'அவரோட ராசிக்கு ஜனவரியில கட்சி தொடங்க...' 'அந்த 3 நாள்கள் தான் பெஸ்ட்...' - பிரபல ஜோசியர் கணிப்பு...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

கட்சி ஆரம்பிப்பது உறுதி என நடிகர் ரஜினிகாந்த் கூறிய நிலையில் ரஜினிகாந்த் அவர்களின் ராசிக்கு ஏற்றாற்போல் கட்சி தொடங்க 3 நாட்களை குறித்து கொடுத்துள்ளார் ஜோதிடர் ஆதித்யகுருஜி.

பொதுவாகவே ரஜினிகாந்த் அவர்கள் கடவுள் நம்பிக்கை கொண்டவர் என்பது அனைவரும் அறிந்ததே. அதுவும் தற்போது ஆன்மீக அரசியல் என்ற புதியக் கோலை கையில் எடுத்துள்ளார். நேற்று அவரின் போயஸ்கார்டன் இல்லத்தில் ஜனவரி மாதம் புதிய கட்சி ஆரம்பிப்பதாக அறிவித்திருந்த நிலையில் அவரின் ஜாதகத்திற்கு ஏற்றார் போல் கட்சி துவக்க தேதியினை அறிவிப்பதற்கு அல்லது அது சம்பந்தப்பட்ட கையெழுத்துகள் இடுவதற்கு ஏற்ற ஒரு மிகவும் நல்ல ஜோதிட நேரங்களை தெரிவித்துள்ளார் ஜோதிடர் ஆதித்யகுருஜி.

தை 5, ஜனவரி மாதம் 18-ந் தேதி ,வளர்பிறை, திங்கட்கிழமை,சஷ்டி திதி, உத்திரட்டாதி நட்சத்திரம், மதியம் 12.50முதல் 1. 15 வரை கட்சி தொடங்குவதற்கு ஏற்ற நாள் எனவும், அன்று தாராபலம் ரஜினிக்கு குறைவாக உள்ள சனியின் நட்சத்திரமாக உள்ளது. ஆயினும் பிறந்த ஜாதகத்தில் சனிபகவான் அவருக்கு கேதுவுடன் இணைந்து சூட்சுமவலுவாக எதையும் நன்கு தரவல்ல அமைப்பில் இருப்பதால் இது விதிவிலக்குதான்.  ஒரு தொழிலில் ஜெயிக்க கூடிய மற்றும் அதிகார பதவியை தரக்கூடிய ஒன்பது, பத்துக்குடையவர்கள் இருவரும் பத்தாமிடத்தில் தர்மகர்மாதிபதி யோகத்தில் இணைய லக்னாதிபதி செவ்வாய் லக்னத்தில் அமர்ந்து இருப்பதால் இது சிறப்பான ஒன்று தான். சூரியனும் குருவை அஸ்தங்கப்படுத்தி அதிக சுபத்துவமாக இருக்கிறார்.

இரண்டாவது நாளாக, தை 14, ஜனவரி 27-ந் தேதி, புதன்கிழமை, வளர்பிறை, சதுர்த்தசி திதி, புனர்பூசம் நட்சத்திரம், சித்தயோகம் கூடிய, மே‌ஷ லக்னம், காலை 11.10 முதல் 11.35 வரை அவருக்கு மிகவும் சிறப்பான தாரா பலம் உள்ள நாளாக இருக்கிறது. இன்றைய புனர்பூசம் குருவின் நட்சத்திரமாக வருவது ரஜினிக்கு மிகவும் சிறப்பான ஒன்று எனவும்,  லக்னாதிபதி செவ்வாய் வலுவாக இருப்பதால் ரஜினிகாந்த் அவர்களின் எண்ணம் சிறப்பாக நிறைவேறும் எனவும் தெரிவித்துள்ளார்.

மூன்றாவது நாளாக, ஜனவரி 28, வியாழக்கிழமை, பூரண பவுர்ணமி நாளான அன்று தைப்பூச நன்னாளாகவும் அமைகிறது. ரஜினிக்கு தாராபலம் அமையாமல் சனியின் நட்சத்திரமான பூசமாக இருந்தாலும் பவுர்ணமி தினம் எதிலும் ஒரு விதிவிலக்கான நிறைவான நாள் என்பதால் வரும் ஜனவரி மாதம் 28-ந் தேதி மே‌ஷலக்னத்தில் கட்சி ஆரம்பிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்