சத்தமில்லாமல் தமிழகத்தில் முதல் வெற்றியை பதிவு செய்த ஓவைசி கட்சி.. எங்கு தெரியுமா..?

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தமிழகத்தில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அசாதுதீன் ஓவைசி கட்சி ஒரு வார்டில் வெற்றி பெற்றுள்ளது.

Advertising
>
Advertising

சலூன் கடையில வேலை பார்த்துக்கிட்டே தான் ஓட்டு கேட்க போவேன்.. ஈரோடு கம்யூனிஸ்ட் வேட்பாளரின் அசத்தல் வெற்றி

தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் அடங்கிய நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் உள்ளன. இவற்றில் மொத்தம் 12 ஆயிரத்து 838 கவுன்சிலர் பதவிகள் உள்ளன. இந்த பதவிகளை நிரப்புவதற்கான தேர்தல் கடந்த 19-ம் தேதி நடைபெற்றது.

வாக்குப்பதிவு தொடங்கியது முதல் மக்கள் நீண்ட வரிசையில் நின்று தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர். பல்வேறு மாவட்டங்களில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது. ஆனால் தலைநகர் சென்னையில் மட்டும் மந்தமாகவே நடைபெற்றது. பின்னர் நேரம் செல்ல செல்ல விறுவிறுப்படைந்தது.

இந்த நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று (22.02.2022) எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இதுவரை வெளியான முடிவுகளின் அடிப்படையில் திமுக பெருவாரியான இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

இந்த சூழலில் அசாதுதீன் ஓவைசியின் மஜ்லீஸ் கட்சி தமிழகத்தில் தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது. நகர்புற உள்ளாட்சி தேர்தலில் வாணியம்பாடி நகராட்சிக்குட்பட்ட 19-வது வார்டில் மஜ்லீஸ் கட்சி சார்பில் பட்டம் சின்னத்தில் போட்டியிட்ட நபிலா வக்கீல் அஹமது வெற்றி பெற்றுள்ளார்.

53 ஆண்டுகள் அதிமுகவின் கோட்டையாக இருந்த நகராட்சியை கைப்பற்றிய திமுக.. தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்..!

ASADUDDIN OWAISI PARTY, TN LOCAL BODY ELECTION, WIN ONE WARD, அசாதுதீன் ஓவைசி கட்சி, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்