைத்து கண்காணிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. தங்களது வளாகத்தில் உள்ள கேன்டீன்களில் என்னென்ன உணவுப் பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன என்பன போன்ற விவரங்களை, மாவட்ட உணவு பாதுகாப்பு மற்றும் தர கட்டுப்பாட்டுத் துறைக்கு பள்ளி நிர்வாகங்கள் அனுப்ப வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘அதிவேகத்தில் வந்த மகனுடைய காரால்’.. ‘நொடிப்பொழுதில் தாய்க்கு நடந்த கோர விபத்து’..
- 'முன்னாள் முதல்வரின் பேரனுக்கும் உணவு டெலிவரி பாய்க்கும் கைகலப்பு'! ... ‘சென்னையில் பரபரப்பு’!
- ‘இனி பொதுத்தேர்வுக்கு கூடுதல் நேரம் ஒதுக்கீடு’.. ‘ பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பு’..
- கனமழை காரணமாக பள்ளி, கல்லூரிக்கு விடுமுறை..! எந்தெந்த மாவட்டங்கள்..? விவரம் உள்ளே..!
- ‘கட்டிபுடி வைத்தியம்’ ‘காதலியை கொல்ல துப்பாக்கி’.. பள்ளியை பரபரக்க வைத்த இளைஞர்..! வைரல் வீடியோ..!
- ‘இருசக்கர வாகனம் மீது பேருந்து மோதி கோர விபத்து’.. ‘பள்ளிக்குக் கிளம்பிய சிறுவனுக்கு வழியில் நடந்த பயங்கரம்’..
- 'பேருந்து கவிழ்ந்து கோர விபத்து'.. 'துடித்துப்போன பள்ளிக் குழந்தைகள்.. ஒரு நொடியில் நேர்ந்த சோகம்!
- ‘ஆன்லைன் விற்பனையில் அடுத்த ப்ளான்’ ‘அமேசானுக்கு போட்டியாக களமிறங்கும் ப்ளிப்கார்ட்’..!
- திடீர் ‘ஹாட் அட்டாக்’.. ஸ்கூல் ப்ரேயரில் சுருண்டு விழுந்த 1ம் வகுப்பு மாணவி..! சோகத்தில் மூழ்கிய பள்ளி..!
- ‘தூத்துக்குடிக்கு வந்த ஷேன் வாட்சன்’.. ‘தல’ தோனிய பத்தி என்ன சொன்னார் தெரியுமா..?