'வித்து' சாப்பிடக் கூட 'வழியில்லை...' 'அடகு வைக்க' கொண்டு வந்த 'அண்டாவுடன்...' 'ஒற்றை ஆளாக' போராட்டம் நடத்திய 'நபர் கைது...'
முகப்பு > செய்திகள் > தமிழகம்நாகர்கோவில் அருகே ஊரடங்கு உத்தரவால் வருமானம் இல்லாததால் அடகு வைக்கக் கொண்டுவந்த அண்டாவுடன் போராட்டம் நடத்தியவர் கைது செய்யப்பட்டார்.
நாடு முழுவதும் கடந்த மார்ச் 24ம் தேதி ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஏப்ரல் 14ம் தேதி வரை 21 நாட்களுக்கு இந்த ஊரடங்கு கடைப்பிடிக்கப்படும் என முதலில் அறிவிக்கப்பட்டது. பொதுமக்களும் 21 நாட்களை எப்படியோ கடத்தி விட்டனர். ஆனால் கொரோனா வைரஸ் பரவல் கட்டுக்குள் வராததால் மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு விதிக்கப்படுவதாக பிரதமர் மோடி மீண்டும் அறிவித்துள்ளார். இதனால் கையில் பணமில்லாமல் பலரும் தவித்துப் போய் உள்ளனர்.
அத்தியாவசியத் தேவைகளைக் கூட நிறைவேற்றிக் கொள்ள முடியாமல் தினக் கூலிகள், வாரம் மற்றும் மாத வருமானம் பெரும் ஊழியர்கள் போன்றவர்கள் செய்வதறியாது திகைத்துப் போய் உள்ளனர். யாரிடமாவது கடன் பெற்றாவது நிலைமையை சமாளிக்கலாம் என்றால் அதற்கும் வழிஇல்லாத வகையில் கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.
இதனால் வெறுத்துப் போன தொழிலாளி ஒருவர் அடகு வைக்க கொண்டு சென்ற அண்டாவுடன் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
நாகர்கோவில் அருகே வசித்து வரும் தவசிமுத்து என்பவர் ஊரடங்கு காரணமாக வருமானம் இல்லாததால், அடகு வைக்க அண்டாவை எடுத்துச் சென்றுள்ளார். ஆனால் அடகுக் கடை முதற்கொண்டு அனைத்துக் கடைகளும் மூடப்பட்டுள்ளதால் ஆத்திரமடைந்த அவர், அண்டாவுடன் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட ஆரம்பித்தார். இதைக் கண்ட போலீசார் அவரை கைது செய்து அழைத்துச் சென்றனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'இவரு வேற என்ன ரொம்ப டார்ச்சர் பண்றாரு டா'...'சைலன்டா வடகொரியா பாத்த வேலை'...அதிர்ந்துபோன நாடுகள்!
- ‘எனக்கு கொரோனா தொற்று இல்லை’.. ‘டெஸ்ட் ரிசல்ட்ட பாருங்க’.. ஆதாரத்துடன் வெளியிட்ட அமைச்சர்..!
- '2 உலகப் போர்களையும் வென்றுவிட்டார்!'... 99 வயதில் கெத்தாக திரும்பி வந்த முன்னாள் ராணுவ அதிகாரி!.. மெய்சிலிர்க்கும் நெகிழ்ச்சி சம்பவம்!
- ஏப்ரல் 20 முதல் இந்த ‘தொழில்கள்’ எல்லாம் இயங்கும்.. மத்திய அரசு வெளியிட்ட ‘லிஸ்ட்’.. முழு விவரம் உள்ளே..!
- 'மொத்தம் 40 நாட்கள் ஊரடங்கு ஏன்?'... 'மத்திய சுகாதாரத் துறை இணை செயலாளர் விளக்கம்'!
- 'எங்க வழி, தனி வழி'...'இந்தியர்களுக்கு பதவி மற்றும் சம்பள உயர்வு'...பிரபல நிறுவனம் கொடுத்த சர்ப்ரைஸ்!
- 7 தனிப்படைகள்... 3 மொழி போஸ்டர்!... வாட்ஸ் அப் மெசேஜ்!... விழுப்புரத்தில் மாயமான கொரோனா நோயாளி சிக்கியது எப்படி?... தமிழக போலீஸின் தரமான 'த்ரில்' சம்பவம்!
- தினமும் சுடசுட ‘பிரியாணி’.. தாய் போல தெருநாய்களுக்கு ஊட்டிவிடும் பெண்.. சென்னையில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்..!
- '30-ந் தேதி' வரை 'மதுக்கடைகள்' திறக்கப்படாது 'பொதுமக்கள்' நலனே எங்களுக்கு 'முக்கியம்'... 'அமைச்சர் தங்கமணி தகவல்...'
- இந்தியாவில் 24 மணி நேரத்தில் 38 பேர் கொரோனாவால் பலி || 6 லட்சத்தை கடந்த வைரஸ் பரவல் - அதிர்ச்சியில் உறைந்துள்ள நாடு || இந்தியாவுக்கு உலக சுகாதார நிறுவனம் பாராட்டு!