ஜெயலலிதா மரணம் தொடர்பான அறிக்கையை சமர்பித்தது ஆறுமுகசாமி ஆணையம்.. முழுவிவரம்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை செய்துவந்த ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் இன்று விசாரணை அறிக்கையை சட்டப்பேரவையில் தாக்கல் செய்திருக்கிறது.
தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 05.12.2016-ம் தேதி உயிரிழந்தார். அவருடைய மரணம் தொடர்பாகவும், அவருக்கு அளிக்கப்பட்டுவந்த சிகிச்சை தொடர்பாகவும் விசாரணை நடத்த நீதியரசர் ஆறுமுகசாமி தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையம் கடந்த 30.09.2017 ஆம் தேதி விசாரணையை துவங்கியது.
இது தொடர்பாக 151 பேரை விசாரித்த ஆணையம், இதுகுறித்த இறுதி அறிக்கையை தமிழக முதல்வர் ஸ்டாலினிடம் கடந்த ஆகஸ்டு மாதம் சமர்ப்பித்தது. இந்த அறிக்கையானது ஆங்கிலத்தில் 500 பக்கங்களும், தமிழில் 608 பக்கங்களும் கொண்டது. இந்நிலையில் இன்று விசாரணை அறிக்கையை ஆறுமுகசாமி ஆணையம் இன்று தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்திருக்கிறது.
அதில், ஜெயலலிதா உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது முதல் அவரது மரணம் வரையில் நடைபெற்ற நிகழ்வுகளையும், சம்பந்தப்பட்டவர்களையும் விசாரித்திருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஆஞ்சியோ சிகிச்சை செய்ய மருத்துவர்கள் அனுமதி கொடுத்தும் செய்யாதது ஏன்?, வெளிநாட்டுக்கு அவரை சிகிச்சைக்கு அழைத்துச் செல்லலாம் என மருத்துவர்கள் கூறிய நிலையில் கடைசிவரையில் அது நடக்காமல் போனது ஏன்? என பல்வேறு கேள்விகளை ஆணையம் எழுப்பியிருக்கிறது.
இறுதியில், இதுதொடர்பாக ஜெயலலிதாவின் தோழி சசிகலா, சிகிச்சை அளித்த மருத்துவர் சிவகுமார், அன்றைய தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், அன்றைய சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் மீது விசாரணை நடத்தவும் ஆணையம் தமிழக அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.
Also Read | "ஓவியா கூட ஒருபடம் நடிச்சாச்சா.?".. GP முத்து சொல்லிய தகவல்.. ஆகா இதுதான் கேரக்டரா..?
மற்ற செய்திகள்
ஒரு கையில கேட்ச்.. MATCH-யே மாத்துன தருணம்.. கோலியை பாராட்டி அனுஷ்கா ஷர்மா போட்ட கியூட்டான போஸ்ட்..!
தொடர்புடைய செய்திகள்