"உங்க கிரெடிட் கார்டு நம்பர் இதான்.. கரெக்டா? நம்புறீங்களா? இப்ப நான் கேக்குற டீடெயில்ஸை குடுங்க!".. போனில் பேசி பெண்ணின் வங்கிக் கணக்கை சூறையாடிய மர்மப்பெண்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்வங்கியில் இருந்து பேசுவதாக கூறி போன் பேசி, பெண்ணின் வங்கி கணக்கில் இருந்து 29 ஆயிரம் ரூபாய் வரை புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒரு கும்பல் சுருட்டி உள்ளது சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த மாமுண்டி மடத்தெருவைச் சேர்ந்த தமிழ்ச்செல்வி என்பவர் அப்பகுதியில் உள்ள ஆக்ஸிஸ் வங்கியில் கணக்கு வைத்திருக்கிறார். இந்த சம்பவம் தொடர்பாக வெளியான செல்போன் உரையாடல் ஆடியோ இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் தமிழ்ச்செல்வியின் போனுக்கு, அந்த வங்கியில் இருந்து மேலாளர் பேசுவதாக கூறி அழைத்த மர்மப் பெண், நூதன முறையில் பேசி தமிழ்ச்செல்வியின் புதிய கிரெடிட் கார்டு காலாவதியாவதாகக் கூறி, அதை புதுப்பிக்க வேண்டும் என்றும் சொல்லி, அந்த கிரெடிட் கார்டு விபரங்களை சரியாகக் கூறியுள்ளார்.
இதனை அடுத்து மெல்ல தமிழ், ஆங்கிலம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் பேசி டெபிட் கார்ட் விபரங்களை கேட்கிறார். ஆனால் தமிழ்ச்செல்வியின் மகன் மனோஜ், இந்த விஷயத்தில் தலையிட்டு அந்த மர்ம பெண்ணுடன் போனில் பேச மீண்டும் அவரிடமும், அந்த மர்மப் பெண் போனிலேயே டெபிட் கார்டு மற்றும் தமிழ்ச்செல்வியின் வங்கி விபரங்களை கேட்டு அறிகிறார். அந்தப் பெண்ணுக்கு அந்த நபரோ சற்றும் சளைக்காமல் டெபிட் கார்டின் விபரங்களைத் தர, நாட்கள் அதில் பதிந்துள்ள எண்கள் உள்ளிட்ட விபரங்களை விழிப்புணர்வின்றி கொடுத்துக் கொண்டே வருகிறார்.
பேசி முடிந்ததும், ”வெரிபிகேஷன் முடிஞ்சிருச்சு சார்” என்று கூறி அந்த பெண் போனை கட் செய்ததுதான் தாமதம், தமிழ்ச்செல்வியின் கணக்கில் இருந்த 28 ஆயிரத்து 907 ரூபாய் துடைத்து எடுக்கப்பட்டுவிட்டதாக மெசேஜ் வந்தபோதுதான் தாங்கள் ஏமாற்றப்பட்டுவிட்டதாக உணர்ந்து, அதே சமயம் வங்கிக்கும் இந்த சூழலில் செல்ல முடியாது என்பதால், திருக்கோகர்ணம் காவல்நிலையத்தில் ஆன்லைன் மூலம் புகார் அளிஉத்துள்ளார் தமிழ்ச்செல்வி. போலீஸார் இதுகுறித்து விசாரித்து வருகின்றனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘எல்லோரையும் சமமா நடத்துங்க’... ‘வழிகாட்டுதல்களில் எல்லையை தாண்டுறீங்க’... ‘இந்தியாவுக்கு எதிர்ப்பு தெரிவித்த சீனா’!
- 1. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 23 பேர் கொரோனாவால் மரணம்! 2. தமிழ்நாட்டில் வங்கிகளின் நேரம் மீண்டும் மாற்றம்!
- 'தமிழகத்தில்' வங்கிகளின் 'வேலை' நேரத்தில் 'மீண்டும்' மாற்றம்... வெளியாகியுள்ள 'புதிய' அறிவிப்பு... 'விவரங்கள்' உள்ளே...
- “EMI-ஐ தள்ளிப்போடணும்.. இப்ப வந்த OTP நம்பர சொல்லுங்க?”.. கிளம்பும் சைபர் ஃப்ராடுகள்... அலெர்ட் பண்ணிய ஐபிஎஸ் ரூபா!
- 'அத அங்கேயே வைங்க' ... 'இப்போ எப்படி எடுக்குறேனு பாருங்க' ... அட அட இதுவல்லவோ Social distancing ... வங்கி ஊழியரின் கொரோனா விழிப்புணர்வு
- ‘பொதுமக்களின் நலனுக்காக’... ‘நாளை முதல் வங்கிகள்’... 'ரிசர்வ் வங்கி புதிய உத்தரவு'!
- 'ஹலோ... நாங்க லண்டன்ல இருந்து கால் பண்றோம்!'... ஆன்லைன் மூலம் சம்பாதிக்க... ஆசை வார்த்தை காட்டிய ஈரோடு இன்ஜினியர்கள்!... கோடிக்கணக்கில் மோசடி... வேற லெவல் ஸ்கெட்ச்!
- 'ஜீரோ பேலன்ஸ் வைத்துக்கொள்ளலாம்'... 'ஏடிஎம்மில் பணம் எடுக்க கட்டணம் இல்லை'... 'நிதியமைச்சரின் இன்னும் பல முக்கிய அறிவிப்புகள்'!
- ‘கொரோனா’ பரவலைத் தடுக்க... ‘இன்று’ முதல் ‘வங்கி’ வேலை நேரம், சேவையில் ‘மாற்றம்’... ‘விவரங்கள்’ உள்ளே...
- 'பொள்ளாச்சிக்கு இதுக்காகத் தான் வந்தேன்’... ‘கடைசியில் ஏமாற்றம் தான் மிஞ்சியது’... ‘பி.டெக்., எம்.பி.ஏ. படித்த இளைஞர் செய்த அதிர்ச்சி காரியம்’!