நாளை தொடங்குகிறது 'அவனியாபுரம்' ஜல்லிக்கட்டு... நாளை மறுநாள் 'பாலமேடு'.... அடுத்த நாள் 'அலங்காநல்லூர்'... மிஸ் பண்ணாம பாருங்க...
முகப்பு > செய்திகள் > தமிழகம்பொங்கல் திருநாளான நாளை அவனியாபுரத்தில் காலை 8 மணிக்கு ஜல்லிக்கட்டு தொடங்குகிறது. நாளை மறுநாள் பாலமேட்டிலும், 17-ந் தேதி உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது.
ஜல்லிக்கட்டுக்கு புகழ்பெற்றது மதுரை. இங்கு பொங்கல் திருநாளையொட்டி 3 நாட்களும் உலகப் புகழ்பெற்ற, பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகள் பிரம்மாண்டமாக நடத்தப்படுவது வழக்கம்.
முதல் தொடக்கமாக பொங்கல் தினமான நாளை அவனியாபுரத்தில் காலை 8 மணிக்கு ஜல்லிக்கட்டு தொடங்குகிறது. இதற்கு அவனியாபுரம்-திருமங்கலம் சாலையில் வாடிவாசல் அமைக்கப்பட்டுள்ளது. பார்வையாளர்கள் நின்று ரசிக்க பேரிகார்டுகள் மாவட்ட நிர்வாகம் சார்பில் அமைக்கப்பட்டுள்ளன.
வீரர்களுக்கு பயிற்சி, காளைகளுக்கு பயிற்சி ஓரிரு மாதங்களுக்கு முன்பே தொடங்கி விட்ட நிலையில், ஏற்கெனவே பயிற்சி பெற்ற வீரர்களுக்கும், காளைகளுக்கும் ஜல்லிக்கட்டு கமிட்டியிடம் பதிவு செய்து விட்டனர். போட்டியில் பங்கேற்க, மதுரை, திணடுக்கல், தேனி, கம்பம், ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து 700 காளைகள் பதிவு செய்யப்பட்டு, டோக்கன்கள் வழங்கப்பட்டுள்ளன.
உயர்நீதிமன்ற உத்தரவுப்படி அமைக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதிபதி மாணிக்கம் தலைமையிலான குழு, நாளை காலை 8 மணிக்கு போட்டியை தொடங்கி வைக்கிறது. முதலில் நாட்டாமைக்கு சொந்தமான காளை வாடிவாசலில் அவிழ்த்து விடப்படும். அதன் பிறகு பதிவு செய்யப்பட்ட காளைகள் ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்படும். ஒருமணி நேரத்திற்கு ஒருமுறை இந்த குழு மாற்றப்பட்டு, மற்றொரு குழு இறக்கப்படும். சிறந்த மாடுபிடி வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளுக்கும் பித்தளை அண்டாக்கள், சைக்கிள், குத்துவிளக்கு, வேஷ்டி-துண்டு போன்றவை பரிசாக வழங்கப்பட உள்ளன.
இப்போட்டியைத் தொடர்ந்து 16-ந் தேதி காலை, மதுரை பாலமேட்டில் ஜல்லிக்கட்டு நடைபெற உள்ளது. மஞ்சள்மலைசாமி ஆற்று திடலில் வாடிவாசல் அமைக்கப்பட்டு உள்ளது. இங்கு 700 காளைகள் களம் இறங்க உள்ளன.
உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு 17-ந் தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெற உள்ளது. அங்குள்ள கோட்டை முனிசாமி திடலில் வாடிவாசல் அருகில் முகூர்த்தக்கால் நேற்று நடப்பட்டது.
அலங்காநல்லூர், பாலமேட்டில் முதலில் கோவில் காளைகள் அவிழ்த்து விடப்படும். அதனை யாரும் பிடிக்க மாட்டார்கள். அதன் பிறகே வாடிவாசல் வழியாக பதிவு செய்யப்பட்ட காளைகள் அவிழ்த்து விடப்படும். உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் பங்கேற்பதை பலரும் பெருமையாக கருதுகின்றனர். இதனைக் காண வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலாப்பயணிகள் மதுரை வந்து தங்கியுள்ளனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- இன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்...!
- ‘திடீரென இடிந்து விழுந்த வீட்டுச்சுவர்’.. விளையாடிக் கொண்டிருந்த 2 குழந்தைகள் மூச்சுத் திணறி பலியான பரிதாபம்..!
- 'பையன் பாத்துடான், இனிமேல் சும்மா இருக்க கூடாது'... 'பெற்ற தாயே செய்த பாதகம்'... நடுங்க வைக்கும் சம்பவம்!
- ‘திறந்திருந்த வீடு’.. ‘மகள் கண்முன்னே தாய்க்கு நடந்த கொடூரம்’.. கணவரின் பகீர் வாக்குமூலம்..!
- "பக்தர்கள் மீது தாக்குதல்"... "டோல்கேட் ஊழியர்கள் கைது"... "நடந்தது என்ன?"...
- ‘தர்பார் படம் ஹிட் ஆகணும்’!.. ‘அலகு குத்தி’ ரசிகர்கள் வெறித்தனமான பிரார்த்தனை..! எந்த ஊர்ல தெரியுமா..?
- ஜல்லிக்கட்டு: காளையை அடக்கும் வீரர்களுக்கு புதிய கட்டுப்பாடு... இவங்களுக்கு எல்லாம் அனுமதி இல்ல!
- ‘அதிகாலையில்’ வீட்டுக்குள் ‘புகுந்த’ மர்ம நபர்களால்... ‘மதுரையில்’ இளம்பெண்ணுக்கு நடந்த ‘பதறவைக்கும்’ சம்பவம்...
- VIDEO: டிரான்ஸ்பார்மரில் தற்கொலைக்கு முயன்ற 'ராணுவ வீரர்'.. நொடியில் நடந்த பயங்கரம்..! பரபரப்பு வீடியோ..!
- 'கவுன்சிலர் ஆன என்ஜினீயரிங் பட்டதாரி'... 'திடீரென சுவர் ஏறிக் குதித்து ஓட்டம்'... பரபரப்பு காரணம்!