Bank Holidays: டிசம்பரில் எந்தெந்த நாட்கள் வங்கிகள் இயங்காது?... வெளியான தகவல்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

இந்த மாதத்தில் எந்தெந்த நாட்களில் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

நமது பணத்தேவையைப் பூர்த்தி செய்யவும், அன்றாடச் செலவுகளைத் திட்டமிடவும் வங்கிகளின் சேவை மிக முக்கியமானது. வங்கிகள் இயங்காத நாட்களில் பணப்புழக்கம் குறைவாக இருக்கும். எனவே வங்கிகளின் விடுமுறை நாட்களை அடிப்படையாக வைத்து வங்கி மற்றும் பணம் தொடர்பான திட்டங்களை வகுப்பது நல்லது.

டிசம்பரில் மொத்தம் 9 நாட்கள் வங்கிகள் இயங்காது. டிசம்பர் 1 நேற்று ஞாயிற்றுக் கிழமை என்பதால் வங்கிகளுக்கு விடுமுறை. இதனைத்தொடர்ந்து 8, 15, 22, 29 ஆகிய நான்கு நாட்களும் ஞாயிற்றுக் கிழமை என்பதால் வழக்கம்போல வங்கிகளுக்கு விடுமுறையாகும். டிசம்பர் 14, டிசம்பர் 28 ஆகிய இரண்டு நாட்களும் இரண்டாவது சனிக்கிழமை என்பதால் வங்கிகளுக்கு விடுமுறை.

டிசம்பர் 25ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி, வங்கிகள் அனைத்திற்கும் விடுமுறை. அதற்கடுத்த நாளான டிசம்பர் 26 ’பாக்ஸிங் டே’என்பதால் அன்றைய தினத்திலும் வங்கிகள் இயங்காது. பாக்ஸிங் டே என்பது காமன்வெல்த் நாடுகளில் கிறிஸ்துமஸுக்கு அடுத்த நாள் கடைபிடிக்கப்படும் தினமாகும்.

SBI, BANK, CHRISTMAS, BANK HOLIDAYS, 9 DAYS, DECEMBER

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்