'காத்து வாக்குல லேப்டாப்புடன்... தென்னந்தோப்பில் கடையைப் போட்ட ஐ.டி. ஊழியர்கள்!'... தேனியை அதிரவைத்த டெக்கீஸ்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கொரோனா அச்சம் காரணமாகத் தென்னந்தோப்பில் லேப்டாப்புடன் ஐ.டி ஊழியர்கள் வேலை செய்யும் நிகழ்வு வைரலாகி வருகிறது.
தேனியில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஐ.டி. நிறுவன ஊழியர்கள் கிராமத்தில் இருந்து பணிபுரிந்து வருகின்றனர்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில், பெரும்பான்மையான நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை வீட்டிலிருந்தே பணிபுரியுமாறு அறிவுறுத்தியுள்ளது. இதன் காரணமாக, ஐ.டி. ஊழியர்கள் பலர் வீட்டிலிருந்து பணிபுரிந்து வருகின்றனர்.
இந்நிலையில், கொரோனா அச்சம் காரணமாக பெங்களூரில் ஐடி நிறுவன ஊழியர்கள் சிலர், தேனி மாவட்டத்தில் உள்ள கிராமத்திற்கு சென்று தங்கள் குழுவோடு தங்கி வேலை பார்க்கிறார்கள். தேனி அருகே அனுமந்தம்பட்டி கிராமத்தில் தங்கி வேலை செய்யும் இவர்கள், தங்களுக்கு இந்த இயற்கையான சூழ்நிலை வேலை பார்ப்பதற்கு வசதியாக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
இது குறித்து, குழுவில் உள்ள ஐ.டி. நிறுவன ஊழியர் ஒருவர் பேசுகையில், "முதல் காரணம் பயம். அதனாலேயே நாங்கள் இங்கு வந்து பணிபுரிகிறோம். நகர்ப் புறங்களில் கொரோனா அபாயம் அதிகமாக இருக்கிறது. கிராமப் புறங்களில் அந்த அச்சம் முற்றிலும் தவிர்க்கப்படுகிறது. ஒரு முறை பணிநிமித்தம் காரணமாக நெதர்லாந்து சென்றேன். அப்போது அங்கு கிராமத்தில் இருந்து பணிபுரியும் வகையில் சூழ்நிலை அமைந்தது. அந்த சூழல் குழுவின் உற்பத்தித் திறனை அதிகப்படுத்தியது. அங்கு செயல்படுத்தியதை தற்போது இங்கும் செயல்படுத்த நினைத்தோம். இங்கு நல்ல சாப்பாடு கிடைக்கிறது. நல்ல காற்றை சுவாசிக்க முடிகிறது. குறிப்பாக கொரோனா அச்சம் இல்லை" என்றார்.
இந்த சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘சரி வீட்டுக்கு வாங்க பேசிக்கலாம்!’.. ‘தகாத உறவை அடுத்து’.. ‘பெண் செய்த காரியம்’.. ‘கார் டிரைவருக்கு நேர்ந்த கதி!’
- ‘சாப்பாடு கொடுக்க மறுத்த பெண்ணுக்கு நேர்ந்த கதி’.. ‘போதையில் கணவர் செய்த கொடூரம்!’
- ‘ஹனிமூனில் இருந்து பெங்களூரு திரும்பிய’... ‘ஐடி நிறுவன கணவருக்கு கொரோனா’... ‘விமானம், ரயில் என பரப்பிய மனைவி’... பொங்கியெழுந்த நெட்டிசன்கள்!
- 'ஊழியருக்கு கொரோனா இருக்குமோனு'... 'சந்தேகமா இருக்குறதுனால’... ‘பெங்களூரில் அலுவலகத்தை’... ‘காலி செய்த இன்ஃபோசிஸ் நிறுவனம்’!
- 'பொள்ளாச்சிக்கு இதுக்காகத் தான் வந்தேன்’... ‘கடைசியில் ஏமாற்றம் தான் மிஞ்சியது’... ‘பி.டெக்., எம்.பி.ஏ. படித்த இளைஞர் செய்த அதிர்ச்சி காரியம்’!
- ‘நான் அத எடுக்கல சார்’!.. ‘அப்பா இல்லாத பையன்’.. 9ம் வகுப்பு மாணவன் எடுத்த முடிவு.. நெஞ்சை உருக்கும் சோகம்..!
- ‘30 அடி உயர மேம்பாலத்தில் இருந்து’... ‘அந்தரத்தில் பறந்து கீழே தண்டவாளத்தில் விழுந்த பைக்’... 'அதிவேகத்தில் சென்ற'... 'சென்னை என்ஜீனியருக்கு நேர்ந்த சோகம்'!
- இந்தியாவில் ‘30 பேருக்கு’ கொரோனா பாதிப்பு... ‘அடுத்த’ அறிவிப்பு வரும் வரை... அலுவலகத்தை ‘மூடிய’ பிரபல ‘ஐடி’ நிறுவனம்...
- சிகிச்சை பலனின்றி 'என்ஜினியர்' பலி... கொரோனா வைரசால் உயிரிழந்தாரா?... வாட்ஸ்அப் 'வைரலால்' பொதுமக்கள் அதிர்ச்சி!
- ‘கொரோனா பாதித்த என்ஜினீயருடன்’... ‘தொடர்பில் இருந்த 36 பேருக்கு நோய் தொற்று அறிகுறி’...