ஒரு 'ஃபோர்டு' காரு, அப்றமா 56 பக்க 'மாந்திரீகக்' கையேடு... 'நரபலி' கொடுத்த 'பெண்' மந்திரவாதியின்... 'அதிர்ச்சி' பின்னணி!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே நொடியூரைச் சேர்ந்த 13 வயது சிறுமியை சொந்த தந்தையே நரபலி கொடுத்த சம்பவம் தமிழகம் முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஒரு 'ஃபோர்டு' காரு, அப்றமா 56 பக்க 'மாந்திரீகக்' கையேடு... 'நரபலி' கொடுத்த 'பெண்' மந்திரவாதியின்... 'அதிர்ச்சி' பின்னணி!
Advertising
Advertising

இந்த வழக்கில், சிறுமியின் தந்தை பன்னீர் மற்றும் அவரது உறவினர் ஒருவரை போலீசார் கைது செய்தனர். அதே போல இந்த வழக்கில் தொடர்புடைய மந்திரவாதியை போலீசார் மடக்கிப்பிடித்து விசாரணை நடத்தினர். முதற்கட்டமாக நடந்த விசாரணையில், மந்திரவாதி வசந்தி பன்னீரிடம் உனது முதல் மனைவியின் மூன்றாவது குழந்தையை பூஜை செய்து பலி கொடுத்தால் உனது வீட்டில் செல்வம் பெருகும் என கூறியதன் பெயரில் இந்த நரபலி கொடுக்கப்பட்டது தெரியவந்தது. அதே போல, யாருக்கும் சந்தேகம் வராதபடி, காலை நேரங்களில் காய்கறி வியாபாரமும், இரவு நேரங்களில் மாந்திரீகக் வேலைகளிலும் ஈடுபட்டு வந்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மந்திரவாதி வசந்தியை சிறையில் அடைத்தனர். மேலும், வசந்தியிடம் இருந்து ஃபோர்டு கார், செல்போன், கருப்பு மை டப்பா, வெள்ளிக்காப்பு, தேங்காய், வெள்ளி தாயத்து, வெள்ளி ருத்ராட்ச மாலை, பாசி மாலை, 13 வெள்ளை நிறக் கோழிகள், 56 பக்கம் கொண்ட மாந்திரீகக் கையேடு, எரிந்த மரத்துண்டுகள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்