வெல்டிங் மெஷினால் ATM உடைத்து கொள்ளை.. போலீசில் மாட்டிக் கொள்ளாமல் இருக்க கொள்ளையர்கள் செய்த செயல்.. நாமக்கல் அருகே அதிர்ச்சி..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

ஏடிஎம் எந்திரத்தை உடைத்து மர்ம நபர்கள் பணத்தை கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertising
>
Advertising

நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் அருகே சேலம்-நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் பெருமாள்கோவில் பஸ் நிறுத்தம் உள்ளது. இங்கு உள்ள தனியார் வணிக வளாக கட்டிடத்தில், சுமார் 8 வருடங்களாக தனியார் வங்கிக்கு சொந்தமான ஏடிஎம் மையம் செயல்பட்டு வந்தது. கடந்த 2 மாதங்களாக அதே பகுதியை சேர்ந்த முதியவர் கணேசன், ஏடிஎம் மையத்தை சுத்தம் செய்து பராமரிக்கும் பணியில் இருந்து வந்தார்.

இந்த நிலையில் இன்று அதிகாலை சுமார் 5 மணியளவில் கணேசன் வழக்கம்போல் ஏடிஎம் மையத்தை சுத்தம் செய்ய சென்றுள்ளார். அப்போது ஏடிஎம் மையத்தின் ஷட்டர் மூடப்பட்டிருந்தது. இதனால் அங்கிருந்த முருகேசன் என்பவரின் உதவியோடு ஏடிஎம் மையத்தின் ஷட்டரை திறந்து பார்த்து உள்ளார். அப்போது ஏடிஎம் எந்திரம் உடைக்கப்பட்டு, அதில் இருந்த பணம் திருடு போயிருந்து தெரியவந்துள்ளது.

இதனால் அதிர்ச்சியடைந்த கணேசன், அங்கு ரோந்து பணியில் இருந்த போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். உடனே சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்றுள்ளனர். இதனை அடுத்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். முதற்கட்ட விசாரணையில், கியாஸ் வெல்டிங் மூலம் ஏடிஎம் எந்திரம் உடைக்கப்பட்டு, அதில் இருந்த ரூ.4,89,900 கொள்ளை அடிக்கப்பட்டது தெரியவந்தது.

மேலும் ஏடிஎம் மையத்தின் நுழைவாயிலில் இருந்த எச்சரிக்கை ஒலிப்பானின் ஒயரை துண்டித்துவிட்டு மர்ம நபர்கள் கைவரிசையை காட்டி இருப்பதும் தெரிய வந்தது. போலீசாரிடம் மாட்டிக்கொள்ளாமல் இருக்க மிளகாய் பொடியை தூவிச் சென்றுள்ளனர். இதனை அடுத்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை போலீசார் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க்: http://www.behindwoods.com/bgm8/

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்