Bigg boss 6 tamil : “திங்கள், செவ்வாய், புதன் அமைதியாக இருப்பார்... வியாழன், வெள்ளி, சனி அடித்துப் பறக்க விடுவார்.” - அசீம் குறித்து அசல்.!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த 5 சீசனாக, நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.

Bigg boss 6 tamil : “திங்கள், செவ்வாய், புதன் அமைதியாக இருப்பார்... வியாழன், வெள்ளி, சனி அடித்துப் பறக்க விடுவார்.” - அசீம் குறித்து அசல்.!
Advertising
>
Advertising

பிரபலங்கள் மற்றும் மக்கள் மத்தியில் அதிகம் வைரலாக இருக்கும் நபர்கள், இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த பிக்பாஸ் வீட்டிற்குள் நடக்கும் சவால்கள், சண்டை, கலகலப்பு உள்ளிட்ட பல விஷயங்கள் தான் மக்கள் மத்தியிலும் அதிகம் பேசுபொருளாக இருக்கும்.

Asal Kolar about Azeem after his elimination bigg boss 6 tamil

அந்த வகையில், இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில், யூடியூபர் ஜி.பி.முத்து, இசைக் கலைஞரான அசல் கோலார், சீரியல் நடிகர் அசீம், திருநங்கை ஷிவின் கணேசன், டான்ஸ் மாஸ்டர் ராபர்ட், மாடல் ஷெரினா, கிரிக்கெட் வீரர் ராம் ராமசாமி, ராப் சிங்கரான ஆர்யன் தினேஷ் (ADK), மாடல் ஷெரினா, தொகுப்பாளினி ஜனனி,  KPY அமுதவாணன், VJ மகேஸ்வரி, VJ கதிரவன், சத்யா சீரியல் நடிகை ஆயிஷா, ஈரோடு டிக்டாக் பிரபலம் தனலட்சுமி, நடிகை ரச்சிதா மகாலட்சுமி, ஐஸ்வர்யா ராஜேஷின் சகோதரரான மணிகண்டன் ராஜேஷ், மெட்டி ஒலி ஷாந்தி அரவிந்த், VJ விக்ரமன், மாடல் குயின்சி ஸ்டான்லி, சிங்கப்பூர் மாடல் நிவாஷினி உள்ளிட்ட 20 நபர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இவர்களுள் பலரையும் கவர்ந்த ஜிபி முத்து, தன் மகன் நினைவாக இருப்பதாக கூறி பிக்பாஸில் இருந்து வெளியேறினார். இதனை தொடர்ந்து முதல் எலிமினேஷனாக ‘மெட்டி ஒலி’ சாந்தி வெளியேற்றப்பட்டார்.  இந்நிலையில் இதற்கு அடுத்த கட்டமாக அக்டோபர் 30-ஆம் தேதி ஒளிபரப்பான எபிசோடில், அசீமா? அசலா? மகேஸ்வரியா? யார் வெளியேற்றப்படவிருக்கிறார்கள் என பரபரப்பாக பேசப்பட்டுக் கொண்டிருந்தது, முதலில் மகேஸ்வரி எலிமினேட் செய்யப்படவில்லை என கமல் அறிவித்தார்.  இறுதியாக அசல் வெளியேற்றப்படுவதாக கமல் அறிவித்தார்.

இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த அசல் கோலார், முதல்முறையாக விஜய் டிவிக்கு பேட்டி அளித்திருக்கிறார். அதில், “தனலட்சுமி போலவே அசீமும் நேரடியாக இருக்கிறார்.  திங்கள், செவ்வாய், புதன் அமைதியாக இருப்பார். வியாழன் வெள்ளி சனி அடித்துப் பறக்க விடுவார். இவ்வளவுதான் அவரைப் பற்றி சொல்ல வேண்டும் என்றால்.. விக்ரமன், தான் நினைப்பதை செய்கிறார் தனது சார்பில் இருந்து பேசுகிறார். அவர் குறித்து நான் நிறைய சொல்லக்கூடாது.

முத்து அண்ணாவை மிகவும் மிஸ் பண்ணுகிறேன். உள்ளே இருந்த கொஞ்ச நாள் ஜாலியாக இருந்தது. அவர் போன பிறகு பெரிய விஷயம் அந்த வீட்டில் மிஸ் ஆனது. அவருடைய குடும்பத்தை நினைத்து வெளியே சென்றுவிட்டார். ஆனால் அவருடைய வீட்டில் இருப்பவர்கள் அவரை மிஸ் பண்ணுகிறார்கள். தமிழ்நாட்டில் இருப்பவர்கள், அவரை நிறைய மிஸ் பண்ணினார்கள். பரவாயில்லை. முத்து அண்ணன் எங்கிருந்தாலும் ஜாலியாக இருப்பார். அவர் பிக்பாஸ் வீட்டில் இருந்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்” என குறிப்பிட்டுள்ளார்.

BIGG BOSS 6 TAMIL, BIGG BOSS TAMIL, AZEEM, ASAL KOLAR

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்