பிறந்த நாளை முன்னிட்டு எளிய மாணவர்கள் படிப்புக்கு நிதி அளித்த விஐடி கல்விக் குழும உதவி துணை தலைவர்.!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

விஐடி கல்விக் குழுமத்தின் உதவி துணை தலைவர் காதம்பரி S. விஸ்வநாதனின் பிறந்த நாளை முன்னிட்டு அவர், ஏழை எளிய மாணவர்கள் பயன்பெறும் வகையில் ஐந்து இலட்சம் ரூபாய் நன்கொடை அளித்தார்.

Advertising
>
Advertising

மார்ச் மாதம் 6, 2023 விஐடி நிறுவனம், தங்கள் நிறுவனத்தின் உதவி துணை தலைவர் காதம்பரி S. விஸ்வநாதனின் பிறந்த நாளை வேலூ‌ர் விஐடி வளாகத்தில் சிறப்பாக கொண்டாடியது. இந்த நிகழ்ச்சியில், போபால் வளாகத்தின் பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்கள், ஆன்லைன் வாயிலாக கலந்து கொண்டனர். இதில் விஐடி போபால் உதவி துணை தலைவர் காதம்பரி S. விஸ்வநாதன், கூடியுள்ளவர்களிடையே உரையாடி பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்தவர்களுக்கு நன்றி கூறினார்.

மேலும் அவர் கூறுகையில், தொழில் துறையின் 4.0 இலக்கை நிறைவேற்றும் வகையில் பங்களிப்பை அளிக்கும் ப்யூச்சர் ரெடி பாடத் திட்டங்கள் வாயிலாக, புதிய தலைமுறையினருக்குப் பயிற்சி வழங்கிடும் விஐடி போபால் வளாகத்தின் முன்முயற்சியை வெகுவாக பாராட்டினார். மைக்ரோசாப்ட், அமேசான், ஜேபி மார்கன் சேஸ் அண்ட் கோ ஆகிய சர்வதேச பெரும் நிறுவனங்களில் ஆண்டுக்கு பத்து லட்சத்திற்கு மேல் மற்றும் ஆண்டுக்கு ஐந்து லட்சத்திற்கு மேல் ஊதியம் பெறும் வேலைக்கான ஆஃபர்களைப் பெற்ற மாணவர்களுக்கு அவர் வாழ்த்து தெரிவித்தார். சில மாணவர்கள் அதிகபட்சமாக ஆண்டுக்கு 59 இலட்சம் ஊதியம் பெறும் வேலைக்கான ஆஃபர் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

STARS திட்டத்தின் கீழ், மத்திய பிரதேசத்தில் உள்ள 21 மாவட்டங்களைச் சேர்ந்த 32 மாணவர்களை உள்ளடக்கிய STARS திட்டத்தின் முதல் அணியைச் சேர்ந்த 27 மாணவர்கள், ஆண்டுக்கு பத்து லட்சத்திற்கு மேல் ஊதியத்துடன் சூப்பர் ட்ரீம் ஆஃபரை 10 மாணவர்களும், ஆண்டுக்கு ஐந்து இலட்சத்திற்கு மேல் ஊதியத்துடன் ட்ரீம் ஆஃபரை 7 மாணவர்களும் பல்வேறு கம்பெனிகளில் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

STARS திட்டம் என்பது ஊரகப் பகுதியிலுள்ள மாணவர்களின் முன்னேற்றத்திற்கான ஆதரவு என்பதைக் குறிக்கும். அதன்படி, மத்திய பிரதேச அரசு பள்ளிகளில் படிக்கும் முன்னணி கல்வியில் சிறந்த மாணவர்களுக்கு (1ஆண், 1 பெண்) விஐடி போபாலில் இலவச கல்வியும் இலவச உணவு உறைவிடம் வழங்கப்பட்டு வருகிறது.  அவருடைய பிறந்த நாளையொட்டி அவர், உயர்கல்வி பயில விரும்பும் 10+2 முடித்த வசதி வாய்ப்பற்ற மாணவர்களுக்கு ஆதரவை நல்கும் நோக்கில் 2012ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இலாப நோக்கமற்ற நிறுவனமான Universal Higher Education Trust க்கு ரூபாய் 5 இலட்சம் நன்கொடை வழங்கினார்.

அவருடைய பிறந்த நாளை முன்னிட்டு, விஐடி போபால் வளாகத்தின் கட்டுமான தொழிலாளர்களுக்கும் கோத்ரியில் உள்ள கஸ்தூரிபா மகளிர் பள்ளி மாணவிகளுக்கும் கவாக்கேடாவில் உள்ள சீனியர் சஸ்கியா மகளிர் விடுதி மாணவிகளுக்கும் உணவு வழங்கப்பட்டது.

VIT GROUP OF INSTITUTIONS

மற்ற செய்திகள்