ராம், ஆதிபகவான் எடுத்த அமீர் அண்ணா இந்துத்துவவாதியா?.. அமீரின் குற்றச்சாட்டுக்கு எதிராக Bakasuran மோகன்.ஜி பரபரப்பு பேட்டி..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

பகாசூரன் திரைப்படத்தில் செல்வராகவன், நட்டி (எ) நட்ராஜ் உள்ளிட்டோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். கடந்த பிப்ரவரி 17 ஆம் தேதியன்று வெளியானது.

Advertising
>
Advertising

முன்னதாக இந்த திரைப்படத்தில் பத்திரிகையாளர்களின் சந்திப்பில் பேசிய இயக்குநர் மோகன்.ஜி, பகாசூரன் படம் கல்லூரி பெண்களை மிரட்டியும் அவர்களின் வறுமை சூழலை பயன்படுத்தியும் ஆன்லைன் செயலிகள் மூலம் பாலியல் குற்றங்களில் ஈடுபடுத்தும் உண்மை சம்பவங்கள் குறித்த தகவல் தனக்கு தெரியவந்ததாகவும், அதனால் உடனடியாக  அதை படமாக்க வேண்டும் என, தானே வாடிக்கையாளராக சென்று அந்த பெண்களை காவல்துறை மற்றும் பத்திரிகை நண்பர்கள் உதவியுடன் மீட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதுபோன்ற ஆன்லைன் பாலியல் குற்றங்களில் பெண்களின் வாழ்க்கை சீரழிக்கப்படுவதாகவும், பலரும் இதில் பணத்தை இழந்துள்ளதாகவும், இப்படி பெரும் குற்றப் பின்னணி இதில் உள்ளதாகவும் கூறி மோகன்.ஜி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். செல்போன்களை நாம் நம் பிள்ளைகள் நல்லனவற்றுக்காக பயன்படுத்துவதாக நினைப்போம், பெரும்பாலானோர் நல்ல விதமாக பயன்படுத்தினாலும் சிலர் பணம் சம்பாதிக்கும் மோகம், தவறுதலான மிரட்டல்கள் உள்ளிட்டவற்றுக்கு பயந்து இப்படியான குற்றங்களில் ஈடுபடுகின்றனர். எனவே மொபைல் பயன்பாடு குறித்த விழிப்புணர்வு அவசியம் என பேசிய மோகன்.ஜி, அதை பற்றியே பகாசூரன் படம் பேசப்போவதாகவும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், “மோகன்.ஜி ஒரு இந்துத்துவவாதி என தனியே பிரித்து சொல்ல வேண்டியதில்லை. ஆனால் எச்.ராஜா, அண்ணாமலை ஆகியோர் மோகன்.ஜி படத்தை ஓடிவந்து பார்த்து ஆதரவு கருத்து சொல்கிறார்கள். ஏன் இவர்கள் அசுரன் பார்க்கவில்லை, ஏன் பா.ரஞ்சித்தின் மெட்ராஸ், காலா, கபாலி படங்களை பார்க்கவில்லை. பார்த்து கருத்தை முன்வைக்கவில்லை. இந்த கேள்வி வரும்போது அது உறுதிசெய்யப்படுமா இல்லையா? இந்த ஆரோக்கியமற்ற சூழலை வடநாட்டில் உருவாக்கிவிட்டார்கள். தமிழ்நாட்டில் உருவாக்கப் பார்க்கிறார்கள்” என இயக்குநர் அமீர் சொல்லியிருக்கும் கருத்து குறித்து, பகாசூரன் படத்தின் இயக்குநர் மோகன்.ஜி தற்போது பேசியுள்ளார்.

அதில், “அமீர் சாரின் இந்த குற்றச்சாட்டு என்னை காயப்படுத்துகிறது. இன்றைய சூழலில் ஒரு படம் தயாரித்து தியேட்டருக்கு கொண்டு வருவது சிரமம் என்பது அவர்களுக்கும் தெரியும். இந்த நேரத்தில் எனது பின்னால் பாஜக உள்ளதா என்பது போலான கருத்து படம் பார்ப்பவர்களை யோசிக்க வைக்கும். அமீர் அண்ணனுக்கு நான் சொல்லிக்கொள்வது நான் இந்த படத்தின் இயக்குநர் மட்டும் இல்ல. தயாரிப்பாளரும் கூட.. எனக்கு ஃபைனான்சியர் சந்திரபிரகாஷ் ஜெயின் மற்றும் திருச்சியில் இருந்து சத்யகுமார் என்கிற விநியோகஸ்தர் ஆகியோர் இப்படம் எடுக்க பணம் கொடுத்து உதவினர். இந்த படத்திலும் எந்த வகை சர்ச்சையும் இல்லாமல் படம் பண்ணியதாக விமர்சனங்கள் வந்துள்ளன.

சில சேனல்கள் சொல்லும் அவதூறை நம்பி, அமீர் அண்ணன் வைத்த குற்றச்சாட்டு தப்பு. இந்த பக்கம் நான் கலைஞர் டிவிக்கு படம் கொடுத்துவிட்டதால், நான் திராவிட சித்தாந்தத்துடன் சேர்ந்துவிட்டேன் என குறை சொல்கிறார்கள். இந்த பக்கம் அமீர் அண்ணன் அப்படியே மாத்தி என் பின்னால் பாஜக இருப்பதாக சொல்கிறார். திரௌபதி படத்துக்கு எனக்கு மிரட்டல் வந்தபோது எனக்கு முதல் ஆளாக ஆதரவு தந்தவர்கள் எச்.ராஜா மற்றும் மருத்துவர் ஐயா அவர்கள். அதே மாதிரி ருத்ரதாண்டவத்தின்போது மிரட்டல் வந்தபோதும் அனைவருக்கும் படத்தை போட்டு காண்பித்து வெளியிட்டேன்.

குறைந்தபட்சம் என் படத்தை பாமக கட்சிக்காரர்கள் பார்க்கிறார்கள், அவர்கள் என் பின்னால் இருக்கிறார்கள் என்று சொன்னால் கூட அதில் உண்மை இருக்கு, நியாயம் இருக்கு.. ஆனால் பாஜக மற்றும் எச்.ராஜாவிடம் இருந்து பணம் வாங்கியதாக சொல்வதில் என்ன நியாயம் இருக்கு? நீங்கள் இதை நான் ஒப்புக்கொள்ளவேண்டும் என சொல்கிறார்கள். நீங்கள் இதற்கு ஆதாரத்தை நிரூபிக்க வேண்டும், இல்லை என்றால் இந்த கருத்தை பின்வாங்கிக் கொள்ள வேண்டும். ஓடிக்கொண்டு இருக்கும் படத்தின் மீது இப்படி அபாண்ட குற்றச்சாட்டை வைக்காதீர்கள். நீங்கள் வேண்டுமானால் இந்த படத்தை பார்க்க தனி ஷோ அரேஞ்ச் பண்ணுகிறேன். அதை பார்த்துவிட்டு பிஜேபி, ஆர்.எஸ்.எஸ் கருத்தை இந்த பிரச்சாரம் பண்ணுகிறதா என படம் பார்த்துவிட்டு சொல்லுங்க. என் அப்பன் அல்லவா பாட்டை இந்த படத்தில் வைத்ததற்காக இப்படி சொல்ல வேண்டியதில்லை. அண்ணாமலை சார், எச்.ராஜா சார் ஆகியோர் இந்த படத்தை பார்த்து கருத்து சொன்னார்கள் என்றால், அசுரன் படத்தை கூட தான் பல தலைவர்கள் பார்த்து கருத்து சொல்லி இருக்கிறார்கள். அப்படியானால் அவர்கள் மட்டும்தான் படத்தை பார்க்க வேண்டுமா? எனக்கு புரியவில்லை.

நான் சீமான், அதிமுக பிரமுகர்கள், சவுக்கு சங்கர் என பலரையும் அழைத்திருந்தேன். ஆனால் அனைவரும் கட்சி பிரச்சாரங்களில் இருக்கிறார்கள். என் தொடர்பிலும் அணுகக்கூடிய தூரத்தில் இருப்பவர்களையே அழைத்துள்ளேன். நான் யாரிடமும் பணம் பெற்றுக்கொண்டு ஆதரவாக படம் எடுக்கவில்லை. அமீர் அண்ணன் கூட ராம், ஆதிபகவான் ஆகிய படங்களை எடுத்தார். அப்படியானால் அமீர் அண்ணனும் இந்துத்துவா கருத்துக்களை பரப்பினாரா? இந்த படம் மொபைல் போனில் இருக்கும் செயலிகள் மூலம் இளைஞர்களுக்கு என்னென்ன பிரச்சனைகள் உள்ளது என்பது குறித்த விழிப்புணர்வை பெற்றோருக்கு உண்டுபண்ணவே இந்த படம் என்பதை சொல்லிக் கொள்கிறேன்!” என குறிப்பிட்டுள்ளார்.

AMEER, MOHAN G, BAKASURAN, SELVARAGHAVAN, AMEER MOHAN G CONFLICT

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்