‘வேண்டாம்’!.. சட்டென பாதுகாவலர் கையை பிடித்து ‘தடுத்த’ ராகுல்காந்தி.. அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் நடந்த சுவாரஸ்யமான சம்பவம்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை பார்த்தபோது சுவாரஸ்யமான சம்பவம் ஒன்று நடந்தது.

தமிழகம் முழுவதும் இன்று பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. அந்தவகையில் இன்று மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் தமிழர்களின் பாரம்பரியமான ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது. இப்போட்டியை பார்ப்பதற்காக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தனி விமானம் மூலம் டெல்லியிலிருந்து மதுரை வந்தார்.

இதனை அடுத்து அவனியாபுரம் சென்று ஜல்லிக்கட்டு போட்டியை கண்டுகளித்தார். அப்போது மாடுபிடி வீரர்கள் பரபரப்பாக காளைகளை பிடிக்க முயன்றதை பார்த்த ராகுல்காந்தி, ஆர்வத்தில் எழுந்து நின்று பார்க்க ஆரம்பித்தார். அந்த சமயம் சீறி பாய்ந்த காளை ஒன்று மாடுபிடி வீரர்கள் போக்கு காட்டியது.

திடீரென வீரர்களை பார்த்து காளை வந்ததும், அதற்கு பயந்து மேடை அருகில் உள்ள தடுப்பில் வீரர்கள் சிலர் வேகமாக ஏறினர். ராகுல்காந்தி நின்றிருந்த இடத்தில் வீரர்கள் ஏறி வருவதைப் பார்த்த பாதுகாவலர் ஒருவர் வேகமாக அவர்களை தடுக்க முயன்றார். இதனை கவனித்த ராகுல்காந்தி சட்டென பாதுகாவலரின் கையை பிடித்து தடுத்தார்.

சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட ராகுல்காந்தியுடன், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் ஜல்லிக்கட்டு போட்டியை கண்டுகளித்தனர்.

இதனை அடுத்து தென்பழஞ்சி என்ற ஊருக்கு சென்ற ராகுல்காந்தி, அங்கு காங்கிரஸ் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொங்கல் விழாவில் கலந்துகொண்டார். பின்னர் மக்களுடன் ஒன்றாக அமர்ந்து மதிய உணவு சாப்பிட்டார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்