"24 மணி நேரம் Bigg Boss பாக்குறவங்க கிட்ட மாட்டிப்பா, அவ பண்ற சேட்டை..".. அசிம் சொன்ன வார்த்தை.. பதிலுக்கு ஷிவின் சொன்னது தான்!!
முகப்பு > செய்திகள் > தமிழகம்பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் சமீபத்தில் ஜனனி மற்றும் தனலட்சுமி ஆகியோர் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறி இருந்தனர்.
இதற்கு அடுத்தபடியாக, தற்போது பிக் பாஸ் வீட்டில் Freeze டாஸ்க் நடைபெற்று வருகிறது. இந்த டாஸ்க்கில் மீதமுள்ள 9 போட்டியாளர்களின் பெற்றோர்கள், குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் உள்ளிட்டோர் வருகை தந்த வண்ணம் உள்ளனர்.
முந்தைய வார டாஸ்க்கிற்கு மத்தியில் குடும்பத்தினர் குறித்து பேசியும், கடிதங்கள் எழுதியும் நிறைய போட்டியாளர்கள் கண் கலங்கி போயிருந்தனர்.
அப்படி ஒரு சூழலில், இந்த வாரம் தங்களின் குடும்பத்தினர் உள்ளிட்டோர் பிக்பாஸ் வீட்டில் வருகை தருவது அனைத்து போட்டியாளர்களையும் உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளது. மைனா நந்தினியின் கணவர் யோகேஷ் மற்றும் அவரது குழந்தை ஆகியோர் வருகை தந்திருந்தனர். இதே போல ஷிவினின் நண்பர்கள் அங்கே வந்திருந்தனர். இது தவிர அமுதவாணன் மனைவி மற்றும் குழந்தைகளும், பின்னர் மணிகண்டா ராஜேஷை பார்க்க அவரது தாய், மனைவி, குழந்தை மற்றும் நடிகையும், சகோதரியுமான ஐஸ்வர்யா ராஜேஷூம் பிக்பாஸ் வீட்டிற்குள் என்ட்ரி கொடுத்திருந்தனர்.
அதே போல ரச்சிதாவை பார்க்க, அவரது தாய் மற்றும் சகோதரர் உள்ளிட்டோர் வருகை புரிந்திருந்தனர். இதே போல, ஏடிகேவை பார்க்க அவரது தாய் மற்றும் தந்தை ஆகியோர் உள்ளே வந்திருந்தனர். விக்ரமன் மற்றும் கதிரவனின் பெற்றோர்கள், அசிமின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் உள்ளிட்டோரும் பிக்பாஸ் வீட்டில் வருகை தந்துள்ளனர்.
மேலும் பிக் பாஸ் வீட்டில் வருகை தரும் போட்டியாளர்களின் குடும்பத்தினர், ஹவுஸ்மேட்ஸ் குறித்தும் நிறைய விஷயங்களை பேசி வருகின்றனர். தங்களின் பேவரைட் போட்டியாளர்கள் யார் என்பது குறித்தும், எப்படி அவர்கள் கேம் ஆடுகிறார்கள் என்பது பற்றியும் தங்களது கருத்துக்களை அவர்கள் வெளிப்படுத்தி வருகின்றனர்.
இதற்கு மத்தியில், Freeze டாஸ்க்கில் பிக் பாஸ் வீட்டிற்கு வருகை தந்திருந்த அத்தனை போட்டியாளர்கள் பெற்றோர்கள் மற்றும் குடும்பத்தினர் அனைவரும் ஷிவினை பெரிய அளவில் பாராட்டி இருந்தனர். முன்னதாக, தனது தாய் பிக் பாஸ் வீட்டில் வர மாட்டேன் என கூறியதை எண்ணி அதிகம் கண்ணீர் விட்டிருந்தார் ஷிவின்.
ஆனால், ரச்சிதாவின் தாய், ஏடிகேவின் தந்தை உள்ளிட்ட பலரும் ஷிவினை தங்களின் மகள் போல பார்ப்பதாகவும் பெருமிதத்துடன் குறிப்பிட்டிருந்தனர். இதே போல விக்ரமனின் தந்தை கூட உனக்கு யாரும் இல்லை என ஃபீல் செய்ய வேண்டாம் என்றும் நாங்கள் அனைவரும் இருப்பதாகவும் ஆதரவாக பேசி இருந்தார். தனது தாய் வரவில்லை என்ற போதிலும் இத்தனை போட்டியாளர்களின் பெற்றோர்கள் அன்பு ஷிவினுக்கு கிடைத்தது அவரை பெரிய அளவில் மகிழ்ச்சியில் ஆழ்த்தி இருந்தது.
மேலும், Freeze டாஸ்க் மத்தியில் ஷிவின் குறித்தும் பல கருத்துக்கள் அதிகம் இணையத்தை ஆக்கிரமித்து வருகிறது. இந்த நிலையில், ஷிவின் குறித்து அசிம் பேசிய விஷயமும், அதற்கு ஷிவின் கொடுத்த பதில் கருத்தும் தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.
அசிம், ஏடிகே, அமுதவாணன், விக்ரமன், ஷிவின் உள்ளிட்ட பல போட்டியாளர்கள் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது பேசும் அசிம், "24 மணி நேரம் பிக் பாஸ் பாக்குறவங்க கிட்ட ஷிவின் மாட்டிப்பா. அவ பண்ற சேட்டை எல்லாம் தெரியும். 24 மணி நேரம் பாக்குறவங்களுக்கு அது கண்டிப்பா தெரியும்" என அசிம் தெரிவிக்கிறார்.
இதற்கு பதில் சொல்லும் ஷிவின், "நான் ஏன் மாட்டிக்க போறேன்?. நானும் அதுக்கு தான் ஆசைப்படுறேன் 24/7 பாக்கணும்ன்னு" என குறிப்பிடுகிறார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- "அந்த ஹவுஸ்மேட் கிட்ட கோபப்படாத".. அம்மா சொன்ன விஷயம்.. அடுத்த நிமிஷமே கண் கலங்கி பதில் சொன்ன ரச்சிதா
- "வெளிய போனதும் விக்ரமனுக்கு கல்யாணமா?".. பொண்ணோட வந்துருவாருன்னு கத்திய ஷிவின்.. விக்ரமன் தாய் கொடுத்த ரியாக்ஷன்!!
- "அம்மா தான் அப்டி பண்ணாங்கன்னு Feel பண்ணி பேசுனேன், ஆனா".. உள்ள வந்த தோழி சொன்ன உண்மை.. உடைந்து அழுத ஷிவின்!!
- "Bigg Boss டைட்டில் வின்னர்".. Elimination ஆன தனலட்சுமிக்கு அசீம் சொன்ன நெகிழ்ச்சி வார்த்தைகள்!
- Chellamma : “அவள மொதல்ல விரட்டிவிடுங்க.. செல்லம்மாவ கல்யாணம் பண்ணுங்க”.. அர்ணவிடம் சொல்லும் ரசிகைகள்.. வீடியோ
- “ஐதராபாத்ல இருந்து வந்தா பெரியா ஆளா நீ?”.. சீரியல் ஷூட்டிங்கில் வார்த்தையை அசிம்..? பதிலுக்கு கெட்ட வார்த்தையில் திட்டிய ஹீரோயின்.! தேவிப்ரியா Breaking Interview
- அமுதுவை உள்ளே போகச் சொன்ன ஜனனி.. 'ஃபேவரைட்டிஸமா'?.. ஷிவின் வைத்த விமர்சனம்..!! பரபரக்கும் Bigg Boss Tamil
- Rachitha : “இன்னும் 3 வருஷம்தான்.. அந்த ஒரு விஷயத்துக்கு..”.. குழந்தைகள் பற்றி பிக்பாஸில் ரச்சிதா உருக்கம்.! bigg boss 6
- "ஃபினாலேவுல கமல் சார் என் பெயரை அறிவிச்சாரு" - அமுதவாணன் கண்ட கனவு.. "நானும் ஒரு கனவு கண்டேன்" - அழகாய் சொன்ன கமல் 😍
- அசீமை பிக்பாஸ்கிட்ட கோர்த்து விட்ட மைனா.. "டக்குன்னு திரும்பி, அசீம் சொன்ன விஷயத்த கேட்டு சிரிக்க ஆரம்பிச்ச ஹவுஸ்மேட்ஸ்!!