உங்க 'பொண்ண' மட்டும் எனக்கு கட்டி வைக்கலன்னா... 'தாய்' பணிபுரியும் இடத்திற்கு சென்று... கோவையில் நடந்த சம்பவம்...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

கோவை அருகே மகளுடன் எடுத்த செல்பியை காட்டி திருமணம் செய்து வைக்க தாயை மிரட்டிய அசாம் வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த 18 வயது இளம்பெண் தனது பெற்றோருடன் போத்தனூர் பிலால் காலனியில் வசித்து வருகிறார். இவரது தாய் ஒரு தனியார் நிறுவனத்தில் பணி புரிகிறார். இந்த நிலையில் 18 வயது இளம்பெண்ணுக்கும், அப்பகுதியில் உள்ள வண்ணாரப்பேட்டையில் தங்கி கட்டிட தொழில் செய்து வரும் அசாம் மாநிலத்தை சேர்ந்த மிதுன்ராய் (24) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது.

அவர்கள் இருவரும் நெருக்கமாக நின்று செல்பி எடுத்து கொண்டனர். இந்த நிலையில் மிதுன் ராய் இளம் பெண்ணின் தாய் வேலைபார்க்கும் தனியார் நிறுவனத்திற்கு சென்று, உங்கள் மகளை எனக்கு திருமணம் செய்து கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால் உங்கள் மகளுடன் செல்பி எடுத்து கொண்ட படத்தை வெளியிட்டு விடுவேன் என மிரட்டல் விடுத்தார். இது குறித்து அப்பெண் போத்தனூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அசாம் வாலிபர் மிதுன் ராயை கைது செய்தனர்.

LOVE, SELFIE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்