'உயிரோட இல்லயா?'..'அப்படின்னா இனி அது நம்ம பணம்'.. போலி ஏடிஎம் கார்டு தயாரித்து வங்கி அதிகாரிகள் அடித்த ரூ.30 லட்சம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

திருச்சியில் டிவிஎஸ் டோல்கேட் ஜமால் முகமது கல்லூரி வளாகத்தில் இயங்கி வருகிறது இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக் கிளை ஒன்று.

இங்கு கணக்கு வைத்திருந்த பெண் பி.எஸ்.என்.எல் ஊழியரான எமிலி சோலா, கடந்த இரண்டு வருடங்களாக வங்கிக்கு நேரில் வரவுமில்லை, தான் போட்டு வைத்திருந்த சுமார் 30 லட்ச ரூபாய் தொகையை எடுக்கவும் இல்லை.

அதற்கு முன்புவரை ஏடிஎம் கார்டு மூலமாக அவர் பணம் எடுத்து வந்துள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த வங்கி அதிகாரிகள் நேரில் சென்று சோலா பற்றி விசாரித்தபோது, கடந்த 2014ஆம் ஆண்டு அப்பெண்மணி உயிரிழந்ததாக தெரியவந்தது. ஆனால் கடந்த 2018-ஆம் ஆண்டு வரை அவரது கணக்கில் இருந்து யாரும் பணத்தை எடுக்க முன்வரவில்லை. காரணம் அவரின் குடும்பத்துக்கு இந்த வங்கிக் கணக்கில் உள்ள பண விபரங்கள் தெரியவில்லை.

இதை பயன்படுத்திக்கொண்ட திருச்சி, வயலூரை அடுத்த நாச்சிகுறிச்சி, நாகப்பா நகரைச் சேர்ந்த ஷேக் மொய்தீன் என்கிற வங்கியின் மேலாளரும், வங்கியின் உதவி மேலாளரான சின்னதுரையும் சேர்ந்து, போலி ஆவணங்களை ரெடி பண்ணி, புதிய ஏடிஎம் கார்டுக்கு அப்ளை செய்து அதற்கு போடவேண்டிய சோலாவின் கையெழுத்தை அவர்களே போட்டு, பின்னர் அந்த ஏடிஎம் கார்டு மூலம் சோலாவின் கணக்கில் இருந்த 25 லட்சத்து 8 ஆயிரத்து  50 ஆயிரம் ரூபாயை எடுத்துக் கொண்டதாகக் கூறப்படுகிறது.

வங்கி மண்டல மேலாளர் பிரேம்குமார் செய்த சோதனையில் தெரியவந்த இந்த மோசடி சம்பவத்தை அடுத்து, அவர் திருச்சி மாநகர காவல் ஆணையர் அமல்ராஜை சந்தித்து புகார் அளித்துள்ளார். அதன் பின்னர் திருச்சி மாநகர குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் ஞானசேகரன் தலைமையில் கூட்டுச் சதி, மோசடி மற்றும் போலி ஆவணங்களைத் தயாரித்தல் உட்பட 6 பிரிவுகளின் கீழ் ஷேக் மொய்தீன் மற்றும் சின்னதுரை மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

TRICHY, BANK

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்