'ATM-ல் உதவி செய்த புண்ணியவான்!'.. 'அக்கவுண்ட்டில் இருந்து டெபிட் ஆன 50 ஆயிரம்'! புகார் கொடுக்க 'வங்கிக்கு சென்றபோது 'காத்திருந்த' அடுத்த 'அதிர்ச்சி'!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னை வளசரவாக்கம், ஜெய் கார்டன், முதல் தெருவைச் சேர்ந்த 65 வயதான பிரபாகரன் என்பவர், ஆற்காடு சாலையில் உள்ள ஏடிஎம்க்கு சென்று பணம் எடுக்க முயற்சித்துள்ளார். ஆனால் வயது மூப்பு காரணமாக, பிரபாகரன் தனது கண்பார்வை துல்லியமாக இல்லை என்று அருகில் இருந்த டிப்டாப் மனிதர் ஒருவரிடம் "சர்... சரியா தெரியல.. ப்ளீஸ் கொஞ்சம் ஹெல்ப் பண்றீங்களா?" என கேட்டுள்ளார். .
அவரோ, “அதனால் என்ன? உதவி செஞ்சுட்டா போச்சு!” என்பது போல் பிரபாகரனின் ஏடிஎம் கார்டினை வாங்கி ஸ்வைப் செய்துள்ளார். பின்னர், பிரபாகரனிடம் ஏடிஎம் பின் நம்பரை அவர் எதார்த்தமாக கேட்க, பிரபாகரன் பதார்த்தமாகச் சொல்ல, அவர் அந்த நம்பரை போட்டுள்ளார். ஆனால் “பணம் வரவில்லையே? அக்கவுண்ட்ல பேலன்ஸ் இருக்கானு மொதல்ல செக் பண்ணிட்டு வாங்க!” என்று அந்த டிப்டாப் மனிதர் பிரபாகரனிடம் கூறியதோடு, அவரிடமே ஏடிஎம் கார்டினை தந்துவிட்டு புறப்பட்டுவிட்டார். “சரி.. நமக்கு வொர்க்-அவுட் ஆகல போல” என்று சொல்லி, பிரபாகரன் அங்கிருந்து செல்ல, அப்போதுதான் பிரபாகரனின் செல்போனுக்கு அவருடைய ஏடிஎம் கார்டில் இருந்து 50 ஆயிரம் பணம் டெபிட் ஆனதாக அவருடைய செல்போனுக்கு மெசேஜ் வந்துள்ளது. இதனை பார்த்ததும் அதிர்ந்த பிரபாகரன், தனது வங்கிக்கு சென்று விசாரித்துள்ளார். அப்போதுதான் அவருக்கு இன்னொரு அதிர்ச்சி காத்திருந்தது. ஆம். பிரபாகரனின் கையில் இருந்தது அவருடைய கார்டே இல்லை.
பிளாஷ்பேக்கை ரீவைண்ட் செய்து பார்த்தால், அந்த டிப்டாப் மனிதர் பிரபாகரனின் கையில் ஒரு போலி ஏடிஎம் கார்டினை கொடுத்துவிட்டும் பிரபாகரனின் உதவியோடு அவரது ஏடிநம் நம்பரையும், பிரபாகரனுக்கே தெரியாமல் அவருடைய ஏடிஎம் கார்டினையும் லாவகமாக லாவிவிட்டு சென்றுள்ளார். இதனை அடுத்து சிசிடிவி காட்சிகளின் அடிப்படையிலும் மற்றும் வேறு ஏரியாக்களில் பிரபாகரனைப் போலவே ஏமாற்றப்பட்ட வயதானவர்களிடம் இருந்து பெற்ற போலி ஏடிஎம் கார்டுகளின் தகவல்களின் அடிப்படையிலும் விசாரித்த போலீஸார் வளசரவாக்கம் எஸ்.வி.எஸ் நகரைச் சேர்ந்த 50 வயதான பார்த்தசாரதி என்பவர்தான் இந்த குற்றங்களைச் செய்ததாக கண்டுபிடித்ததோடு, அவரிடம் இருந்த 25 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் 28 போலி ஏடிஎம் கார்டுகளை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
மீதமிருந்த பணத்தை செலவு செய்துவிட்ட பார்த்தசாரதி, ஊரடங்கு காரணமாக கையில் பணமில்லாததால், கொரோனா கால சிறப்பு திருட்டாக, வயதானவர்களை குறிவைத்து தனது கைவரிசையைக் காட்டியுள்ளார் என்பதும், இவர் விருகம்பாக்கத்தில் டெக்ஸ்டைல் கடை வைத்திருக்கும் தொழிலதிபர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'அட கடவுளே!.. இப்படி ஒரு யோசனை வராம போயிடுச்சே!'.. சிக்கியது மிகப்பெரிய துருப்புச் சீட்டு!.. ஆய்வாளர்கள் பரபரப்பு தகவல்!
- 'பயணம்' செய்பவர்கள் கவனத்திற்கு... இனி 'இதெல்லாம்' கட்டாயம்... 'தமிழக' அரசின் 'புதிய' பரிசோதனை, தனிமைப்படுத்துதல் வழிமுறைகள்...
- ரூ.20 லட்சம் கோடி பொருளாதார சலுகைகள்!.. தொழிலாளர்களுக்கு அறிவிக்கப்பட்ட சிறப்பு திட்டங்கள் என்ன?.. நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம்!
- தமிழகத்தில் 10 ஆயிரத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை!.. தொடர்ச்சியான உயிரிழப்புகள்!.. முழு விவரம் உள்ளே
- 'இவர்களுக்கெல்லாம்' அதிக ஆபத்து... கொரோனாவால் மக்கள் சந்திக்கும் 'மிகப்பெரும்' பிரச்சனை... ஐநா சபை 'எச்சரிக்கை'...
- ஆத்தி! இம்புட்டு ரூபாயா?...'ஆம்னி' பேருந்துகள் கட்டணம் 'உயர்வு'... எப்போது அமலுக்கு வரும்?
- ‘அத இப்போ பண்ணாதீங்க’.. டிரம்ப்-க்கு நேரடியாக ‘எச்சரிக்கை’ விடுத்த முக்கிய நபர்.. பரபரப்பை கிளப்பும் ஊரடங்கு விவகாரம்..!
- 'இனி ஆபீஸ் போனா வச்சு செய்வாங்க தான்'... 'ஆனா ஜாலியா போறோம்'... 7 வாரங்களுக்கு பின் துளிர்த்த நம்பிக்கை!
- சென்னையில் திடீர் திருப்பம்!.. வைரஸ் பாதித்த பகுதிகளுக்கு ஒத்துப்போகும் 'விஷயம்' கண்டுபிடிப்பு!.. களத்தில் இறங்கிய சுகாதாரத்துறை.. அதிரடி நடவடிக்கை!
- 'எது பேசுறதா' இருந்தாலும் 'ஃபோன்லயே பேசு...' 'சாதாரணமா' பேசுனாலே 'பரவுமாம்...' 'ஆய்வில் அதிர்ச்சித் தகவல்...'