இந்திய நாட்டின் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள மந்தநிலை காரணமாக வாகன உற்பத்தி குறைந்துள்ளது. இதனால் மிகப்பெரிய நிறுவனங்களும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளன.அந்த வகையில் சென்னை எண்ணூரில் அமைந்துள்ள அசோக் லேலண்ட் நிறுவனத்தின் உற்பத்தி மிகவும் குறைந்துள்ளது.இதனால் அந்த நிறுவனம் ஊழியர்களுக்கு வேலையில்லா நாட்கள் மற்றும் விடுமுறை நாட்களை அறிவித்து வருகிறது.
இந்நிலையில் அந்நிறுவனம் மீண்டும் ஊழியர்களுக்கு வேலையில்லா நாட்களை அறிவித்துள்ளது.அதன்படி அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,''வாகன விற்பனையில் ஏற்பட்டுள்ள மந்தநிலை காரணமாக வரும் 28-ம் தேதி அக்டோபர் 1,8,9 ஆகிய தேதிகளில் வேலை நடைபெறாது.அதேபோல செப்டம்பர் 30-ம் தேதியை ஏற்கனவே வேலையில்லா நாளாக அறிவித்து இருந்தோம்.
அந்த நாட்களில் வேலை நடைபெறாது.ஊழியர்கள் யாரும் வேலைக்கு வர வேண்டாம்.மேற்கண்ட நாட்களில் சம்பளம் கொடுப்பது தொடர்பாக ஊழியர் சங்கத்துடன் கலந்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்,''என தெரிவித்துள்ளது. முன்னதாக கடந்த மாதம் 12 நாட்கள் அசோக் லேலண்ட் நிறுவனத்தில் வேலைகள் நிறுத்தப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- நாளைக்கு இங்கெல்லாம் 'கரண்ட்' இருக்காது..உங்க 'ஏரியா' இருக்கா பாத்துக்கங்க!
- நாளைக்கு இங்கெல்லாம் 'பவர்கட்'...உங்க 'ஏரியா'வும் இருக்கா?
- நாளைக்கு இங்கெல்லாம் 'பவர்கட்'...உங்க ஏரியாவும் இருக்கா 'செக்' பண்ணிக்கங்க!
- லோக்கல் 'ட்ரெயின்ல' போறீங்களா?.. நாளைக்கு இந்த ரூட்டுகள்ல 'சர்வீஸ்' கிடையாது!
- நாளைக்கு இங்கெல்லாம் 'பவர்கட்'...உங்க ஏரியாவும் இருக்கா 'செக்' பண்ணிக்கங்க!
- கோயம்பேடு,வேளச்சேரி,மாதவரம்..சென்னை மக்களே 'நாளைக்கு' இங்கெல்லாம் பவர்கட்!
- சென்னைவாசியா?..நாளைக்கு இந்த ஏரியாக்கள்ல 'பவர்கட்'..உஷாரா இருந்துக்கோங்க!
- 'சென்னை பீச் ஸ்டேஷனில்'..கத்தி-அரிவாளுடன் 'மோதிக்கொண்ட' 20 பேர் ..பயணிகள் ஓட்டம்!
- மின்சார 'ரெயிலில்' செல்வோருக்கு ஒரு 'ஷாக்' அறிவிப்பு.. விவரம் உள்ளே!
- 'நீ நாசமா போய்டுவ'... 'அவன் சாகுறதுக்கு இதுதான் காரணம்'... சென்னையில் நடந்த பரபரப்பு சம்பவம்!